ஸ்ரீகமலாலயம்என்னும்திருவாரூர்ரதத்தின்
தத்வார்த்தவிமர்சனம்
ஸ்ரீந.சுப்ரமணியஐயர், சென்னைகுஹானநந்தமண்டலி, தலைவர்

“ஆழித்தேர்வித்தகனையான்கண்டதாரூரே“-அப்பர்சுவாமிகள்.

“ஆழித்தேர்வித்தகருந்தாமேபோலும்” –அப்பர்சுவாமிகள்,
रथस्थंशङ्करंदृष्ट्वापुनर्जन्मनविद्यते
ரத²ஸ்த²ம்ஶங்கரம்த்³ருஷ்ட்வாபுனர்ஜன்மநவித்³யதே
என்பது சாஸ்திரப் பிரமாணாமாகும். ரதத்தில் வீற்றிருக்கும் ஆனந்தஸ்வரூப பர ஶிவத்தை தரிசித்தவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது என்பது மேற்படி- பிரமாணத்தின் பொருளாகும். மறுபிறப்பு இன்மையால் அவ்வாறு ஶிவத்தைக் தரிசித்தவகளுக்கு மரணமும் கிடையாதென்று ஏற்படுகின்றது. பிறப்பும், இறப்பும் ஸாபேக்ஷகங்கள்- ஒப்பீட்டளவில் காணப்படுகின்றன. இவ்வாறு, ரதத்தில், அதிஷ்டித்து விளங்கும் ஶிவ தரிசனத்தால் பிறப்பற்ற நிலை ஸித்திக்கன்றமையால் ரதத்திற்கு ஒரு தத்வார்த்தம் இருந்தே தீரவேண்டும் என்பது பெறப்படுகின்றது. அதைப் பற்றி இங்கு சுருக்கமாய் விமர்சிப்போம்,
आनन्दंरथिनंविद्धिशरीरंरथमेवतु
ஆனந்த³ம் ரதி²னம் வித்³தி⁴ ஶரீரம் ரத²மேவ து
என்னும் கடடோபநிஷத்தின் முதல் அத்யாயம், மூன்றாவது வல்லியின், மூன்றாவது வாக்ய பிரமாணத்தின்படி சரீரம் ரதமென்றும், சரீரத்தின் ஹ்ருதய குகையில் அதிஷ்டத்து விளங்கும் பிரத்யகாத்மா ரதிகனென்றும் ஏற்படுகின்து. “ரதி²கன்” அதாவது சரீரமாகும் ரதத்தில் அதிஷ்டத்து விளங்கும் ஆத்மாவே பரஶிவ வடிவமாகும்,
तरतिशोकंआत्मवित्
தரதி ஶோகம் ஆத்மவித்
என்னும் பிரமாணத்தின்படி ஆத்ம அபின்ன ஶிவத்ருஷ்டியினால், ஜனன மரண ரூப சோகம் ஒழிகன்றது. ரதவடிவ சரீரம் வியஷ்டி, ஸமஷ்டியென இரு வகைத்து. அநேக கோடி ஜீவர்களின் வியஷ்டி சரீரங்கள் ஓன்னு சேர்ந்தது ஸமஷ்டி சரீரமென்றது கூறப்படும். பல வியஷ்டி மரங்கள் ஒன்று சேர்ந்து வனமென்று கூறப்படுது போல்;


“திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்”- சேக்கிழார்
இந்த ஸமஷ்டி சரீரம் விராட்-ஸ்வரூபியாகிய பரமேச்வரனுக்கு உரியதாகும். இந்த ஸமஷ்டி சரீரவடின விராட்-ஸ்வரூப வர்ணனை புராணங்களிலும் இதிஹாஸங்களிலும் பரக்க காணலாம். பாதாளம் முதல் ஸத்தியலோகம் வரையிலுள்ள பதினான்கு லோகங்களாகும் ஒரு பிரஹ்மாண்டத்தைப் போல் ஆயிரத்தெட்டு பிரஹ்மாண்டங்கள் இந்த விராட்-ஸ்வரூபத்தில் விளங்குகின்றன. இத்தகைய ஸர்வாண்ட ஸமஷ்டியே பரமேச்வரனது ரதமாகும். சராசரவடிவ ஸர்வ பிண்டாண்ட-பிரஹ்மாண்ட-விராட்-ஸ்வரூபத்திற்குரிய ஸர்வலக்ஷணங்களும் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீகமலாலய க்ஷேத்திரத்தின் ரதமாகும், ஆதலால் தான் “திருவாரூர் தேரழகு” என்னும் பழமொழி வழங்கப் படுகின்றது. இதை முசுகுந்த ஸஹஸ்ரநாமத்தில் காணலாம்
क्षोणी–रथवरासीनायनमः५७
महारथ–वर–स्थितायनमः५८
க்ஷோணீ-ரத²வராஸீனாய நம꞉ 57
மஹாரத²-வர-ஸ்தி²தாய நம꞉ 58
ரதத்தின்அமைப்பு

“வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்”- சேரமான் பெருமாள் நாயனார்
சக்கரங்கள், மையக்கட்டை; அச்சு, கடையாணிகள், தேரின் அடித்தட்டு, தேர் க்கால்கள், மேல் தட்டுகள், ஶிவம் அமரும் ஸிம்ஹஸனம், தேரின் மேல் பாகத்தின் பர்வாக்கள் (தட்டுகள்) விமானம், கலசம், சத்திரம், குதிரைகள், வடங்கள், ஸாரதி, துவஜங்கள் முதலியன ஒரு ரதத்திற்கு இன்றியமையாத அங்கங்களாகும். இவற்றில் ஒவ்வொரு அங்கத்தின் தத்துவத்தைப் பற்றி ஆராயின், அங்கியாரும் ரதத்தின் தத்துவம் நன்ரு விளங்கும்,
அவற்றின் விமர்சமாவது- சக்கரங்கள்- 6. இவற்றுள், உள் பாகத்தில் இரண்டும் வெளிப் பாகத்தில் நான்குமாக அமைக்கப் பெற்றுள்ளன.
चन्द्रभास्करचक्ररथायनमः५६
சந்த்³ர பா⁴ஸ்கர சக்ர ரதா²ய நம꞉ 56
என்று முசுகுந்த ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது. உள் பாகத்தில் உள்ள இரண்டு சக்ரங்கள் ஸூர்ய சந்த்ரர்களைக் குறிப்பிடுகின்றன. இவை இடா² பிங்கலைகளாகும், வெளியே சக்ரத்திலுள்ள நான்கும் மூலாதார சக்ரத்திலுள்ள நான்கு இதழ்களாகும். இடா²-பிங்கலை களாகும் உள் சக்ரங்களின் மையக் கட்டை நாடீ³சக்ரமாம் என்று பெரியோர் கூறுவர். வெளிச்சக்ரங்கள் நான்கின் மையக்கட்டைகள் இரண்டும் சிதக்னிகுண்டத்தின் ஶிவ ஶக்தி அம்சங்கள், அன்றியும் முசுகுந்த ஸஹஸ்ரநாமம்
दिव्यचक्रगणाधीशायनमः२०७
बीजचक्रपितामहायनमः२०८
बिन्दुचक्रस्थविष्णवेनमः२०९
नादचक्रमहेश्वरायनमः२१०
शक्तिचक्रस्थजीवात्मनेनमः२११
शान्तिचक्रपरमात्मनेनमः२१२
தி³வ்ய சக்ர க³ணாதீ⁴ஶாய நம꞉ 207
பீ³ஜ சக்ர பிதாமஹாய நம꞉ 208
பி³ந்து³ சக்ரஸ்த² விஷ்ணவே நம꞉ 209
நாத³ சக்ர மஹேஶ்வராய நம꞉ 210
ஶக்தி சக்ரஸ்த² ஜீவாத்மனே நம꞉ 211
ஶாந்தி சக்ர பரமாத்மனே நம꞉ 212
என்று கூறுகின்ற காரணத்தால் இந்த ரதத்திற்கு உள்ள ஆறு சக்ரங்களும் க³ணாதீ⁴ச, பிரஹ்மா, விஷ்ணு, மஹேஶ்வர, ஜீவாத்மா, பரமாத்மா முதலியவர்களைக் கொள்ளக் கிடைக்கின்றது. ஆதலால் மேற்கூறியவர்கள் திருவாரூர் ரதத்திற்கு ஆதார பூதர்களாய் இருப்பது ஸூசிப்பிக்கப் படுகின்றது.
ரதத்தின் அடிபாகம் - ஆத்ம தத்வம்
நடுப்பாகம் – வித்யா தத்வம்
மேல்பாகம் – ஶிவ சத்வம்
இவ்விஷயம்,
त्रि–तत्व–रथ–संस्थायिनेनमः६१
शिव–तत्व–विमानगायनमः६२
த்ரி-தத்வ-ரத²-ஸம்ஸ்தா²யிநே நம꞉ 61
ஶிவ-தத்வ-விமானகா³ய நம꞉ 62
என்னும் நாமால் பெறப்படுகின்றது.
ஸ்ரீ தியாகேசன் அமரும் ஸிம்ஹாஸனம் வித்யா-தத்வத்தில் உள்ளது இந்த ஸ்தானம்தான் ஹ்ருதயகுஹை दहरालयं த³ஹராலயம், இதுவே சிதாகாசமாகும். மேல் பாகமாகும் ஶிவ தத்வம்-ஶிவ, ஶக்தி, ஸதா³ஶிவ, ஈச்வர, ஶுத்³த⁴ வித்தைகளென்னும் ஐந்து பர்வா (தட்டு) க்களையும் அர்த⁴சந்த்ர, ரோதி⁴னீ, நாத³, நாதா³ந்த, ஶக்தி, வியாபிகா, ஸமாநா, உன்மனீ என்னும் எட்டு பாதங்களையும் உடைத்தாய் விளங்குன்றன,
மேல் விமானம் அல்லது ஸ்தூபி தத்வாதீத ஶிவ நிலையாகும்.
कलश கலஶம் = பரிபூர்ண-பா⁴வம்
एकछत्रं ஏகச²த்ரம் = அத்³வைத-ஶிவநிலை
தேரின் அடிப்பாகமாகும் ஆன்ம தத்துவத்திற்கும் மேல் பாகமாகிய ஶிவ தத்துவத்திற்கும் இடையில் விளங்கும் வித்யா தத்துவத்தில், ஆன்ம-ஶிவ தத்துவங்களைச் சேர்க்கும் 64 தேர் கால்கள் இருக்கின்றன. இவை அறுபத்து நான்கு கலைகளாகவும், தந்த்ரங்களாகவும் விளங்குகின்றன.
चतुषष्टिकला–स्तम्भरथारूढमहारथायनमः५९
சதுஷஷ்டி கலா-ஸ்தம்ப⁴ ரதா²ரூட⁴ மஹாரதா²ய நம꞉ 59
இந்த நடுப்பாகம் ஸகல ஆகம வடிவமாகவும், ஸகல உபநிஷத் ஸ்வரூப மாகவும், ஸ்ம்ரு’தி-புராண-இதிஹாஸரூபமாகவும் பிரகரசிக்கின்றது. இந்த நடுப்பாகக் தில் நான்கு தசைகளிலும் நான்கு துவாரங்கள் தோரணங்களோடு பிரகாசிக்கின்றன. இவை நான்கு வேதங்களின் முடிவாய் விளங்கும் மஹாவாக்யங்களாம். ரதத்தின் முன் பக்கத்தில் நான்கு குதிரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இவை நான்கும் நான்கு வேதங்கள், இக்கருத்துக்கள் முசுகுந்த ஸஹஸ்ரநாமத்தில் காணலாம்.

अश्वायितचतुर्वेदायनमः६४
அஶ்வாயித-சதுர்வேதா³ய நம꞉ 64
“அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்”–அப்பர்சுவாமிகள்
தேரை இயக்குவிக்க (இழுக்க) உபயோகப்படுவன ஆறு வடங்கள், இவை (शिक्षा) சிக்ஷை- தெளிவான உச்சரிப்பு, (कल्प) கல்பம்-சடங்கு முறைகள், (व्याकरण) வியாகரணம்- இலக்கணம், (निरुक्त) நிருக்தம்- சொற்பிறப்பியல், (छन्दस्) சந்தஸ்-மந்திரம் கூறும் முறை , (ज्योतिष) ஜ்யோதிஷம்- வானவியலான சோதிடம் என்னும் ஆறு வேத-அங்கங்களைக் குறிப்பிடுகின்றன.
பதினாறு கோணங்களிலும் விளங்கும் துவஜங்கள்,கொடிகள்= சரியை, கிரியை, யோகம், ஞானம், ஜீவகாருண்யம், பாச-வைராக்கியம், சக்தி நிபாதம், தத்துவ-ஞானம், விவேகம், ஸந்நியாஸம், சமாதி-ஷட்க-ஸம்பத்தி, முமுக்ஷுத்வம், சிரவணம், மநநம், நிதித்யாஸனம், ஸமாதிகளை உணர்துகின்றன. இத்தகைய பிரஹ்மாண்ட ரத வடிவத்தை ஓட்டும் ஸாரதி ஹிரண்யகர்ப்பராவர். இவர் ஸமஷ்டி-ஸூக்ஷ்ம உபாதியோடு கூடியவர்.
சராசராத்மகமாய் விளங்கும் இப்பிரஹ்மாண்டவடிவ ரதத்தில் முப்பத்து மூன்று கோடி தேவதா சரீரங்களிலும், கந்தர்வ-யக்ஷ-கின்னர-கிம்புருஷாதிகளிலும், ரிஷி-முனிவர், ஸித்தர், சாரணர், நாகர் முதலிய சரீரங்களிலும், பசு-பக்ஷிகள், கிருமி-கீடங்கள் முதலிய வற்றிலும், ஸ்தாவர-ஜங்கமாதிகளிலும் விளங்கும் ஈச்வர சேதனம் அந்தர்யாமி அல்லது ஸூத்ராத்மா என்று சாஸ்தரங்கள் கூறுகின்றன. ஆதலின் இந்த ரதமானது பரமாத்மா வாகும் ஸ்ரீதியாகேசரது, ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண சரீரங்களாய் விளங்கி விராட்- ஹிரண் யகர்ப்ப-ஸூத்ராத்ம ஸ்வரூபங்களை உணர்த்துகின்றது. இதில் அதிஷ்டித்து விளங்கும் ஸ்ரீதியாகேசன் பரஶிவமே என்பதில் யாதோரு ஆக்ஷேபணையுமின்று.


“முப்புரம் எரியுண நகைசெய்தார்” -திருஞானசம்பந்தர்
முப்புரம் எரி செய்த அச்சிவனுரை ரதம் – திருப்புகழ், அருணகிரியார்
திரிபுர ஸம்ஹார காலத்தில் பரஶிவத்திற்கு ஏற்பட்ட ரதம் இத்தகையதே ஆகும். வியஷ்டி, ஜீவர்களது ஸ்தூல, ஸுக்ஷ்ம, காரண சரீரங்களில் முறையே தோன்றுகின்ற ஆணவம், மாயிகம், கார்மிகம் என்னும் மும்மலங்களே திரிபுர அஸுரர்களாவர் என்று பெரியோர் கூறுவர். அவர்களை ஓழிக்கப் பரஶிவம் இத்தகைய விராட் ஸ்வரூப-பிரஹ்மாண்ட-வடிவ-ரதத்தில் அதிஷ்டித்து விளங்கி, தனது ஞான நேத்திரத்தைத் திறந்து புன்முறுவல் செய்து ஒழித்தார் என்பது பிரஸித்தமல்லவா ? இந்த ஞான நேத்ரம்தான் ருத்ராக்ஷம் என்பது.
