முதலாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி- சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி-திருமார்பில்- பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேலே அழகியமணவாள பதக்கம் -ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம்; வைரக்கல் ரங்கூன் அட்டிகை; சந்திர ஹாரம்; சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள்; நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை; எட்டு வட முத்துமாலை; வைரக்கல் அபயஹஸ்தம்; அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சைபட்டு உடுத்தி சேவை சாத்திக்கிறார்

இரண்டாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் முத்துபாண்டியன் கொண்டை சாற்றி; அதில் சந்திர-சூர்ய வில்லை; கலிங்கத்துராய்; சிகப்புகல் நெற்றி பட்டை சாற்றி; மகர-கர்ணபத்ரம் அணிந்து
திருமார்பில்-கண்டாபரணம்; சந்திர ஹாரம்; ஸ்ரீமகாலட்சுமி பதக்கம்; இரு மார்பிலும் புஜ கீர்த்தி; நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை; வரிசையாக பெரிய சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள்; எட்டுவட முத்துமாலை; சிகப்புக்கல் அபயஹஸ்தம்; அதில் கோலக்கிளி எடுத்து சாற்றி; வெண்பட்டு அணிந்து
பின் சேவையில் கண்டபேரண்ட பக்ஷி பதக்கம் அணிந்து சேவை சாத்திக்கிறார்

மூன்றாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருமொழிக்காக அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி; அதில் சந்திர-சூர்யவில்லை; சந்திரஹாரம்; கலிங்கத்துராய்; சிகப்புகல் நெற்றிபட்டை சாற்றி;
திருமார்பில்- கண்டபேரண்ட பக்ஷி பதக்கம்; அதன் மேல் அழகிய மணவாளன் பதக்கம்-ஸ்ரீரங்கநாச்சியார் பதக்கம்; வைரக்கல் ரங்கூன் அட்டிகை; நெல்லிக்காய் மாலை; தங்கபூண் பவழமாலை; எட்டு வட முத்துமாலை; தங்ககாசு மாலை; மகரி; வரிசையாக வெள்ளை-சிகப்பு என்று அடுக்கு பதக்கங்கள்; சிகப்புக்கல் அபயஹஸ்தம்; ரத்னாங்கி; கடி-ஹஸ்தம் (இடது திருக்கை); சிகப்புல் இழைத்த திருவடி; அதில் சதங்கை சாற்றி; தாமரை நிறம் பட்டுடுத்தி
பின் சேவையாக பூஜ கீர்த்தி மற்றும் பங்குனி உத்திர பதக்கம் அணிந்து சேவை சாதிக்கிறார்

நான்காம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி; அதில் சிறிய நெற்றிசுட்டி சாற்றி; மகர கர்ணபத்ரம் அணிந்து; வைர அபயஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் -பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீமகாலட்சுமி பதக்கம்; மகரி; கஜ லட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்; தங்கபூண் பவழமாலை; இரு வட முத்துமாலை; மரகத கிளி பெரியஹாரம் மஞ்சள் வண்ண-பீதாம்பர பட்டு அணிந்து
பின் சேவையாக- சிகப்புக்கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்திக்கிறார்

ஐந்தாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி அதில் புஜ கீர்த்தி இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை; முல்லை பூ-சரம் சுற்றி; வைர அபய ஹஸ்தம் சாற்றி,அதில் தங்க கோலக்கிளி எடுத்து,கீழே தொங்கல் பதக்கம் ஆட,
திருமார்பில்-ஸ்ரீரங்கவிமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம்; அதன் கீழே சிகப்புகல் சூர்ய-பதக்கம்; அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; எட்டு வட முத்துமாலை; “அரைச்சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து
பின் சேவையாக -சிகப்புக்கல் பதக்கம்; காசு மாலை; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்.

ஆறாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி தொடக்கமாக “நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க திருநாராயணன் முத்துக்கொண்டை சாற்றி, அதில் கலிங்கத் துராய் அணிந்து; சிகப்புக்கல் அபய ஹஸ்தம் சாற்றி; மகர கர்ணபத்ரம் திருக்காதில் அணிந்து,கண்டாபரணம்,
திருமார்பில் -சிகப்புக்கல் சூர்ய பதக்கம்; அதன் மேல்-ஸ்ரீமகாலட்சுமி பதக்கம்; சந்திர ஹாரம்; தேர்ந்தெடுத்து-வரிசையாக சிகப்புக்கல் அடுக்கு பதக்கங்கள் மிக மிக நேர்த்தியாக அணிந்து தங்கப்பூண் பவழமாலை, இரட்டை வட முத்துமாலை, மரகத பச்சை கிளி மாலை அணிந்து, வெண்பட்டு அணிந்து அதன் மேல் மஞ்சள் நிற “கபா” என்னும் வஸ்திரம் அணிந்து
பின் சேவையாக-பங்குனி உத்திர பதக்கம்-புஜ கீர்த்தி அணிந்து பக்தர்களுக்கு சேவை சாத்திக்கிறார்

ஏழாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருவாலி திவ்யதேச பாசுரம் செவிமடுக்க, ஆண்டாள் (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; வைரக்கல் அபய ஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் இருபுறமும் முதன்முறையாக மகர கர்ண-பத்ரங்கங்களை நேர்த்தியாக அணிந்து; மகரி; ஸ்ரீமகாலட்சுமி பதக்கம் நடுவில் சாற்றி; சிகப்புகல் வைத்த வெள்ளை பூ பதக்கம் அணிந்து; வரிசையாக வைரக்கல் மகர கண்டிகைகள் திருமேனி நிறைந்து சாற்றி; தங்கப்பூண் பவழமாலை; இரட்டை வட முத்துமாலை அணிந்து;
பின் சேவையாக–நீல கல் வைத்த வெள்ளை பக்ஷி பதக்கம்-புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்

எட்டாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி,அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து, இரத்தின அபயஹஸ்தம் கண்டாபரணம்,
திருமார்பில் சிகப்புக்கல் சூர்ய பதக்கம் அணிந்து, இருபுறமும் ஸ்ரீமகாலட்சுமி பதக்கம் -அழகிய மணவாளன் பதக்கம்; சிகப்புக்கல் மகர கண்டிகைகள், சிகப்புக்கல் அடுக்கு பதக்கங்கள், காசு மாலை, இரட்டைவட முத்துமாலை, மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து,
பின் சேவையாக-கண்டபேரண்ட பக்ஷி, புஜகீர்த்தி, மற்றும் தாயத்து சரங்கள் சூடி தங்க பல்லக்கில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஒன்பதாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் முத்துக் குறி கேட்க, முத்து திருநாரணன் கொண்டை அணிந்து முத்து அபய-ஹஸ்தம், கடி-ஹஸ்தம் சாற்றி முத்து அங்கி அணிந்து, ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி; சந்திரஹாரம்; சுட்டி பதக்கம்; இரட்டைவட முத்துமாலை; முத்து திருவடி முத்து கர்ணபத்ரம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து தங்கபல்லக்கில் எழுந்தருளி, உள் பிரகாரத்தில் வலம்வந்து அர்ச்சுன-மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில், பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

பத்தாம்திருநாள்
மோகினி அலங்காரத்தில் புறப்பாடு

தொன்மையான பரமபதசோபனம் [துணியில் வரையப் பட்டது]