இதுகாறும் மேலே கூறப்பட்ட பல ரஹஸ்யதத்துவங்களை உணர்ந்தும் ரதத்தைத் தரிசித்து அதில் விளங்கும் பரஶிவ வடிவத்தை அபரோக்ஷமாய் உணர்ந்தவர்களுக்கு ஜனன மரணகளின்றிய ஶிவாநந்த பெருவாழ்வு எய்துவது வெள்ளிடை மலையாம்.
ஶிவம்.
மேற்க்கூறிய தேவார திருமுறை பாடல்களின் விரிவு
அ௫ளியவர்: திருநாவுக்கரசர்
திருமுறை: நான்காம்-திருமுறை பண்:சீகாமரம்
நாடு: சோழநாடு;காவிரித்தென்கரை-தலம்:ஆரூர்
போழொத்த வெண்மதியஞ்
சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான்
வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை
ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை
நான்கண்ட தாரூரே. 7
அ௫ளியவர்: திருநாவுக்கரசர்
திருமுறை: நான்காம்-திருமுறை பண்:திருத்தாண்டகம்
நாடு:சோழநாடு; காவிரி வடகரை-தலம்: இன்னம்பர்
கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வருந் தாமே போலும்
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. 2
அ௫ளியவர்: சேரமான் பெருமாள் நாயனார்
திருமுறை: பதினொன்றாம்-திருமுறை
நாடு:வடநாடு-தலம்:கயிலாயம் (நொடித்தான்மலை) சிறப்பு: கலிவெண்பா
மடந்தை
கொங்கையும் வாண்முகமு
மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய
சேவடியாள் – ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன
குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய
அல்குலாள் – ஊழித்
திருமதியம் மற்றொன்றாம்
என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந்
தாற்போல் – பெருகொளிய
முத்தாரங் கண்டத்
தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்
பெருகி -வித்தகத்தால்
கள்ளுங் கடாமுங்
கலவையுங் கைபோந்திட்
டுள்ளும் புறமுஞ்
செறிவமைத்துத் – தெள்ளொளிய
அ௫ளியவர்: சேக்கிழார்
திருமுறை: பன்னிரண்டாம்-திருமுறை- திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)
இரண்டாம் காண்டம்-கடல் சூழ்ந்த சருக்கம்-செருத்துணை நாயனார் புராணம்
ஆன அன்பர் திருவாரூர்
ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு
நலம் சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள்
செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார்
தொண்டு பொலியக் குலவு நாள். 3
அ௫ளியவர்: திருநாவுக்கரசர்
திருமுறை: ஆறாம்-திருமுறை பண்: திருத்தாண்டகம் (தனி திருத்தாண்டகம்)
நாடு:பொது
அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே. 5
அ௫ளியவர்: திருஞானசம்பந்தர்
திருமுறை: மூன்றாம்-திருமுறை பண்: கொல்லி
நாடு:சோழநாடு; காவிரி வடகரை-தலம்: மழபாடி
விண்ணிலார் இமையவர்
மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம்
எரியுண நகைசெய்தார்
கண்ணினாற் காமனைக்
கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம்
அணிமழ பாடியே. 7
उपनिषत्– वाक्याणि
कठोपनिषत्-प्रथमाध्याये -तृतीयवल्ली
आत्मानँ रथिनं विद्धि शरीरँ रथमेव तु ।बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥ ३॥
इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।
मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःद्वितीयः खण्डः
स यो ह वै तत् परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति नास्याब्रह्मवित् कुले भवति।
तरति शोकं तरति पाप्मानं गुहाग्रन्थिभ्यो विमुक्तोऽमृतो भवति ॥ १