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் பழமையான, தொன்மையான விளையாட்டு. இந்த விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.
பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12-இடம் உண்மையையும், 51-இடம் நம்பிக்கை யையும், 57-இடம் பெருந்தன்மையையும், 79-இடம் ஞானத்தையும், 87-இடம் வைரக்யம்-ஸன்யாஸத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.
41-கட்டத்தில் கீழ்ப்படியாமை, 44-கட்டம் அகந்தை, 49-கட்டம் ஈனம், 52-இடம் களவு, திருட்டு, 58-இடம் பொய், புரட்டு, 62-மதுபானம் அருந்துதல், 69-இடம் கடன், 73-இடம் கொலை, 84-கோபம், வெஞ்சினம், வஞ்சம், 92-கர்வம், 97-பொறாமை, 99-காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம், அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கஷ்டங்களை கொடுக்கும்.
இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக் கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க ”தாயம்” அதாவது ”ஒன்று” விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப்பட்டது.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே.
1. முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டு விடும்.
2. இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
3. இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4. இன்னும் இரண்டே கட்டம்! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5. பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்” என்று கீழே இங்கே பற்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டு விடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி
பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று ஸ்வாமியைக் கும்பிட்டோம் போனோம் வந்தோம் ராத்திரி எலாம் விழித்திருந்தோம் இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். [இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன.
மனதின் குணங்கள் 13.
- ராகம்
- துவேஷம்
- காமம்
- குரோதம்
- உலோபம்
- மோகம்
- மதம்
- மச்ச்சரம்
- ஈரிஷை
- அசூயை
- டம்பம்
- தர்பம்
- அஹங்காரம்
குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்.
- சகுனம்
- ஸ்தோத்திரம்
- தியானம்
- யாகம்
- மெளனம்
- பக்தி
- சித்தி
- சிரத்தை
- ஞானம்
- வைராக்கியம்
இந்த 10 குணங்களையும் அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும் உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம். பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம்.
நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.
நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.
1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று
2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று
3. இப்படியே இழந்து இழந்து இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
பரமபதம் அடைவது என்றால்
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்
4.அதாவது இந்த உடலை விட்டு [வெளியிலே] விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்கு உகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.
பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம்.
ஓம் நமோ நாராயணாய.

வைகுண்ட வாசல் திறப்பு
நம்பெருமாள்வைகுந்தஏகாதசிபெருவிழாஇராப்பத்து
முதலாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் இரத்தினங்கி அலங்காரத்தில்

இரண்டாம்திருநாள்
இன்று திருவாய்மொழித் திருநாள். ஸ்ரீநம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி; அதில் கலிங்கத் துராய், சூர்ய–சந்திர வில்லை; சிகப்புகல் நெற்றிபட்டை; பின்புறம் சின்ன தொங்கல் பதக்கம்; பின் கொண்டையில் சிகப்பு கல் பட்டை சரம் அணிந்து; திருமேனியில் ஸ்ரீரங்கநாச்சியார் பதக்கம்; இருபுறமும் புஜகீர்த்தி; வைர ஒட்டியாணம்; மகரி; சிகப்புக்கல் வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள் வரிசையாக சாற்றி; வைர அபய ஹஸ்தம்; தொங்கல் சாற்றி காசு மாலை; இரட்டை வட முத்துமாலை அணிந்து; சந்தனவர்ண பட்டு உடுத்தி;
பின் சேவையாக – வெள்ளை கல்புட்டாபூர் பதக்கம்; சிகப்பு கல் ரங்கூன்அட்டிகை; தாயத்து சரங்கள் அணிந்து சேவைசாத்திக்கிறார்;

மூன்றாம்திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் முத்து கோணக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சிகப்புகல் பட்டை சரம் அணிந்து, திருமார்பில் பங்குனி உத்திரபதக்கம், அதன் மேல் ஸ்ரீரங்கநாச்சியார் பதக்கம், அழகிய மணவாளன் பதக்கம், சிகப்புகல் சூர்யபதக்கம் தொடங்கி வரிசையாக சிகப்புகல் அடுக்கு பதக்கங்கள், சின்னக்கல் ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, தங்கபூண் பவழமாலை,8 வட முத்து மாலை, கிளி பச்சை வர்ண பட்டு உடுத்தி,
பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்,புஜ கீர்த்தி, தாயத்து சரங்கள் அணிந்து சேவைசாத்திக்கிறார்.

நான்காம்திருநாள்

ஐந்தாம்திருநாள்

ஆறாம்திருநாள்

ஶ்ரீரங்கவிமான பதக்கம்

ஏழாம்திருநாள்

திருக் கைத்தல சேவை

எட்டாம்திருநாள்வேடுபறி

ஒன்பதாம்திருநாள்

பத்தாம் திருநாள் தீர்த்தவாரி

நம்மாழ்வார் மோட்சம்

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவு