Practical Guides

Mahatripurasundari

ஸ்ரீத்ரிபுரஸுந்தரி வழிபாடு

ஸ்ரீவித்யா உபாஸனாமார்க்கம்‌ என்ற தேவி வழிபாட்டு வழியில்‌, அன்னை த்ரிபுரஸுந்தரி உபாஸனத்திற்கு முத்ய அங்கமான ஸ்ரீமஹா கணபதி-ஸ்ரீமஹாசியாமளை, ஸ்ரீமஹாவாராஹி தேவதை களின்‌ வழிபாடு, சென்ற மூன்று கட்டுரைகளில்‌ விளக்கப்பட்டது. மஹா வாராஹி வழிபாட்டின்‌ மூலம்‌ ஒருவன்‌ அடையும்‌ வெற்றி விஶ்வாத்ம உணர்வு வடிவான வாழ்வு என்று முன்னர்‌ விளக்கினோம். ஆனால்‌ இந்த விஶ்வாத்ம உணர்வு வடிவான வாழ்வும்‌ உபாஸகனது இறுதி யான குறிக்கோள்‌ அல்ல. பின்னர், அவ்விஶ்வாத்ம உணர்வை யும்‌ விழுங்கிய பேருணர்வு (Transcendental consciousness) வடிவாக வாழ வேண்டிய அடுத்தபடி நிலையும்‌ உள்ளது. ஆனால்‌ இதுவும்‌ முடிவான நிலை அல்ல. தானே தானாகத்‌ தன்னிலே தன்‌ தனிப்‌ பெருமையிலே, அப்பெருமை வடிவாகவே வாழும்‌ ஶிவ ரூபமான வாழ்வே உண்மை யான வாழ்வாகும். இந்நிலையே பரம தத்துவமும்‌ ஆகும். இந்நிலையே ஸஹஜ ஸமாதி நிஷ்டா வாழ்வு எனக்‌ கூறப்படுவது, மனிதன்‌ ஶிவமாக வாழும்‌ வாழ்வு அன்றோ இவ்வாழ்வு! இவ்வாழ்வு இவணே இப்பொழுதே (here and now) நம்மிடத்துப்‌ பொலியக்‌ கூடியதேயாம். ஏனெனில்‌, இவ்வடிவான வாழ்வே நமது யாவரது இயல்பான தன்மை ஆகும்‌, ஊனுடல்‌ தாங்கி, முக்கரணங்களிலும்‌ அவ்வவற்றுக்குரிய தொழில்கள்‌ நடந்து கொண்டிருக்கும்‌ பொழுதே, உடல்‌-புலன்‌கள்‌-பிராணன்கள்‌–மனம்‌-புத்தி-தூக்க நிலையில்‌ வந்து சூழும்‌ இருள்‌ ஆகிய யாவற்றுக்கும்‌ இயல்பிலேயே வேறானதாய்‌, அவ்‌யாவற்றையும்‌ விளக்கும்‌ தூய ஒளி வடிவினதாய்‌ இப்பொழுதே இங்கேயே நம்‌ கண்‌ ஒளிரும்‌ ஆத்ம சைதன்யமே நம்‌ யாவரின்‌ உண்மையான தன்மை யாம்‌. இவ்‌-ஆத்ம சைதன்ய வடிவாக, இயல்பாக (Naturally), அனாயாஸ மாக (Spontaneously) யாதொரு முயற்சிக்கும்‌ தேவை இன்றி (Effortlessly) ஸஹஜ ஸித்தமாய்‌, வாழுவதே வாழ்வு. மற்றையதெல்லாம்‌ பிறத்தலும்‌ இறத்தலும் மாறி மாறி வரும் ஓட்டமே ஆகும்; சுழற்சியே ஆகும்‌; மயக்கமே ஆகும்‌, இவ் வரிய பெரிய தூய வாழ்வே ஸ்ரீவித்யா உபாஸ னத்தின்‌ முடிவான குறிக் கோள்‌ எனில்‌, ஸ்ரீவித்யா உபாஸனத்தின்‌ பெருமையையும்‌, நுட்பத்தை யும்‌, எழிலையும்‌ என்னென் போம்‌! ஸ்ரீவித்யா உபாஸனத் தைப்‌ பேய்‌ பிசாசுகளை‌ ஓட்டுவதற்கான வெறும்‌ ஒரு மந்த்ர வித்யையாகக்‌ கொள்வது எத்துனைப் புன்மை யானது! காமதேனுவைப்‌ பெற்றவன்‌ அதனை உழவுத்‌ தொழிலில்‌ பூட்டுவது போல்‌ அன்றோ உள்ளது, ஸ்ரீவித்யை யைப்‌ பெற்றவன்‌ அதனைப்‌ புல்லிய பயன்களுக்காகப்‌ பூட்டுவது ஶிவவாழ்வு பொலிப வனிடம்‌ உலகியற்‌பயன்கள்‌ யாவும்‌, கடலின்‌ பரப்பில்‌ சிற்றலைகள்‌ அடங்குவது போல்‌, அடங்கியவையே அன்றோ! பேரின்பக்‌ கடல்‌ வடிவாகத்‌ திளைப்பதற்கான பெம்மை யுடைய நிலையில்‌ வாழ வகை தெரிந்தவன்‌, அவ்வகையையே புல்லிய சிற்றின்பங்களான சிற்றலை இன்‌பங்களின்‌ நிறைவேற்ற‌த்துக்காகப் பயன் படுத்துவானோ! அப்படிப்‌ பயன்‌ படுத்துபவன்‌ அறிவு டையவனாகக்‌ கருதப்படுதல்‌ தகுமோ ? ஆக இடைக் காலத்தில்‌ ஸ்ரீவித்யையைப்‌ பற்றி ஏற்பட்ட குழப்பங்கள்‌ யாவும்‌ பொன்றுவதாக; ஸ்ரீவித்யையை உண்மையான பேரின்பப்‌ பயன்‌ கருதி நாடும்‌ ஊக்கம்‌ எங்கணும்‌ மல்குவதாக !
உடல்‌ போன்றவைகளில்‌ தோய்ந்து வாழும்‌ தோய்வுணர்வு (Sullied consciousness) வாழ்வின்‌ புன்மையை நன்கு தெளிவாக ஒரு தலையாக அறிந்தவன்‌ தனது மனத்துக்கண்ணும்‌ தாக்குறாத ஆந்தரானுவித்த ஸமாதியில்‌ வெற்றி காண்கிறான்‌. அத்தகைய வெற்றி கண்டவன்‌ மறு படியும்‌ மனச்சேறு மண்டிய உணர்வு வடிவனாக வாழ முடியுமோ ! आन्तानुरुविद्ध समाधिஆந்தரானுவித்த ஸமாதியில் ‌உறுதியான, இயல்பான வெற்றி கண்டவன்‌ बाह्यानुरुविद्ध समाधि பாஹ்யானுவித்த ஸமாதியாம்‌ விஶ்வாத்ம உணர்வினன் ஆகும்‌ பொழுது மனத்தின்‌ மூவேறு நிலை களாம்‌. நனவு-கனவு-தூக்கங்களில்‌ தான்‌ தோயாது வாழும் வாழ்வி னால் தான் பெருமிதம்‌ அடைவானோ! உலக மனத்தின‌து (Cosmic mind) நிலைகளான ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரங்களென்ற நனவு-கனவு-தூக்கங்க‌ளுக்குமே தான்‌ சாட்சியாக (Witness) இருப்பவன்‌ என்ற அநுபவம்‌ கைகூடிய அளவில்‌, சிறிய தனிப்பட்ட மனத்தை வேறு படுத்திக்‌ காண்பவன்‌ தான்‌, என்ற பெருமிதம்‌ இருத்தல் கூடும்? அவ் வாறே விஶ்வாத்ம உணர்வையும் கடந்த, பேருணர்வு வாழ்வில் வாழு பவன் “விஶ்வாத்ம மனத்தையும் தனக்கு வேறாக காணும் தான் அவ் விஶ்வாத்ம மனத்தின் சாட்சியாக (கரியாக) உள்ளவன்” என்ற பெருமிதத்திற்கு இடங்கொடுக்க இயலுமோ? ஆந்தரானுவித்த, பாஹ்யானுவித்த ஸமாதி நிலைகள் நன்கு கைகூடியவனுக்கு வெகு எளிதில்‌ “தூய வெறும்‌ அஹந்தா” (Pure mere ego) கைகூடி விடுகிறது. இந் நிலையில்‌, காணப்படுகிற பொருள்‌ யாவுமே, தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தில்‌ விலயம்‌ (Merger) அடைந்ததாய்‌ கனீபூதமான (Dense) வெறும்‌ அஹந்தா மாத்ரமாக விளங்குகிறது. காணப்படுகிற பொருள் கள்‌ யாவும்‌ முற்றிலுமே புறக்கணிக்கப்பட்டதாய்‌, தனது பேருணர்வு மட்டுமாக (Mere Transcendental Consciousness) விளங்கும்‌ நிலையாம்‌ இந்நிலை. புறம்‌, அகம்‌ என்ற இருநிலைகள்‌ புலப்படாததோடு மட்டு மின்றி, புறம்‌ பூராவும்‌ தனது அகத்தினுள்‌ அடங்கியது தான்‌ என்ற விஶ்வாத்ம உணர்வு மட்டுமின்‌றி, பெருங்கடலில்‌ விழுந்த கடுகு போல்‌ “அஹம்‌” என்ற பெருங்கடலில்‌ ஸகல நாம-ரூப வடிவ-புற உலகு பூராவும்‌ முற்றிலும்‌ ஒடுங்கிய நிலை யாம்‌ இப்பேருணர்வு நிலை. ஆனால்‌ இந்நிலை வெறும்‌ அக உணர்வு மட்டுமாகப்‌ (Mere Subjective consciousness) பொலிகிறது. புறப்‌ பொருளை ப்‌ பற்றிய உணர்வு இன்மையால்‌, இந்நிலை அக உணர்வு நிலை (Subjective Consciousness) என்றும் உண்மையில்‌ கூறப்படுவதற்கில்லை. புறப் பிரபஞ்சம்‌ (Objective Universe) முற்றிலும்‌ ஒடுங்கிவிட்ட பொழுது அக உணர்வு (Subjective Consciousness) என்று அந்நிலையைக் கூறுதல்‌ பொருந்தாது அல்லவா? புறம்‌ (Object) என்ற ஒன்றைக்‌ காரணமாகக்‌ கொண்டுதானே அகம்‌ (Subject) என்ற கூற்று பொருந்தும்‌, புறம்‌ இல்லாதபொழுது அகம்‌ (Subject‌) என்பது தான்‌ என்ற உணர்வாக எவ்வாறு‌ இருக்கும்‌! ஆகவே இந்நிலை வெறும்‌ அஹம்‌ (ஸஹஜ அஹந்தா) என்று கூறப்படுகிறது. இந்நிலையே வீரநிலை என்று கூறப் படுகிறது. இந்நிலையில்‌ வாழ்பவனே பராஹந்தா வாழ்வினன்‌; மஹாத்ரிபுரஸுந்த³ரீ வடிவினனாக வாழ்பவன்‌, பராஹந்தா வாழ்வினன்‌ தான்‌ உண்மை யான ஸ்ரீவித்யா உபாஸகன்‌, அவனே வீரன்‌. அம்பிகையும்‌ वीराराध्या வீராராத்⁴யா என்று வசின்யாதி–வாக் தேவதை களால்‌, இப்பொருள்‌ கொண்டே அழைக்கப் படுகிறாள்‌. பராபஞ்சாசிகா- என்ற நூலில்‌ இந்நிலை வீரனது நிலை என்று வெகு அழகாக வர்ணிக்கப்படுகிறது.
अहं प्रलयं कुर्वन् इदमः प्रतियोगिनः।
पराक्रमपरो भुङ्क्ते स्वात्मानमशिवापहम्।।
அஹம் ப்ரலயம் குர்வன் இத³ம꞉ ப்ரதியோகி³ன꞉
பராக்ரமபரோ பு⁴ங்க்தே ஸ்வாத்மானமஶிவாபஹம்।
பராஹந்தா என்றாலும்‌ வெறும்‌ அஹந்தா என்றாலும்‌ ஒக்கும்‌, இங்கு விளங்கும்‌ அஹந்தா (Ego consciousness) ஜீவனை நாம ரூபத்தளைகளில்‌ பூட்டுவதில்லை; ஆனால்‌ ஜீவனிடம்‌ ஜீவ-பாவம்‌ ஒழிந்த ஶிவ-பாவம்‌ புலப்படுவதை விளம்பரப்‌ படுத்துகிறது; “நீ ஶிவனே” என்று கடவுண் மையை வலியுறுத்துகிறது, இத்நிலையில்‌ வாழுபவன் “நான்‌ ஶிவன்” என்று இயல்பான உணர்வுடன்‌ வாழுகிறான்‌. உடலளவில்‌ எத்‌தொழி லைச்‌ செய்யும்படி ஊழ்வினையால்‌ வந்தாலும்‌, உள்ளத்-தளவில்‌ எக்கருத்துக்களையும்‌ நிலைகளையும் (அவஸ்தை; விருத்தி) ‌ ஊழ்வி னையின்‌ வலியால்‌ பெற்றாலும்‌, எத்தொழிலிலும்‌ எந்த அவஸ்தை-விருத்திகளிலும்‌ தான்‌ தோய்வுறாததோடு, அத்தகைய தொழில்க ளிலும்‌ அவஸ்தை-விருத்திகளிலும்‌ பரம உதாஸீனனாய்‌ (Colossally indifferent) , தன்னுடைய ஶிவ உணர்விலேயே இயல்பாக வாழுகிறான்‌. இதுவே மஹாத்ரிபுரஸுந்த³ரீ வடிவாக வாழும்‌ வாழ்வாகும்‌. இன்ன தென்று சொல்லவொண்ணாத, இன்னதென்று கருதவும்‌ ஒண்ணாத ஒருவகையான பேரின்பச்‌ சுவையில்‌ இடையருது பொருந்துகிறான்‌ மஹாத்ரிபுரஸுந்த³ரீ வடிவினனாய்‌ வாழப்‌ பெற்ற வன்‌, இங்குத்‌ துய்க்கப்படும்‌ பேரின்பச்‌ சுவையை என்னென்பது ! இந்நிலை ஸாமான்யர் களுக்குப்‌ புரியும்படி சொற்‌களால் படம் பிடித்து காட்ட கூடியதோ? உலகியல் இன்பங்களின் வகைகளே ஒருவன் தான் அனுபவித்தாலன்றி, இத்தைகையவை என்று இன்னொருவனால் எடுத்தியம்புதற்கு அரிதாயின், சொற்கருத்துகளுக்கு அப்பாலான பேரின்பச்சுவை எவ்வாறு இயம்புதல் இயலும்? உலகியலுக்குரிய துன்பங்கள்‌ கருவி கரணங்களைத் தாக்கும் பொழுதும், பேரின்பச் சுவையின் திளைப்புக்கு ஊறு தினையளவும் வருவதில்லை. உலகியலுக்குறிய இன்பத்தில் மனம் திளைக்கயில் இப் பேரின்பம் கூடுதலுறுவதில்லை. உலகியலுக்குறிய துன்பத்தில் மனம் துளங்கு கையில் இப்பேரின்பம் குறைவும் உறுவதில்லை. हानि वृद्धि विवर्जिता ஹானி வ்ருʼத்³தி⁴ விவர்ஜிதா–“குறைதலும் கூடுதலும் ஒழிந்த பெம்மையள்” என்று வசின்யாதி வாக்தேவதைகள் அம்பிகையை வர்ணிப்பது எத்துணை ஆழமான பொருளுடையது ! ஒருவன்‌ தன்‌னுடைய“ஶிவ” பாவத்தை அறிந்து கொள்வதற்குரிய பேருரை (வியாக்யான) வடிவினளாய்‌ இருப்பதாலேயே அம்பிகைக்கு “विमर्श रूपिणी விமர்ஶருபிணி’” என்று பெயர்‌ கொடுக்கப் படுகிறது. ”शिवोऽहं ஶிவோஹம்‌” என்ற பேருணர்வு வடிவமே அம்பிகையின்‌ ‘உண்மை யான வடிவ மாகும்‌. அத்வைத நூல்களில் அம்பிகையை ”ब्रह्मविद्या स्वरूपिणी ப்³ரஹ்ம வித்³யா ரூபிணீ; अखण्डाकार वृत्तिरूपिणी அக2ண்டா³ கார விருத்தி ரூபிணீ” என்றெல்லாம்‌. அழைப்பதும்‌ இக்கருத்துக் கொண்டதேயாம். “पराकामकला பராகாமகலா” என்று தந்த்ர சாஸ்திர ங்களில் கூறப்படும்‌ அம்பிகையின்‌ நாமும்‌ இப்‌பொருளுடையதே. “சித்சக்தி” என்பதற்கும்‌ இதே பொருளாம்‌. ஆக “ப்3ரஹ்ம வித்3யா, அக2ண்டா3கார விருத்தி, விமர்ஶ சக்தி, சித்சக்தி, பராகாமகலா, ஶிவோஹம்‌ பாவனை ஆகிய தொடர்கள் ஒரு பொருட்‌கிளவிகளாம்‌ என அறிதல்‌ வேண்டும்‌. மஹாத்ரிபுரசுந்தரீ வடிவினனாக வாழ்பவ னுக்கு தனது ஶிவபாவம்‌ (Shiva-hood; Godhead‌) தடையறாது எப்பொழு தும்‌ விளங்குவதால்‌, அம்பிகைக்கு “ஶிவகாமீ” என்ற பெயரும்‌ வெகு பொருத்தமுடைய தாகிறது. “ஶிவகாமீ” என்பதற்கு ஶிவகாமனது பத்னி என்று பொருளாகும். ஆனால் இப்பொருளில்‌ அம்பிகை விளங்கு வது ஸஹஜ ஸமாதி நிஷ்டனிடமே; அதாவது தானே ஶிவமாக வாழ்பவனிடமே “நான் ஶிவம்” என்ற பேருணர்வு நிலையில் வாழுப வனிடம் அம்பிகை “ஶிவகாமினீ” என்ற வடிவில் விளங்குகின் றாள். அதாவது “ஶிவனையே காதலிப்பவளாய்“ பொலிகிறாள். ஶிவகாமினீ நிலையில் அம்பிகை ப்ரதானமாய் இருக்கிறாள். ஶிவகாமி நிலையில் அப்பனே ப்ரதானமாய் இருக்கிறான். பேருணர்வு (Transcendental consciousness) வடிவினளான அம்பிகையும் “ஶிவனிடம்” முற்றிலும் ஒடுங்கியவளாய் “ஶிவம்” என்ற வாழ்வே பொலிகிறது. இன்னிலை வெறும் உணர்வு (Mere consciousness) வடிவம்; வெறும் இன்ப (Mere bliss) வடிவம்; வெறும் வாழ்வு (Mere existence) வடிவம்; வெறும் உணர்வு என்பது சின்மாத்ரமான நிலை; வெறும் இன்ப என்பது ஆனந்த மாத்ரமான நிலை; வெறும் வாழ்வு என்பது ஸன்மாத்ரமான நிலை; “நான் ஸச்சிதாந்த ஶிவமாய் இருப்பவன்“ என்ற பேருணர்வையும் கடந்த-ஆனால் அந்தப் பேருணர்வு இழக்கப் படாத-தானே, தானாக உள்ள நிலையே ஶிவ வாழ்வாம். (Even in the transcendental consciousness is transcended; but it is not lost; that is the existence as mere Shiva). ஸ்ரீவித்யா உபாஸனத்தின் முடிவான குறிக்கோள் ஶிவ வாழ்வே.
ஸ்ரீவித்யா உபாஸனை என்பதையும்‌ சாக்தோபாஸனை என்பதையும்‌ பல‌ர் குழப்பிக்‌ கொள்கின்றனர்‌. இக்குழப்பம்‌ வெகு காலமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால்‌ சாக்தோ பாஸனைக்கும்‌ ஸ்ரீவித்யோபா ஸனைக்கும்‌ மடுவுக்கும்‌ மலைக்கும்‌ உள்ள வேற்றுமையாம்‌. சாக்தோ பாஸகனுக்குக்‌ குறிக்கோள்‌ சக்தியின்‌ நிறைவேற்றமே. அந்தச்‌ சக்தியும்‌ ஜடசக்தியின்‌ பாற்பட்டதே. ஸ்ரீவித்யா உபாஸனுக்குக்‌ குறிக்கோள்‌ ஶிவ வாழ்வு ஆகும்‌. ஶிவ வாழ்வில்‌ சக்தியின்‌ கூறு முற்றி லும்‌ விழுங்கப்பட்டு விடுகிறது. ஸ்ரீவித்யோ பாஸகன்‌ “சித்‌ சக்தி” வடிவில்‌ மஹாத்ரிபுரஸுந்தரியைத்‌ தன்னிடம்‌ நிறைவேற்றிக்‌ கொண் டாலும்‌, அந்த “சித்‌சக்தி”யே அவனுக்குக்‌ குறிக்‌கோள்‌ அல்ல; தான்‌ ஶிவ வாழ்வில்‌ இயல்பாகப்‌ பொலிவதற்கு “சித்‌சக்தி” ஸ்ரீவித்யோபாஸகனி டம்‌ துணை நிற்கிறது; அவ்வளவே; சித்‌சக்தியின்‌ நிறை வேற்றம்‌ ஶிவ வாழ்வில்‌ முடிகையில்‌ சித்‌சக்தியும்‌ சவம் சுடு தடிபோல்‌ ஆகி விடுகிறான்‌. ஶிவத்திடம்‌ ஒடுங்கி விடுகிறாள்‌. சாக்தன்‌-சக்தியின்‌ ஆற்றலைத்‌ தம்பட்ட மடிப்பவன்‌; ஸ்ரீவித்யா உபாஸகன்‌ சக்தியின்‌ உதவி கொண்டு ஶிவ வாழ்வு மலரப்பெற்று, சக்தியையும்‌ தனக்குத்‌ தனித்துக்‌ காணாதவன்‌ , சித்சக்தியையே ஸ்ரீவித்யா உபாஸகன்‌ கடந்து விடுகிறான்‌ எனில்‌, அவனுக்கு ஜடசக்தியிடம்‌ பிரமிப்பு உண்டா குமோ! ஆகவே ஸ்ரீவித்யா உபாஸகனும்‌ சாக்தனும்‌ வேறு வேறு பண்‌ பாட்டினர்‌ என்று தெளிவாக அறிதல்‌ வேண்டும்‌. இந்த நுண்ணிய வேற்றுமையை அறிந்தவர்‌ வெகு வெகு அருகியே உள்ளனர்‌. சைவம்‌, சாக்தம்‌, வைணவம்‌, கெளமாரம்‌ ஸெளரம்‌, காணபதம்‌ என்ற ஆறு மதங்களுள்‌ ஒன்று சாக்தம்‌ என்று அறிதல் வேண்டும்‌. ஆனால்‌ ஸ்ரீவித்யை என்பது இவ்வாறு மதங்களிலும்‌ ஊடுறுவிப்‌ பொலிவதோடு இவ்வாறு மதங்களையும்‌ கடந்தும்‌ நிற்பதாகும்‌. மதம்‌ என்பது கொள்கை. சத்யம்‌ என்பது உண்மை. சாக்தம்‌ என்பது அறுவகைக்‌ கொள்கைகளுள்‌, அக்கொள்கைகளுக்கு இணங்கிய வழிபாடுகளுள்‌ ஒன்று ஆகும்‌. ஸ்ரீவித்யை ஸத்ய விஜயத்தை விளக்குவது. ஸ்ரீவித்யை ஒரு கொள்கை அல்ல என்று அறிதல்‌ வேண்டும்‌. ஆகவே ஒரு கொள்கைக்கு இணங்கிய ஒரு வழிபாட்டு வகை என்று மட்டும்‌ ஸ்ரீவித்யையைக்‌ கருதுதல்‌ கூடாது. உலகிலுள்ள எல்லா வழிபாட்டு வகைகளும்‌ ஸ்ரீவித்யைக்குள்‌ அடங்கும்‌. ஸ்ரீவித்யை எந்த ஒரு வழிபாட்டு வகையிலும்‌ சிறைப் படுவதில்லை. கணபதி மந்த்ரத்தை வழிபடுபவன்‌ காணபதனாக இருக்கலாம்; கணபதி என்ற தேவதையையே சகல தெய்வங்களுக்கும்‌ மேம்பட்ட தெய்வமாகக்‌ கொள்ளலாம்‌; ஆனால்‌ அதே கணபதி மந்த்ரத்தை “அஹம் ப்ரஹ்மாஸ்மி” அல்லது “ஶிவோஹம்‌” என்ற பொருளில்‌ வழிபடுபவன்‌ வெறும்‌ காணபதன்‌ மட்டும்‌ அல்ல; பின்‌ சித்சக்தி உபாஸகன்‌ ஆகிறான்‌, அதாவது ஸ்ரீவித்யா உபாஸகன் ஆகிறான். அதாவது “அஹங்கிரஹோபாஸனம்‌”‘ என்ற வகையில்‌ கணபதி வழிபாடு இருக்குமானால்‌ அதுவும்‌ ஸ்ரீவித்யா உபாஸனை ஆகிறது. இங்ஙனமே ஆதித்ய உபாஸனை, கெளமார உபாஸனை, விஷ்ணு உபாஸனை. ஶிவ உபாஸனை, சக்தி உபாஸனை ஆகியவைகளும்‌, அஹங்கிர ஹோபாஸனையாகப்‌ பொலிகையில்‌ ஸ்ரீவித்யையின்‌ ஸ்வரூபமுடை யதாகின்றன. ஆகவே எந்த தேவதையை ஒருவன்‌ வழிபட்டாலும்‌, எந்த மந்த்ரத்தை வழிபட்டாலும்‌, வழிபாடு “சித்சக்தி” வழிபாடாயின்‌ அது ஸ்ரீவித்யா உபாஸனம்‌ ஆகிறது. அம்பிகையையே ஒருவன்‌ வழிபட் டாலும்‌, பஞ்சதஶாக்ஷரீ போன்ற மந்த்ரங்களை வழிபட்டாலும்‌ “ஶிவோஹம்‌” என்ற பொருளில்‌ அம்பிகையையோ அவளது மந்த்ர த்தையோ வழிபடவில்லையெனில்‌, அப்பொழுது பஞ்சதஶாக்ஷரீ, ஷேடா³ஶீ போன்ற உபாஸனங்களும்‌ ஸ்ரீவித்யா உபாஸனை யின்‌ பாற்படாது; பின்னர்‌, சாக்த வழிபாடே ஆகும்‌. இதுகாறும்‌ கூறி யதினின்றும்‌ நாம்‌ அறிய வேண்டியது இஃதே. ஸ்ரீவித்யா உபாஸனை அகில மதங்களையும்‌ விழுங்குவது (All religions of the world pale when Comprehended with SriVidyopasana). சாக்தோபாஸனை எல்லை உடையது (Shaktopasana is limited in its scope). கடவுண்மையைத்‌ தன்னிடம்‌ இயல்பாக நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ வகையில்‌, अहङ्करहोपासना அஹங்க்ரஹோபாஸனா ரூபமாக ஒருவன்‌ சிலுவையை யோ (Cross), பிறையையோ (Crescent Moon) அல்லது தீ (Fire) முதலானதை யோ வழிபட்டாலும்‌, அத்தகையவன்‌ ஸ்ரீவித்யா உபாஸகன்‌ ஆகிறான்.‌ ஆகவே ஸ்ரீவித்யா உபாஸனை எல்லா மதங்களையும்‌ விழுங்கிப்‌ பொலியும்‌ பெற்றியது எனக்‌ கூர்ந்து உணருதல்‌ வேண்டும்‌, சாக்தனு க்கு மதம்‌ முக்யம்‌; சாக்தன்‌ மற்ற மதங்களை மறுக்கிறான்‌; வெறுக்கி றான்; ஒதுக்கிறான்‌. ஸ்ரீவித்யா உபாஸகனுக்கு எம்மதமும்‌ ஸம்மதம் எல்லா மதங்களுக்கும்‌ அடிப்படையான உண்மையே (Substratum truth) அவனது குறிக்கோள்‌; எல்லா மதங்களுக்கும்‌ அப்பாற்பட்ட உண்மை யே (Truth absolute) அவனது குறிக்கோள்‌, ஸ்ரீவித்யா உபாஸகன்‌ மதங் களை மறுப்பவனோ, வெறுப்பவனோ, ஒறுப்பவனோ இல்லை (It is neither irreligious nor anti-religious) ஆனால்‌ அவன்‌ மதங்கடந்த (Trans-religious) உண்மையில்‌ (Truth) வாழும்‌ பெற்றியில்‌ விழைவும்‌ உழைப்பும்‌ உடையவன்‌, மறைநூல்‌ வல்லுநர்கள்‌ என்று தங்களைப்‌ பறைசாற்றிக்‌ கொள்பவர்களே சாக்தனையும்‌, ஸ்ரீவித்யா உபாஸகனையும்‌ வேறுபடு த்‌தி அறிய இயலாது திகைக்கும் பொழுது, பாமரர்கள்‌ இவ்வேற்றுமை அறியாது இருப்பதில் வருந்துவத ற்கொன்றும்‌ இல்லை. நாம்‌ இக் கட்டுரைத்‌ தொடரில்‌ ஸ்ரீவித்யோ பாஸனை என்ற முறையிலேயே தேவீ வழிபாட்டைப்‌ பற்றி எழுதி வருகிறோம்‌. சாக்தோபாஸனை என்ற குறுகிய மனப்பான்மையோடு அன்று என்று ஒரு தலையாக அறிதல்‌ வேண்டும்.‌ ஆகவே அடியில்‌ விரிக்கப்படும்‌ விஷயங்களை சாக்தோ பாஸனை முறையிலோ அல்ல ஸ்ரீவித்யா உபாஸனை முறையிலோ அவரவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ பண்பாட்டுக்கிணங்க கொள்ளட்டும்‌. ஆனால்‌ நமது நோக்கம்‌ ஸ்ரீவித்யா உபாஸனையே, இதைப்‌ பற்றி விரிவை மறுபடியும்‌ மேலே காண்போம்‌. பொதுவாகக்‌ கருதப்படும்‌ மஹாத்ரிபுரஸுந்தரி, பஞ்சதஶாக்ஷரீ, ஷோட³ஶீ, ஸ்ரீசக்ரம்‌ ஆகியவை பற்றிய வழிபாட்டு முறைகளை இப்பொழுது கவனிப்போம்‌. இவ்‌வழி பாட்டு முறைகள்‌ சாக்தம்‌, ஸ்ரீவித்யை ஆகி இரண்டுக்கும்‌ இடங்‌கொடுப்பவைகள்‌ என அறியவும்‌.
மஹாத்ரிபுரஸுந்தரியின்‌ மந்த்ரம்‌ பஞ்சதஶாக்ஷரீ, ஷோட³ஶீ என்று இரு வகைகளில் விளங்குகிறது. பஞ்சதஶாக்ஷரீ “௧”காரத்தில்‌ தொடங் குவது, “ஹ”காரத்தி தொடங்குவது, “ஸ”காரத்தில்‌ தொடங்குவது என்று மூன்று வகைகளில்‌ ப்ரஸித்த மாயுள்ளது.‌ முதல்‌ வகைக்கு “காதி³வித்³யா कादिविद्या” என்றும்‌; இரண்டாவது வகைக்கு “ஹாதி³ வித்³யா हादिविद्या” என்றும்‌, மூன்றாவது வகைக்கு “ஸாதி³வித்³ யா सादिविद्या” என்றும்‌ பெயர்களாம். முறையே இந்த மூன்று வித்யைகளா வன
(1) कएईलह्रीं हसकहलह्रीं सकलह्रीं
(2) हसकलह्रीं हसकहलह्रीं सकलह्रीं
(3) सएईलह्रीं सहकहलह्रीं सकलह्रीं
(1) கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம்
(2) ஹஸகலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம்
(3) ஸஏஈலஹ்ரீம் ஸஹகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம்
முதல்‌ வித்யை காமனால்‌ வழிபடப்‌ பட்டது; இரண்டாவது லோபாமுத்ரா வித்யை எனப்படும். மூன்றாவது நந்தி ஆராதித்தது, ஸூர்யன், ப்ரஹ்மதேவன் போன்றவர்கள் வழிபட்ட பஞ்சதஶாக்ஷரீகளும் உண்டு.
(4) हसकलह्रीं सहकलह्रीं सकहलह्रीं
(5) कएईलह्रीं हकहलह्रीं हसकलह्रीं
(4) ஹஸகலஹ்ரீம் ஸஹகலஹ்ரீம் ஸகஹலஹ்ரீம்
(5) கஏஈலஹ்ரீம் ஹகஹலஹ்ரீம் ஹஸகலஹ்ரீம்
நான்காவது ஸூர்யன்‌ வழிபட்டது; ஐந்தாவது ப்ரஹ்மதேவன்‌ வழி பட்டது. இப்படி எத்தனையோ வேற்றுமைகள்‌ பஞ்சதஶாக்ஷரியில்‌ உள்ளன. ஆனால்‌ உலகில்‌ இப்பொழுது உபதேச க்ரமத்தில்‌ வழக்கிலுள் ளவைகள்‌ முதலாவதும்‌, இரண்டாவதுமே ஆகும்‌. முதலாவது தனிச்‌ சிறப்புடையதாகக்‌ கூறப்படுகிறது. காதி, ஹாதி, ஸாதி என்ற மூன்று தன்மைகளும்‌ இவ்வொரு மந்த்ரத்திற்கே பொருந்துவதாகக்‌ கூறுவர்‌. பஞ்சதஶாக்ஷரீ மந்த்ரம்‌ மூன்று பகுதிகள்‌ கொண்டதாக உள்ளது. இம் ‌மூன்று பகுதிகளுக்கும்‌ மூன்று கூடங்கள்‌ (कूटाः) என்று பெயர்‌ தேவி சாஸ்திரங்‌களில்‌ கூறப்படுகிறது. காதிவித்யையில்‌ உள்ள மூன்று கூடங்களையும்‌ கவனிக்கவும்‌, முதல்‌ கூடம்‌ ஐந்து எழுத்துக்கள்‌ கொண் டதாய்‌ ’க’காரத்தில்‌ தொடங்குகிறது. ஆகவே “காதி வித்யை” யின்‌ தன்மை உள்ளது. இரண்டாவது கூடம்‌ ’ஹ’காரத்தில்‌ தொடங்குகிறது; ஆகவே “ஹாதி வித்யை”யின்‌ தன்மையுள்ளது. மூன்றாவது கூடம்‌ ’ஸ’காரத்தில்‌ தொடங்குகிறது; ஆகவே “ஸாதி வித்யை”யின்‌ தன்மை யுள்ளது. இவ்வாறு காமனால்‌ உபாஸிக்கப்பட்ட பஞ்சதஶாக்ஷரீ காதி-ஹாதி-ஸாதி ஆகிய மூன்று வித்யைகளின்‌ தன்மையைத்‌ தன்னகத் தே கொண்டதால்‌ தனிச்‌ சிறப்புடையதாகக்‌ கூறப்படுகிறது, வழக்கி லும்‌ மிகுதியாக உள்ளது இந்த வித்யையே. இந்த “காதி” பஞ்சதஶா க்ஷரியின்‌ பதினைத்து எழுத்துக்களும்‌ த்ரிசதி நாமங்களுக்குத தொடக்கமாக இருப்பதும்‌ இந்த வித்யையின்‌ பெருமையை விளம்பரப்‌ படுத் துகிறது. மேலும்‌ மஹாஷோட³ஶீயின்‌ பூர்ணமான ரூபத்தில்‌ இடம்‌ பெற்றிருப்பதும்‌ இந்த பஞ்சதஶாக்ஷரியே ஆகும்‌. மஹா ஷோட³ஶீயைப்‌ பற்றி விரிவாக மேலே அறிவோம்‌. இந்தப்‌ பஞ்ச தஶாக்ஷரிக்கே ஸ்ரீபாஸ்கரராயர்‌ தனது வரிவஸ்யா ரஹஸ்யம்‌ என்ற நூலில்‌ பதினை ந்து பொருள்கள்‌ காட்டியுள்ளார்‌ என்பதும்‌ உற்று நோக்கத்‌ தக்கதாம்‌. பஞ்சதஶாக்ஷரீ மந்த்ரமே உமா மஹேஶ்வர ஸ்வரூபமானது எனில்‌ காதி பஞ்சதஶாக்ஷரியும்‌ அத்தகையது என்று கூறவா வேண்டும்‌? மந்த்ரத்திலுள்ள மூன்று கூடங்‌களுக்கும்‌ முறையே வாக்பவகூடம்‌, காமராஜ கூடம்‌, சக்தி கூடம்‌ என்ற பெயர்களும்‌ உண்டு. மூன்று கூடங் களிலும்‌ ஒவ்வொரு “क க”காரம்‌ இருப்பதையும்‌, நடுக்‌ கூடத்‌ தில்‌ இரண்டு “ ह ஹ”காரங்கள்‌ இருப்பதையும்‌ கவனிக்க. இம் மூன்று “க”காரங்களும்‌, இரண்டு “ஹ”காரங்களும்‌ ‘ஶிவன’து பாக மாகும்‌. ஆக ஐந்து எழுத்துக்கள்‌ மஹேச்வரனின்‌ பாகம்‌, மூன்று கூடங் களிலும்‌ இறுதியில்‌ உளள “ह्रींङ्कार ஹரீங்காரங்கள்‌” மூன்றும்‌ உமை-மஹேஶ்வரர்‌ ஆகிய இருவர்க ளுக்கும்‌ உரியன. எஞ்சியுள்ள ஏழு எழுத்துக்களும்‌ அம்பிகைக்கு மட்டும்‌ உரியன. அதாவது வாக்பவ கூட த்திலுள்ள ‘ए ஏ’,’ई ஈ’,‘ल ல’ என்ற மூன்று எழுத்துக்களும்‌, காமராஜ கூட த்திலுள்ள ‘स ஸ’,‘ल ல’ என்ற இரண்டு எழுத்துக்களும்‌, சக்தி கூடத்திலு ள்ள ‘स ஸ’,‘ल ல’ என்ற இரண்டு எழுத்துக்களும்‌ அம்பிகைக்கு மட்டும் உரியன. அதாவது (3+2+2=7) ஏழு எழுத்துக்கள் அம்பிகைக்கு உரிய னவாகும்‌; இவ்வாறு பஞ்சதஶாக்ஷரீ வித்யை உமா-மஹேஶ்வர ஸ்வரூபமுடையது என்று தெரிந்து கொண்டு ஜபம்‌ செய்பவனுக்கே இந்த மந்த்ரத்தில்‌ ஸித்³தி⁴ கிடைப்பதாக சாஸ்திரங்கள்‌ கூறுகின்‌றன. மேலும்‌ மந்த்ரத்திலுள்ள எழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய கால அளவு, மாத்திரையளவு போன்றவைகளையும்‌, பஞ்சதஶாக்ஷரீக்கு ள்ள பதினைந்து வகையான பொருள்களையும்‌ தெரிந்து ஜபிப்பவனுக்கே‌ சடுதியில்‌ ஸித்³தி⁴யேற்படுகிறது. வரிவஸ்யா ரஹஸ்யத்திலிருந்து இவை யாவற்றையும்‌ அறிந்து கொள்ளலாம்‌. பண்டைய நூல்களிலுள்ள இவ்விஷயங்களையெல்லாம்‌ தொகுத்தது ஸ்ரீபாஸ்கரராயர்‌ வரி வஸ்யா ரஹஸ்யத்தில்‌ கொடுத்துள்ளார்‌. ஸன்‌யாஸிகளைத்‌ தவிர மற்றவர்கள்‌ பஞ்சதஶாக்ஷரீ வித்யையை, சுத்த-பஞ்சதஶாக்ஷரீயாக ஜபிக்காமல்‌, ஸௌபாக்ய-வித்யாரூபமாக ஜபிப்பதே மரபு என அறிதல்‌ வேண்டும்‌. இம்மரபு அறியாமல்‌ ஜபிப்பவர்கள்‌ விபரீதமான பலனை அடைவது கண்கூடு. அதாவது, உலகியலுக்குரிய பாக்யங் களில்‌ ஹானியை அடைவது ப்ரத்யக்ஷம்‌. ஸௌபாக்ய வித்யா ரூப மாக ஜபிப்பவர்களுக்கு உலகியல்‌ போகங்களுடன்‌ பரபோகம்‌ என்ற மோக்ஷசுகமும்‌ ஒன்றற்‌கொன்று முரணின்றி விளங்குவதும்‌ கண் கூடாம்‌, ஸெளபாக்ய வித்யையின்‌ வடிவம் அடியிற்‌ கண்டவாறு ஆகும்‌:
ऐं कएईलह्रीं क्लीं हसकहलह्रीं सौः सकलह्रीं
ஐம் கஏஈலஹ்ரீம் க்லீம் ஹஸகஹலஹ்ரீம் ஸௌ꞉ ஸகலஹ்ரீம்
மூன்று கூடங்களுக்கும் தொடக்கத்தில் ஐம் க்லீம் ஸௌ: என்ற மூன்று பீஜாக்ஷரங்களை சேந்ததே ஸௌபாக்ய வித்யையாம். இம்முன்று பீஜங்களும் சேர்ந்தது பாலா த்ரிபுரஸுந்த³ரீ
ऐं क्लीं सौः
ஐம் க்லீம் ஸௌ꞉
மந்த்ரம்‌ ஆகும்‌. பாலாத்ரிபுரஸுந்தரி பீஜங்கள்‌ சேரும் பொழுது பஞ்சதஶாக்ஷரீ வெகு வெகு ஸெளம்யமாகிறது; தன்‌ முழு ஆற்றலிலும்‌ குறைவற்றதாகிறது. ஸெளபாக்ய வித்யா ரூபம்‌ “காதி பஞ்சதஶா க்ஷரீ”க்கு மட்டுமே ஏற்பட்டது என அறியவும்‌. ஆகஜே நிர்ப்பயமாக ஜபிக்கத் தகுந்தது. காதி பஞ்சதஶாக்ஷரீயின்‌ ஸெளபாக்ய-வித்யா வடிவமே ஆகும்‌. விரிவான ஸெளபாக்ய வித்யையின்‌ ஸ்தானத்தில்‌ முதலில்‌ ஸ்ரீபாலாத்ரிபுரஸுந்தரி மந்த்ரம்‌ உபதேசிக்கப் படுவதும்‌ வழக்கிலிருக்கிறது. அப்பொழுது பாலையை ஆறு எழுத்துக்களில்‌ வழிபட வேண்டும்‌. அதாவது
ऐं क्लीं सौः सौः क्लीं ऐं
ஐம் க்லீம் ஸௌ꞉ ஸௌ꞉ க்லீம் ஐம்
தனி மூன்று எழுத்துக்களாக பாலையை வழிபடுதல்‌ கூடாது என்பது மரபு. பாலை, பைரவி மந்த்ரங்களுள்‌ ஒன்றாக வழிபடப்படுகையில்‌ மூன்று எழுத்துக்களாக வழிப்படப்பட லாம். அத்தகைய வழிபாட்டில்‌:
ह्स्रैं ह्स्क्ल्रीं ह्स्रौः
ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ꞉
போன்ற வடிவங்களில்‌ பைரவியாக வழிபடும்‌ முறையை அறிதல்‌ வேண்டும்‌. பாலைக்கு 32 வடிவங்கள்‌ உள்ளன என்பர்‌ ஆன்றோர்‌.
ऐं क्लीं सौः बालायै नमः
ஐம் க்லீம் ஸௌ꞉ பா³லாயை நம꞉
என்ற வடிவம்‌ தேவீ ரஹஸ்யம்‌ என்ற நூலில்‌ கூறப் பட்டுள்ளது. பாலா மந்த்ரத்தின்‌ முன்றெழுத்துக்களைக்‌ கொண்டே பதினெண்‌ ஸித்தர்கள்‌ அரிய பெரிய உலகியல்‌ ஸித்³தி⁴யையும்‌, அதே ஸமயத்தில்‌ ஆத்ம நிஷ்டையையும்‌ பெற்று விளங்கினர்‌ என்பத ஜகத்ப்ரஸித்தம்‌, பாலை யை மட்டும வழிபடுபவர்களுக்கு ஏற்கனவே நாம்‌ கூறிய ஸ்ரீமஹா கணபதி மந்த்ரம்‌ மட்டும்‌ உபதேசக்ரமத்தில்‌ உண்டு. ஸ்ரீமஹா ச்யாமளா, ஸ்ரீமஹாவாராஹீ ஆகிய மந்த்ரங்கள்‌ கிடையாவென அறிதல்‌ வேண்டும்‌. ஸ்ரீபாலா மந்த்ரம்‌ “த்ரைலோக்ய வசகாரிணி” என்று மந்த்ர சாஸ்த்ரங்க ளில்‌ கூறப்படுகிறது. நிச்சய ஞானமுடைய வனுக்கு பாலா மந்த்ரமே போதும்‌. ஆயினும்‌ எல்லோருக்கும்‌ அத்த கைய த்ருட நிச்சயம்‌ ஏற்படு வதில்லை, ஆகவே அத்தகையவர்கள்‌ பஞ்சதஶாக்ஷரீயை ஸெளபாக்ய வித்யா ரூபத்தில்‌ வழிபடுகின்றனர்‌. ஸெளபாக்ய வித்யையும்‌ பாலை யினாலேயே தனிச்‌ சிறப்புடையது என அறிய வேண்டும்‌. தேவியின்‌ ஷோட³ஶீ மந்த்ரம்‌ பற்றியும்‌ இப்பொழுது கவனிப்‌பாம்‌, ஷோட³ஶீ- லகுஷோட³ஶீ, மஹாஷோட³ஶீ என இரு வகைப்‌ பட்டது, லகு ஷோட³ஶீயில்‌ பஞ்சதஶாக்ஷரீயின் இறுதியில்‌ “ஸ்ரீம்” என்ற லக்ஷ்மீ பீஜம்‌ சேர்ந்து பதினாறு எழுத்து ஆகிறது.
कएईलह्रीं हसकहलह्रीं सकलह्रींश्रीं
கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம்ஶ்ரீம்
மஹாஷோட³ஶீயில்‌ வாக்பவ, காமராஜ சக்தி கூடங்கள்‌ மூன்றும்‌ மூன்று எழுத்துக்களாகக்‌ கணக்கிடப் பட்டு, வேறு பதின்‌மூன்று பீஜங்கள்‌ சேர்ந்து பதினாறு எழுத்துக்கள்‌ ஆகின்றன. காதி பஞ்ச தஶாக்ஷரீயைக்‌ கொண்டதாகவே மஹாஷோட³ஶீ உள்ளது. வேறு பஞ்சதஶாக்ஷரீகள்‌ இங்கு இடம்‌ பெறவில்லை. மஹாஷோட³ஶீயின்‌ வடிவமாவது :-
श्रीं ह्रीं क्लीं ऐं सौः ॐ ह्रीं श्रीं कएईलह्रीं हसकहलह्रीं सकलह्रीं सौः ऐं क्लीं ह्रीं श्रीं
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉ ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம் ஸௌ꞉ ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம்
மஹாஷோட³ஶீயில்‌ இது பூர்ணமான வடிவம்‌, அதனால்‌ பூர்ணரூபா ஷோட³ஶீ எனப்படுகிறது. காதி பஞ்சதஶாக்ஷரீ இவ்விடத்தில்‌ சுத்தமான ரூபத்தில்‌ வருவதால்‌ இம்மந்த்ரம்‌ நெறியுடைய துறவி களால்‌ அன்றி மற்றவர்களால்‌ எளிதில்‌ பரிபாலிக்கச்‌ கூடியது அல்ல, யாவருக்கும்‌ நிர்ப்பயமாக ஏற்றுக்கொள்ளக்‌ கூடிய வடிவம்‌ பீஜருபா ஷோட³ஶீயே ஆகும்‌, இவ்வடிவத்தில்‌ காதி பஞ்சதஶாக்ஷரீ மூன்று கூடங்களுக்குப்‌ பதில் பாலா மந்த்ரத்தின்‌ முன்று பீஜங்கள்‌ இடம்‌ பெறுகின்றன.
श्रीं ह्रीं क्लीं ऐं सौः ॐ ह्रीं श्रीं ऐं क्लीं सौः सौः ऐं क्लीं ह्रीं श्रीं
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉ ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌ꞉ ஸௌ꞉ ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம்
பீஜரூப-ஷோட³ஶீயில்‌ சரியாகப்‌ பதினாறு எழுத்துக்களே அமைந்துள் ளன, பீஜரூப ஷோட³ஶீ மிகமிக ஆற்றலுடைய, நிர்பபயமாக வழிபடக் கூடிய மந்த்ர ஸம்ராஜ்ஞீ என அறியவும்‌. இந்த மந்த்ரத்தில்‌

श्रीं ह्रीं क्लीं ऐं सौः
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉
ஆகிய ஐந்து எழுத்துக்களும்‌ முன்று முறை வந்திருக்கின்‌றன. (5 X 3 =15) பிரணவம்‌ (ஓம்‌) ஒரு முறை வருகிறத. ஆக பதினாறு எழுத்துக்கள்‌, பீஜா க்ஷரங்களுக்குள்ளேயே மிகச்‌ சிறந்தனவாக மந்த்ர சாஸ்ரங்களில்‌ கூறப்பட்டுள்ள ஐந்தும்‌ இம்மந்த்ரத்தில்‌ மூன்று முறை வருவது வெகு விசேஷமாகும்‌, இந்த ஜந்து பீஜங்களுக்கும்‌ பஞ்சப்ரணவங்கள்‌ என்று பெயர்‌ உண்டு. ஐந்தும்‌ விமர்ஶப்ரணவங்கள்‌ எனப்படும்‌. (ஓம்‌) என்பது ப்ரகாஶப்ரணவம்‌, பூர்ண ஷோட³ஶீயில்‌ ஆறு முறை ஹ்ரீங்காரம்‌ வருவது சிறப்பாகும்‌. ஆயினும்‌ காதிவித்யை சுத்தமாக அப்படியே வருவது யாவரும்‌ எளிதில்‌ நிர்ப்பயமாக ஈடுபடக்கூடியதல்ல என்பதை மறந்து விடக்கூடாது. லக்ஷ்மீ பீஜத்தில்‌ श्रीं ஶ்ரீம் தொடங்கும்‌ மஹா ஷோட³ஶீயைப்‌ போல்‌, ஹ்ரீங்காரத்திலும் ह्रीं ஹ்ரீம்; ப்ரணவத்திலும்‌ ॐ ஓம்; காமராஜ பீஜத்திலும் क्लीं க்லீம்; வாக்பவ பீஜத்திலும்‌ ऐं ஐம்; பரா பீஜத்திலும்‌ सौः ஸௌ꞉ தொடங்கும்‌ மஹா ஷோட³ஶீகளும்‌ உண்டு. விரிவுகளையெல்லாம்‌ நேரில்‌ குருமுகமாகவே அறிய வேண்டும்‌.
லக்ஷ்மி பீஜத்தில்‌ தொடங்குவது-ரமாதி ஷோட³ஶீ;
श्रीं ह्रीं क्लीं ऐं सौः -ॐ ह्रीं श्रीं-ऐं क्लीं सौः -सौः ऐं क्लीं ह्रीं श्रीं-रमादि षोडशी
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉ -ஓம் ஹ்ரீம் ஶ்ரீம்-ஐம் க்லீம் ஸௌ꞉ -ஸௌ꞉ ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம்-ரமாதி³ ஷோட³ஶீ
ப்ரணவத்தில்‌ தொடங்குவது- தாராதி ஷோட³ஶீ
ॐ क्लीं ह्रीं श्रीं-ऐं क्लीं सौः -श्रीं ह्रीं क्लीं-स्त्रीं ऐं क्रौं क्रीं श्रीं हुं तारादि षोडशी
ஓம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம்-ஐம் க்லீம் ஸௌ꞉ -ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்-ஸ்த்ரீம் ஐம் க்ரௌம் க்ரீம் ஶ்ரீம் ஹும் தாராதி³ ஷோட³ஶீ
காமராஜ பீஜத்தில்‌ தொடங்குவது-காமாதி ஷோட³ஶீ ;
क्लीं ह्रीं श्रीं ऐं सौः -ॐ ह्रीं श्रीं-ऐं क्लीं सौः -श्रीं ह्रीं क्लीं ऐं सौः- कामादि षोडशी
க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் ஸௌ꞉ -ஓம் ஹ்ரீம் ஶ்ரீம்-ஐம் க்லீம் ஸௌ꞉ -ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉- காமாதி³ ஷோட³ஶீ
வாக்பவத்தில்‌ தொடங்குவது–வாகாதி ஷோட³ஶீ ;
ऐं ह्रीं श्रीं क्लीं सौः -ऐं क्लीं सौः -सौःक्लीं ऐं-सौःक्लीं श्रीं ह्रीं ऐं- वागादि षोडशी
ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஸௌ꞉ -ஐம் க்லீம் ஸௌ꞉ -ஸௌ꞉க்லீம் ஐம்-ஸௌ꞉க்லீம் ஶ்ரீம் ஹ்ரீம் ஐம்- வாகா³தி³ ஷோட³ஶீ
ஹ்ரீங்காரத்தில்‌ தொடங்குவது மாயாதி ஷோட³ஶீ;
ह्रीं ह्सौः ॐ ऐं ह्रीं श्रीं-ऐं क्लीं सौः -स्त्रीं क्रों ऐं ह्रीं हूं हूं श्रीं-मायादि षोडशी
ஹ்ரீம் ஹ்ஸௌ꞉ ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்-ஐம் க்லீம் ஸௌ꞉ -ஸ்த்ரீம் க்ரோம் ஐம் ஹ்ரீம் ஹூம் ஹூம் ஶ்ரீம்-மாயாதி³ ஷோட³ஶீ
பராபீஜத்தில்‌ தொடங்குவது-பராதி ஷோட³ஶீ.
सौः श्रीं ह्रीं क्लीं ऐं सौः ॐ ह्रीं श्रीं कएईल-हसकहल-सकलह्रीं सौः ऐं क्लीं ह्रीं श्रीं सौः
ஸௌ꞉ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉ ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் கஏஈல-ஹஸகஹ ல-ஸகலஹ்ரீம் ஸௌ꞉ ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸௌ꞉
பிரணவத்தில்‌ தொடங்கும்‌ மஹாஷோட³ஶீயைத்‌ தவிர மற்ற ஐந்து‌ ஷோட³ஶீகளுக்கும்‌ ஸ்ரீசக்ர பூஜையில்‌ தனித்தனி சக்திகளுக்குரிய பூஜைகள்‌ உள்ளன. முறைப்படி நவாவரண தேவதைகளைப்‌ பூஜித்த பின்னர்‌ இவ்வைந்து ஷோட³ஶீகளுக்குரிய சக்திகளையும்‌ பூஜிக்க வேண்டும்‌.
பாலா த்ரிபுரஸுந்தரியை வழிபடுபவர்களுக்கு ஸ்ரீசக்ர நவாரண பூஜை கிடையாது. பஞ்சதஶாக்ஷரீயின்‌ மூலம்‌ மஹாத்ரிபுர ஸுந்தரி யாக வழிபடுபவர்களுக்கும்‌, லகு ஷோட³ஶீ அல்லது மஹா ஷோட³ஶீயின்‌ மூலம்‌ மஹா த்ரிபுரஸுந்தரி பரா பட்டாரிகையாக வழிபடுபவர்களு க்குமே ஸ்ரீசக்ர நாவாரண பூஜையில்‌ ஈடுபட அதிகார முண்டு. பஞ்சதஶாக்ஷரீ அல்லது லகுஷோட³ஶீ உபாஸகர்களை விட மஹாஷோட³ஶீ உபாஸகர்‌களுக்கு ஸ்ரீசக்ர பூஜையில்‌ பல விசேஷ அம்சங்கள்‌ உண்டு. மஹாஷோட³ஶீ உபாஸகர்கள்‌ செய்யும்‌ ஸ்ரீசக்ர பூஜை ஒரு மிகப்‌ பெரிய யஜ்ஞமாகும்‌ என அறியவும்‌. தற்காலத்தில்‌ மஹாஷோட³ஶீ உபாஸகர்களுக்கிடையில்‌ முறைப்படி ஸகல விரிவு களுடனும்‌ நயாஸங்களுடனும்‌ ஜபம்‌ செய்பவர்களும்‌ ஸ்ரீசக்ர நவாவ ரண ரூப மஹாயஜனம்‌ செய்பவர்களும்‌ அனேகமாக இல்லை என்றே சொல்லி விடலாம்‌. தற்காலத்தில்‌ மஹாஷோட³ஶீ பூஜை செய்பவர்கள்‌ எல்லாம்‌ பஞ்சதஶாக்ஷரீ உபாஸகர்களுக்குரிய பூஜை யுடன்‌ ஒரு சில மந்த்ரங்களையும்‌, ஒரு சில வாக்யங்களையும்‌ அங் கங்கு கூட்டிச்‌ செய் பவர்களே: அன்றி, முறைப்படி ஷோட³ஶீ பூஜை செய்பவர்கள்‌ அல்ல, மஹாஷோட³ஶீ பூஜைக்குரிய பல விஷயங்க ளும்‌ பல புஸ்தகங்‌களி லிருந்து தொகுத்து நாம்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டியதாக இருக்கின் ‌றன வேயன்றி, பூஜை செய்ய விரும்புபவர் களுக்கு ஸெளகர்யமாக இன்னும்‌ அச்சு வாஹனம்‌ ஏறவில்லை. நவாவரண பூஜையைப்‌ பற்றி எழுதும் இடத்தில்‌ இவை பற்றிய விவரங் களை விளக்குவோம்‌. சோம்பரின்றி சாஸ்திர முறைப்படி மஹா ஷோட³ஶீ பூஜையில்‌ ஈடுபடுவதற்கு ஆசைப்‌ படுபவர்‌ கோடியில்‌ ஒருவ ராவது இருக்கலாம்‌ என்று கருதி நாம்‌ அவ்விஷயங்களைப்‌ பற்றி இங்கு‌ குறிப்பிட விரும்பியுள்ளோம்‌. பாலாத்ரிபுரஸுந்தரி உபாஸனையில்‌ ஈடுபடுபவர்களுக்கு ந்யாஸங்கள்‌ அதிகம்‌ இல்லை. மூலமந்த்ர ந்யாஸத்துடன்‌ மாத்ருகா ந்யாஸம்‌ ஒன்று தான்‌ அதிகப்படியானது. த்ரிபுரா கலா ந்யாஸம்‌ என்பதையும்‌ வேண்டுமானால்‌ செய்து கொள்ளலாம்.‌ பஞ்சதஶாக்ஷர மந்த்ரத்திற்குப்‌ பல ந்யாஸங்கள்‌ விரிவாக உள்ளன, மாத்ருகா ந்யாஸம் பத்து வகைகளாகச்‌ செய்யப்பட வேண்டும்‌; ஸுந்தரி ந்யாஸம்‌, மூல மந்த்ர ந்யாஸம்‌, ஸ்ரீசக்ர ந்யாஸம்‌, வசின்யாதி அஷ்ட வாக்தேவதா ந்யாஸம்‌ முதலிய வெ‌கு விரிவான ந்யாஸங்கள்‌ உள்ளன, பஞ்சதஶாக்ஷரீ உபாஸகர் களுக்கு லகுஷோடா ந்யாஸம்‌ என்‌பதும்‌ உண்டு. மஹா ஷோட³ஶீ தீக்ஷை பெற்றவர்களுக்கு நூறு ந்யாஸங்களுக்கு மேல்‌ உள்ளன அவைகளில்‌ வெகு வெகு முக்யமானவை மஹாஷோடா ந்யாஸம்‌, மூவகையான ஸ்ரீசக்ர ந்யாஸம்‌, சாம்பவீ கலா ந்யாஸம்‌, அஷ்ட த்ரிம்சத்-ஶிவகலா ந்யாஸம்‌, ஷோட³ஶீகலா ந்யாஸம்‌, ஷோட³ஶாக்ஷரீ ந்யாஸம்‌, ஸம்‌மோஹன ந்யாஸம்‌, ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்‌ஹார (மூல மந்த்ர) ந்யாஸம்‌ ஆகியவையாம்‌, பஞ்சதஶாக்ஷரீக்கு உரிய ந்யாஸங் களை யெல்லாம்‌ செய்து கொண்டு, பின்னரே ஷோட³ஶீக்கு விசேஷமாகச்‌ சொல்லப்பட்ட ந்யாஸங்களைச்‌ செய்து கொள்ள வேண்டும்‌. ந்யாஸங்களை ஒருவன்‌ எவ்வளவுக்கெவ்வ‌ளவு ஊக்கமாகச்‌ செய்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனிடம்‌ தேவதா பாவம்‌ திடப்படுகிறது. ந்யாஸங்களின்றி எந்த மந்த்ரமும்‌ ஸித்³தி⁴யாவ தில்லை, மஹாஷோடா போன்ற மந்த்ரங்களைப்‌ பலர்‌ உபதேசம்‌ செய்து கொண்டிருந்தாலும்‌, ந்யாஸங்களில் ஊக்கமற்றவர்களாய்‌ இருப்பதால்‌, மஹாஷோட³ஶீயின்‌ பெருமை எள்ளளவும்‌ தங்களிடம் விளங்கப்‌ பெறுவதில்லை. மஹாஷோட³ஶீ தீக்ஷையைப்‌ பெற்றவன்‌, தனக்கு அத்தீக்ஷையை அருளிய குருவைத்‌ தவிர மற்ற மஹான்களி டத்தில்‌ மஹத்வ புத்தி உடையவனாயிருக்கலாம்‌; ஆயினும்‌ அவர் களிடம்‌ “குரு” என்ற புத்தியுடன்‌ மஹத்வ புத்தியைத்‌ கொள்ளுதல்‌ ஆகாது. மஹாஷோடா ந்யாஸம்‌ போன்றவைகளைத்‌ தன்‌ சரீரத்தில்‌ செய்து கொண்டவன்‌, தான்‌ பார்த்தவர்களுக்கெல்லாம்‌ நமஸ்காராதி களைச்‌ செய்தல்‌ என்பதும்‌ தகாது, இவ்வாறு‌ பல கடுமையான நியமங்கள்‌ மஹாஷோட³ஶீ உபாஸகன்‌ விஷயத்தில்‌ உள்ளன என்ப தைத்‌ தற்காலத்தில்‌ பலரும்‌ அறியவில்லை என்பது வருந்தத்‌ தக்க விஷயமே; இத்தகைய நியமங்களைக்‌ கடைப்‌ பிடிக்க முடியாதவர்கள்‌ மஹாஷோட³ஶீக்கு வருதல்‌ கூடாதாம்‌. மஹாஷோட³ஶீ தீக்ஷையைப்‌ பெற்றவர்கள்‌ தங்கள்‌ ஆசானைக்‌ கண்‌கண்ட தெய்வமாகவே கருதுதல்‌ வேண்டும்‌. வேறு வகையாகக்‌ கொள்ளின்‌ அதன்‌ விளைவு வாழ்விலேயே தெரியும்‌, பணத்தை முக்யமாகக்‌ கொண்டு சீடனை மஹாஷோட³ஶீயின்‌ மூலம்‌ திருப்தி செய்ய விரும்பும்‌ குரவர்களே மல்கியுள்ள இக்காலத்தில்‌, குரவர் களிடம்‌ ஈசுவர புத்தியுடைய சீடர் களைத்‌ தான்‌ எவ்வாறு‌ காண முடியும்‌? விழலுக்கிறைத்தது போல்‌ மஹாஷோட³ஶீயை வாரியி றைக்கும்‌ குரவர்களும்‌, மஹாஷோட³ஶீ யைக்‌ குருவினிடமிருந்து பெற்றுவிட்டுக்‌ குரவனிடம்‌ நன்றி இன்றி நடக்கும்‌ சீடர்களும்‌, அனாதி காலமாக இடையின்றி வரும்‌ குரு பரம்பரையை நோக்கி நன்றி கொன்ற மக்களே ஆவர்‌, அத்தகையவர்‌. அடையும்‌ விளைவை
“எந்நன்றி கொன்றார்க்கும உய்வுண்டாம்‌ உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்று, வள்ளுவர்‌ வாக்கு அறுதியிட்டுச்‌ சொல்லுகிறது. பொய்யா மொழிப்‌ புலவரின்‌ இவ்வாக்கு இதுகாறும்‌ பொய்த்ததில்லை; என்றும்‌ பொய்யாத வாக்கு அன்றோ இவ்வாக்கு!
தேவி வடிவங்கள்‌,
மஹாத்ரிபுஸுந்தரியின்‌ வழிபாட்டில்‌ வழங்கும்‌ முக்யமான மந்த்ரங்க ளைப்‌ பற்றி‌ ஓரளவுக்கு அறிந்து கொண்டோம்‌. மந்த்ரங்‌களின்‌ பல் வேறு நுட்பங்களைப் பற்றி விரிவாக அறிவதற்கு முன்னர்‌. அம்பிகை யின்‌ வழிபாட்டில்‌ கொள்ளப் படும்‌ பலப்பல தேவீ வடிவங்களை அறிய முற்படுவோம்‌, எந்தத்‌ தெய்வத்தை வழிபடுபவனும்‌, தனது பண்பாட்டி ற்கு இணங்கிய நிலையில்‌ அத்தெய்வத்திற்குப்‌ பெயர்‌ வடிவங்கள்‌ கொடுத்து வழிபடுகிறான்‌. கடவுளுக்கு உண்மையில்‌ வடிவமும்‌ பெயரும்‌ இல்லை; கடவுள்‌ பேருண்மையே வடிவானது. பேருண்மை யின்‌ அநுபவம்‌ ஒருவனது வாழ்வில்‌ இடையறாது பொலியும் பொழுது கடவுளனுபவம்‌ இடையறாது பொலிவதாகிறது. ஆயினும்‌ கோடியில்‌ ஓரிருவர்களைத்‌ தவர மற்றவர்கள்‌ பேருண்‌மையே வடிவினதான கடவுளனுபவம்‌ பொலியும்‌ வாழ்வனராவதற்கு வேண்டிய பண்பாடு அற்றவர்களாகவே உளளனர்‌. ஆகவே பண்டைக்‌ காலம்‌ தொடங்கிய கடவுளைப்‌ பல வடிவங்களும்‌ பெயர்களும்‌ உடையவராக வழிபடும்‌ முறை உலகில்‌ மல்கியுள்ளது. தேவீ வழிபாடும்‌ அத்தகையதாகவே உள்ளது. ஏற்கனவே நாம்‌ குறிப்பிட்ட குஹ்யநாம ஸஹஸ்ரம்‌ என்ற நூலில்‌ கடவுளுக்குக்‌ கொடுக்கப்‌படும்‌ பல வடிவங்களும் ஏழு தலைப்பு களுள்‌ அடக்கப்பட்டுள்ளன. குஹ்யநாம ஸஹஸ்‌ரத்துள்‌ 195-வது சுலோகத்தின்‌ பிற்பாதி தொடங்கி 199-வது சுலோகத்தின்‌ முற்‌பாதி முடிய உள்ள பகுதியில இவ்வேழு வடிவங்களும்‌ பேசப்பட்டுள்ளன.

गुह्यनाम सहस्र श्लोकाः
स्थूलतमशरीराढ्यः कारुकर्मविजृम्भितः ॥१९५॥
स्थूलतरस्वरूपाढ्यश्चक्रजालप्रकाशितः।स्थूलरूपसमुज्जृम्भी हृदब्जध्यातरूपकः ॥१९६॥
सूक्ष्मरूपसमुल्लासी मन्त्रजालस्वरूपकः।सूक्ष्मतरतनुश्रीकः कुण्डलिनीस्वरूपकः॥१९७
सूक्ष्मतमवपुश्शोभी पराकामकलातनुः।पररूपसमुद्भासी सच्चिदानन्दविग्रहः ॥१९८॥
परापरवपुर्धारी सप्तरूपविलासितः ।
கு³ஹ்யநாம ஸஹஸ்ர ஶ்லோகா:
ஸ்தூ²லதம ஶரீராட்⁴ய꞉ காருகர்மவிஜ்ருʼம்பி⁴த꞉ |195|
ஸ்தூ²லதர ஸ்வரூபாட்⁴யஶ் சக்ரஜாலப்ரகாஶித꞉ ஸ்தூ²லரூப ஸமுஜ்ஜ்ருʼம்பீ⁴ ஹ்ருʼத³ப்³ஜத்⁴யாதரூபக꞉ |196|
ஸூக்ஷ்மரூப ஸமுல்லாஸீ மந்த்ரஜாலஸ்வரூபக꞉ ஸூக்ஷ்மதர தனுஶ்ரீக꞉ குண்ட³லினீஸ்வரூபக꞉ |197|
ஸூக்ஷ்மதம வபுஶ்ஶோபீ⁴ பராகாமகலாதனு꞉ பரரூப ஸமுத்³பா⁴ஸீ ஸச்சிதா³நந்த³விக்³ரஹ꞉ |198|
பராபரவபுர்தா⁴ரீ ஸப்தரூபவிலாஸித꞉ |
(மேற்கூறிய குஹ்யநாம ஸஹஸ்ரத்தினது ஶ்ரீஅம்ருதானந்த யோகி யின் தமிழ் உரை)

  1. ஸ்தூலதமம் என்ற திருமேனியுடையவர்.
  2. சிற்பியின் தொழிலால் விளங்குபவர்
  3. ஸ்தூலதரம் என்ற வடிவுடன் கூடியவர்
  4. சக்ரகூட்டங்களில் விளங்குபவர்
  5. ஸ்தூலம் என்ற வடிவில் ஓங்கி ஒளிர்பவர்
  6. இதயத் தாமரையில் தியானிக்கப்பட்ட வடிவினர்.
  7. ஸூக்ஷ்மம் என்ற வடிவில் எழிலுற்றவர்.
  8. மந்த்ரக்கூட்டங்களின் வடிவாயிருப்பவர்.
  9. ஸூக்ஷ்மதரம் என்ற மேனிப்பொலிவினர்
  10. குண்டலினீ என்ற வடிவினர்.
  11. ஸூக்ஷ்மதமம் என்ற மேனியழகால் விளங்குபவர்
  12. பராகாமகலை என்பதையே மேனியாகக் கொண்டவர்.
  13. பரம் என்ற வடிவத்தில் ஓங்கி எழிலுற்றவர்.
    766 ஸச்சிதான்ந்த திருமேனியர்.
  14. பரம் அபரம் ((உயர்ந்தது, தாழ்ந்தது) என்ற இருவகை மேனிகளைத் தாங்குவபர்.
  15. எழுவகை வடிவங்களால் எழிலுற்றவர்.
    இவ்வேழு வடிவங்களாவன :
    (1) ஸ்தூலதம வடிவம்‌
    (2) ஸ்தூல தர வடிவம்‌
    (3) ஸ்தூல வடிவம்‌
    (4) ஸூக்ஷ்ம வடிவம்‌
    (5) ஸூக்ஷ் மதர வடிவம்‌
    (6) ஸூக்ஷ்மதம வடிவம்
    (7) பர வடிவம்‌.
    இவ்வேழு வடிவங்களையும்‌ ஒவ்வொன்றாகக்‌ கவனிப்போம்‌-

ஸ்தூதலதம வடிவம்‌ (The grossest form) :– சிற்பி‌ ஒருவன்‌ தன் அறிவுத் திறமும்‌ கைத்திறமும்‌ கொண்டு பஞ்சலோஹத்திலோ, வெள்ளியிலோ, தாம்ரத்திலோ, தங்கத்திலோ, கருங்கல்லிலோ, சலவைக்‌ கற்களிலோ, படிகக்‌ கல்‌லிலோ, அல்லது மாணிக்கம்‌ முதலிய ரத்னக்‌ கற்களிலோ, உருவாக்கிய வடிவமே ஸ்தூதலதம வடிவம் ‌ எனப்படுகிறது. சித்திரங்களில்‌ தீட்டப்பட்ட வடிவமும்‌ ஸ்தூதலதம வடிவம் என்ற ‌ பகுப்பையே சேரும்‌. ஆக விக்ரஹங் கள்‌, படங்கள்‌ ஆகியவெல்லாம்‌ ஸ்தூதலதம வடிவங்களே ஆகும்‌ என அறிய வேண்டும்‌. நமக்கு இருப்பவை போன்ற தலை, கை, கால், மூக்குகளெல்லாம்‌ உடைய நிலையில்‌ திவ்ய ஸௌந்தர்ய முடையதாகக் கொள்ளப்படும்‌ ஸ்தூலதம வடிவம்‌ கடவுளுக்கு மனிதன்‌ தன்னுடைய வடிவத்தை நிகர்த்த வடிவத்தைக்‌ கொடுக் கும்‌ கொள்கையைச் (Anthropomorphism)‌சார்ந்தது ஸ்தூலதம வடிவம்‌ என அறிதல்‌ வேண்டும்‌. தன்னுடையது போன்ற வடிவ முடைய கடவுளிடம் எங்கும்‌ நிறைந்த தன்மை, எல்லாம அறிந்த தன்மை, ஏதும் வல்ல தன்மை (Omnipresence; Omniscience; Omni potence) ஆகியவைகளைக்‌ குறிப்பிட்ட விஶ்வரூபம் போன்ற வடிவங்களை மனிதன் கொள்கிறான். பல கைகளும்‌, கால்களும்‌, முகங்களும், கண்களும்‌ பலவகை ஆயுதங்களும்‌ கொடுக்கப் படுகின்‌றன. ‌இவ்வாறு‌ உள்ள வடிவங்‌களைத்‌ த்ருடமாக இடை யறாது தியானிப்பதன்‌ மூலம்‌ இத்தகைய வடிவங்களில் கடவுளை க்‌ கண்டு, அக்கடவுளிடமிருந்து வரங்க ளையும்‌ மனிதன் ‌பெறுகி றான். தன்னுடைய மனத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கர சரணாதிகளிடன் கூடிய கடவுளாக உருவாக்கப்படுகிறது (Projection) என்பதைப்‌ பாமரன்‌ அறிவது இல்லை. தன்னுடைய மனமே வரங்கொடுககும்‌ கடவுளாகவும்‌, வரம்‌ பெறும்‌ வழிபடுப வனுமாக உள்ளது என்பதை பாமரன்‌ அறிவதில்லை. தன்னிடம்‌ புதிதாக நிறைவேற்றிக் கொள்ளப் படும் ஆற்றல்களும்‌, ஏற்கனவே தன்‌ மனத்தின்‌ கண்‌ மறைந்திருந்த ஆற்றல்கள் தாம் என்பதையும்‌ பாமரன்‌ அறிவதில்லை. இத்தகைய பாமரர்களுக்கு பெரிதும் பயன்படும் வடிவம் ஸ்தூல-தம வடிவம் என்று அறியவும். மஹா த்ரிபுரஸுந்தரியை ஸ்தூல-தம வடிவத்தில் கொள்ளும் பொழுது அவளுக்கு கொடுக்கப்படும் வடிவத்தை கவனிப்போம்.
உதயகாலத்து ஆயிரம் கதிரவர்கள்‌ ஒளியுடையவளாக இருக்கிறள்‌ அன்னை. மாதுளம்‌ பூ நிறத்தினளாய்‌, செம்பருத்திப்‌ பூவின்‌ ஒளியை மானுபவளாய், பதுமராகமணியின்‌ பொலிவைப்‌ பழிப்பவளாய்க்‌ காந்துகிறாள்‌; அப்பொழுது மலர்ந்த செந்தாம ரையின்‌ அழகுதான்‌ அவளது அழகோ எனது வியக்கும் வண்ணம் உள்ளது அவளது எழில்‌, உருக்கிவிட்ட சொக்கத்‌ தங்கம் போல்‌ பிரகாசிக்கிறது, தேவர்கள்‌ யாவருக்கும்‌ தலைவி, செந்தாமரை இதழ்களின்‌ வடிவழகு கொண்டவையாய்‌ உள்ளன. அவளது தளிர் பாதங்களி‌ல் விலை மதிக்க முடியாத சிலம்புகளை அணிந்திருக் கிறாள்; கால்‌ விரல்கள்‌ பத்திலும்‌ உள்ள மோதிரங்கள்‌ ரத்னங்கள்‌ பதிக்கப் பெற்றவையாய்‌ ஒளி உமிழ்கின்‌றன; வாழைத்‌ தண்டின்‌ மென்‌மையுடன் அழகு பொருந்தியவை அவளது தொடைகள்‌. இடையில்‌ செவ்வரக்கு நிறச்சேலையை அணிந்திருக்கிறாள்‌. அச்சேலையின்‌ மீது இடையில்‌ ஒட்டியாணம்‌ அணித்திருக்கிறாள்‌. அவ்வொட்டியாணத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ன குறுமணிகள்‌ இனிதாக ஒலிக்கின்‌றன. அனுமானத்தினாலேயே அறியத்தக்க அவ்வளவு மெல்லிய இடை அழகுடையவள்‌ அன்‌னை; அமிழ்ந்த, ஆழமான தொப்பூழும்‌, மெலித்த வயிறும்‌ உடையவள்‌; தொப்பூழ்‌ என்ற பாத்தியினின்றும்‌ புறப்பட்ட, ரோம வரிசை என்ற கொடியில்‌ தொங்கும்‌ இரு பழங்களைப்‌ போல்‌ அவளது நகில்கள்‌ உள்ளன; உருண்டு, திரண்டு, நெருங்கி, நிமிர்த்து, நிற்கும்‌ அவளது அந்நகில்களின்‌ அழகுதான்‌ என்னே! மதிப்பிட முடியாத பருத்த முத்துக்களாலான மாலை அவளது திருமார்பை அணிசெய்கிறது. நவரத்னங்களாலான சிற்றாரம்‌ ஒன்றும்‌ அவளது திருக்கழுத்தை அணைத்து மகிழ்கிறது. செவிகளில்‌ எழிலோங்கிப்‌ பொலியும்‌ தாடங்கங்களின்‌ ஒளி கன்னங்களில்‌ வீசுகிறது; முக மண்டலத் திற்கு இரு மருங்கிலுள்ள‌ தாடங்கங்கள் இரண்டும் கதிரவனும் நிறைமதி உதித்துள்ளனரோ என்ற மயலை விளைவிக்கின்‌றன அப்பொழுதே அலர்ந்த தாமரையைப்‌ பழிக்கும்‌ முக எழிலினன்‌ என்போமா அவளை அல்லது, நிறைமதி முகத்தினன்‌, என்போமா அவளை!! சம்பக மலரின்‌ எழில்‌ தோற்றதே அவளது நாசியழகின்‌ முன்னர்‌! மன்மதனது வில்லெனச் சொல்லும் படியன்றோ அவளது புருவங்கள்‌ உள்ளன! அங்கயற்கண்ணி என்போமா அவளை! குவளைக் கண்ணி என்போமா அவளை! காமக் கண்ணியாய்க்‌ காமராஜ பீடத்தில்‌ அமர்‌ந்துள்ள அவளது திருவிழிகள்‌ கருணை மழையைப்‌ பொழிகின்‌றன அன்றோ! நெற்றிப்‌ பட்டத்தின்‌ மேற்புறம்‌ நெற்றிச்சரமும்‌, அதன்‌ கீழ்ப்‌ பொலியும்‌ கஸ்தூரி திலகமும்‌ அவளது முகமண்டலத்திற்கு அழகூட்டுகின்‌றன என்போமா, அல்லது தவங்கிடத்து அவை அவ்விடத்தில்‌ உறையுமாறு பெற்ற பேறு என்போமா! முத்துக்க ளும்‌, மாணிக்கங்களும்‌ பதிக்கப் பெற்ற கிரீடத்தின்‌ அடிப்புறத் தில்‌ சுற்றிலும்‌ தொங்கும்‌ குறுமணிகளின்‌ உவகையாரவாரத்தை என்னென்போம்‌! கிரீடத்தின்‌ முன்புறத்தில்‌ ஓங்கி இறுமாப்புற்றுப்‌ பொலியும்‌ திங்கட்‌பிறை உற்றபேறு என்ன பேறு! முக்கண்ண னது மஹிஷியான இவளும்‌ முக்கண்ணியாகவே இருப்பது எவ்வளவு பொருத்தம்‌! தளிர்‌களின்‌ மென்மையும்‌, கொடிகளின்‌ துவட்சியும்‌ உடைய நான்கு புஜங்களின் அழகை வேளும்‌ வர்ணிக்க ஒண்ணுமோ! கரும்பு வில்லையும்‌, மலர்க் கணையை யும்‌, கயிற்றையும்‌, மாவட்டியையும்‌ ஆயுதங்களாக நான்கு கை களிலும்‌ கொண்டிருப்பதில்‌ எத்‌துணைத்‌ தத்துவ நுட்பங்கள்‌ அடங்கியுள்ளன. நமது மனத்தினால்‌ கற்பனை செய்யக்‌ கூடிய எல்லாத்‌ தேவர்களுமே அன்னையின்‌ இவ்வடிவில்‌ ஒரு சிற்றிடத் திலே அடங்கி விடுகின்றனரே! கவின்மை என்பதெல்லாம்‌ திரண்டு பொலியும்‌ வடிவுடையம்மையல்‌லவோ இவள்! உலகில்‌ உள்ள புனித நீர்கள்‌ யாவுமே இவளது வடிவில்‌ அடங்கி விடுகின் றன அன்றோ! எல்லோ ஆசைகளையும் நிறைவேற்றித் தரும் கருணாமயீ! எல்லா மந்த்ரங்களின்‌ வடிவாய்‌ இருப்பவள்‌; நிதித்ய மான பரம்பொருள் சகல மறை நூல்களும் அவளது ஒரு சொல் லிலே அடங்கி விடுகின்றன. புனிதமான க்ஷேத்ரங்களும் யாவும்‌ அவளது திருப்பாதங்களின்‌ ஒரு தூசியில்‌ அடங்குகின்றன! स्वयं प्रकाशरूपिणी ஸ்வயம்‌ பிரகாஶரூபிணீ! உலகியலறிவு, பேரறிவு யாவும்‌ அவள்‌ வடிவமே யன்றோ! மங்களை! சகல யாகங்களுமே அவள்‌ தான்; சகல கர்மங்களும்‌. அவள் தான்; சகல ஞானமும்‌ அவள்‌ தான்! எல்லா வழிகளும்‌, அவ்வழிகளை வகுத்துக்‌ கூறும்‌ நூல்களும்‌ அவள்‌ தான்‌; அவளேதான்‌.

स-कुङ्कुम-विलेपनामलिक-चुम्बि-कस्तूरिकां
समन्द-हसितेक्षणां स-शर-चाप-पाशाङ्कुशां ।
अशेष-जन-मोहिनीमरुणमाल्य-भूषाम्बरां
जपाकुसुम-भासुरां जप-विधौ स्मरेदम्बिकां ॥
ஸ-குங்கும-விலேபநாமலிக-சும்பி³-கஸ்தூரிகாம்
ஸமந்த³-ஹஸிதேக்ஷணாம் ஸ-ஶர-சாப-பாஶாங்குஶாம் |
அஶேஷ-ஜந-மோஹினீமருணமால்ய-பூ⁴ஷாம்ப³ராம்
ஜபாகுஸும-பா⁴ஸுராம் ஜப-விதௌ⁴ ஸ்மரேத³ம்பி³காம் ||
திருவுடையன்னை; திருப்பேரரசீ; திருவுடை அரியணை அமர்ந்த தனிப்பெருந்தலைவி, குங்குமப்பூ செழுமிய சந்தனப்பூச்சு; நெற்றித்தடத்தை முத்தமிடும் கஸ்தூரி திலகம்‌; விழி மலர்களின்‌ வழி ஒழுகும் புன்முறுவல்‌ அழகு‌;‌ மஹாத்ரிபுரஸுந்தரி பரா பட்டாரிகை அழகு வெள்ளமே; ஞானிகளின்‌ வடிவாய்‌, ஸஹஜ ஸமாதி நிஷ்டர்களின் வடிவாய் விளங்குபவள் அன்றோ அன்னை லலிதாம்பிகை! ஞானிகளிடம்‌ தொழிற்படு வதாக புற உலகின ரால் காணப்படும் மனமே அவளது கரும்பு வில்; சப்தம்‌, ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம் என்று ஞானிகளிடம் காணப்படும் தன் மாத்ரா ஸுகமே அவளது மலர்க் கணைகள், தன்மாத்ரா ஸுக மும் ஞானிகளிடம் ஆத்ம ஸுகமாகவே பொலிவ தன்றோ! அவ் வப்பொழுது ஞானிகளிடமும் தோன்றுவதாக மற்றவர்களுக்கு புலப்படும் ராகமும் (பற்றும்) க்ரோதமும் (பகையும்) அவளது திருக்கரத்தில் பாசமும், அங்குசமுமாக உள்ளவன்றோ! ஞானி களிடம்‌ இடையறாது அனாயாசமாக செங்கோல் புரியும் அகண்டாகார வ்ருத்தி என்ற ஶிவோஹம் பாவனை தானே அவளது மேனியின் ஒளி; செம்பருத்தி மலர்களின் சென்னிற ஒளியன்றோ அவளது மேனிப்பொலிவு! அதுவே தான் அன்றோ பராகாமகலை ‌ எனவும் ப்³ரஹ்மவித்³யா எனவும் நூல்களல் அறையப்படுவது. ஞானிகளிடம் காந்தும் அவளது ஒளிப் பெம் மை ‌ பாமர ஜனங்களுக்கு ௭ங்ஙனம் அறியக் ‌ கூடியதாகும்‌? ஆகவே திக்குமுக்காடுவது இயல்பு தானே! ஞானிகளிடம் உடலும் துகிலும் அணியும் யாவுமே அகண்டாகார வ்ருத்தியில் விழுங்க பட்டவை அன்றோ! ஞானிகளின் அனுபூதி வடிவினளான அன்னை அணியிலும் ஆரத்துலும் ஆடையிலும் யாவற்றிலுமே அருணையாய் அமைவது எத்திணை அழகு! அடை மொழியே தேவை இல்லாத அழகி (ஸுந்தரி) அன்றோ அவள்! முப்புரங்களி லும்‌ அழகு வெள்ளமாய் அமர்ந்தவள் அவள்; விழிப்பு, கனவு, நனவு ஆகிய முந்நிலைகள்‌ மாறி மாறி மனத்துக் கண் வந்தாலும், அந்நிலைகளை ஒளிர்விக்கும்‌ பாஸக சைதன்யம் ‌(Illuminating consciousness) அல்லவோ அவளது வடிவம்‌! முப்புரங்க ளிலும் ஸுந்தரியாக (த்ரிபுரஸுந்தரியாக) உள்ளவளே உண்மையில்‌ ஸுந்தரியாவாள். தசமஹாவித்யைகளுள்‌ அவளுக்குத்‌ தானே ஸுந்தரி என்று பெயர்‌ !! அவ்வழகின்‌ வடிவம்‌ இமைப் பொழுதும் என்றும்‌ நீங்காது நம் யாவரிடத்தும் காந்துவதாக! இவ்வாறு‌ அன்னையின்‌ ஸ்தூலதம வடிவம்‌ விளங்குகிறது. இவ்வடிவம்‌ ஸெளந்தர்யலஹரியின் பிற்பகுதியில்‌ 42-வது சுலோகம்‌ முதல 92-வது சுலோகம்‌ முடிய வர்ணிக்கப் படுகிறது, லலிதா ஸஹஸ்ர நாமத்தின்‌ தொடக்கத்தில்‌ 6-வது நாமம்‌ தொடங்கி 63-வது நாமம்‌ முடிய, இவ்வடிவத்தின்‌ வர்ணனையைக்‌ காண்கிறோம்‌.

ह्रीं श्रीं उद्यद्भानु-सहस्राभायै नमः ।
ह्रीं श्रीं चतुर्बाहु-समन्वितायै नमः ।
ह्रीं श्रीं रागस्वरूप-पाशाढ्यायै नमः ।
ह्रीं श्रीं क्रोधाकाराङ्कुशोज्ज्वलायै नमः ।
ह्रीं श्रीं मनोरूपेक्षुकोदण्डायै नमः ।
ह्रीं श्रीं पञ्चतन्मात्र-सायकायै नमः ।
ह्रीं श्रीं निजारुण-प्रभापूर-मज्जद्-ब्रह्माण्ड-मण्डलायै नमः ।
ह्रीं श्रीं चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचायै नमः ।
ह्रीं श्रीं कुरुविन्दमणिश्रेणी-कनत्कोटीरमण्डितायै नमः ।
ह्रीं श्रीं अष्टमीचन्द्र-विभ्राजद्-अलिकस्थल-शोभितायै नमः ।
ह्रीं श्रीं मुख-चन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषकायै नमः ।
ह्रीं श्रीं वदन-स्मर-माङ्गल्यगृह-तोरण-चिल्लिकायै नमः ।
ह्रीं श्रीं वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचनायै नमः ।
ह्रीं श्रीं नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजितायै नमः ।
ह्रीं श्रीं ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरायै नमः ।
ह्रीं श्रीं कदम्ब-मञ्जरी-कॢप्त-कर्णापूर-मनोहरायै नमः ।
ह्रीं श्रीं ताटङ्क-युगलीभूत-तपनोडुप-मण्डलायै नमः ।
ह्रीं श्रीं पद्मराग-शिलादर्श-परिभावि-कपोलभुवे नमः ।
ह्रीं श्रीं नवविद्रुम-बिम्बश्री-न्यक्कारि-रदनच्छदायै नमः ।
ह्रीं श्रीं शुद्धविद्याङ्कुराकार-द्विजपङ्क्ति-द्वयोज्ज्वलायै नमः
ह्रीं श्रीं कर्पूरवीटिका-आमोद-समाकर्षित्-दिगन्तरायै नमः ।
ह्रीं श्रीं निज-सल्लाप-माधुर्य-विनिर्भत्सित-कच्छप्यै नमः ।
ह्रीं श्रीं मन्दस्मित-प्रभापूर-मज्जत्-कामेश-मानसायै नमः ।
ह्रीं श्रीं अनाकलित-सादृश्य-चिबुकश्री-विराजितायै नमः ।
ह्रीं श्रीं कामेशबद्ध-माङ्गल्यसूत्र-शोभित-कन्धरायै नमः ।
ह्रीं श्रीं कनकाङ्गद-केयूर-कमनीय-भुजान्वितायै नमः ।
ह्रीं श्रीं रत्नग्रैवेय-चिन्ताक-लोल-मुक्ताफलान्वितायै नमः ।
ह्रीं श्रीं कामेश्वर-प्रेमरत्नमणि-प्रतिपणस्तन्यै नमः ।
ह्रीं श्रीं नाभ्यालवाल-रोमालि-लताफल-कुचद्वय्यै नमः ।
ह्रीं श्रीं लक्ष्यरोम-लताधारता-समुन्नेय-मध्यमायै नमः ।
ह्रीं श्रीं स्तनभार-दलन्मध्य-पट्टबन्ध-वलित्रयायै नमः ।
ह्रीं श्रीं अरुणारुण-कौसुम्भ-वस्त्रभास्वत्कटी-तट्यै नमः ।
ह्रीं श्रीं रत्नकिङ्किणिका-रम्य-रशना-दाम-भूषितायै नमः ।
ह्रीं श्रीं कामेश-ज्ञात-सौभाग्य-मार्दवोरु-द्वयान्वितायै नमः ।
ह्रीं श्रीं माणिक्य-मुकुटाकार-जानुद्वय-विराजितायै नमः ।
ह्रीं श्रीं इन्द्रगोप-परिक्षिप्त-स्मर-तूणाभ-जङ्घिकायै नमः ।
ह्रीं श्रीं गूढ-गुल्फायै नमः ।
ह्रीं श्रीं कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्वितायै नमः ।
ह्रीं श्रीं नख-दीधिति-सञ्छन्न-नमज्जन-तमोगुणायै नमः ।
ह्रीं श्रीं पदद्वय-प्रभाजाल-पराकृत-सरोरुहायै नमः ।
ह्रीं श्रीं शिञ्जान-मणिमञ्जीर-मण्डितश्री-पदाम्बुजायै नमः ।
ह्रीं श्रीं मराली-मन्दगमनायै नमः ।
ह्रीं श्रीं महालावण्य-शेवधये नमः ।
ह्रीं श्रीं सर्वारुणायै नमः ।
ह्रीं श्रीं अनवद्याङ्ग्यै नमः ।
ह्रीं श्रीं सर्वाभरणभूषितायै नमः ।
ह्रीं श्रीं शिवकामेश्वराङ्कस्थायै नमः ।
ह्रीं श्रीं शिवायै नमः ।
ह्रीं श्रीं स्वाधीन-वल्लभायै नमः ।
ह्रीं श्रीं सुमेरु-मध्य-शृङ्गस्थायै नमः ।
ह्रीं श्रीं श्रीमन्नगर-नायिकायै नमः ।
ह्रीं श्रीं चिन्तामणि-गृहान्तस्थायै नमः ।
ह्रीं श्रीं पञ्चब्रह्मासन-स्थितायै नमः ।
ह्रीं श्रीं महापद्माटवी-संस्थायै नमः ।
ह्रीं श्रीं कदम्ब-वन-वासिन्यै नमः ।
ह्रीं श्रीं सुधा-सागर-मध्यस्थायै नमः ।
ह्रीं श्रीं कामाक्ष्यै नमः ।
ह्रीं श्रीं कामदायिन्यै नमः ।

  1. ஹ்ரீம் ஶ்ரீம் உத்³யத்³பா⁴னு-ஸஹஸ்ராபா⁴யை நம:
  2. ஹ்ரீம் ஶ்ரீம் சதுர்பா³ஹு-ஸமன்விதாயை நம:
  3. ஹ்ரீம் ஶ்ரீம் ராக³ஸ்வரூப-பாஶாட்⁴யாயை நம:
  4. ஹ்ரீம் ஶ்ரீம் க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலாயை நம:
  5. ஹ்ரீம் ஶ்ரீம் மனோரூபேக்ஷுகோத³ண்டா³யை நம:
  6. ஹ்ரீம் ஶ்ரீம் பஞ்சதன்மாத்ர-ஸாயகாயை நம:
  7. ஹ்ரீம் ஶ்ரீம் நிஜாருண-ப்ரபா⁴பூர-மஜ்ஜத்³-ப்³ரஹ்மாண்ட³-மண்ட³லாயை நம:
  8. ஹ்ரீம் ஶ்ரீம் சம்பகாஶோக-புந்நாக³-ஸௌக³ந்தி⁴க-லஸத்கசாயை நம:
  9. ஹ்ரீம் ஶ்ரீம் குருவிந்த³மணிஶ்ரேணீ-கனத்கோடீரமண்டி³தாயை நம:
  10. ஹ்ரீம் ஶ்ரீம் அஷ்டமீசந்த்³ர-விப்⁴ராஜத்³-அலிகஸ்த²ல-ஶோபி⁴தாயை நம:
  11. ஹ்ரீம் ஶ்ரீம் முக²-சந்த்³ர-கலங்காப⁴-ம்ருʼக³நாபி⁴-விஶேஷகாயை நம:
  12. ஹ்ரீம் ஶ்ரீம் வத³ன-ஸ்மர-மாங்க³ல்யக்³ருʼஹ-தோரண-சில்லிகாயை நம:
  13. ஹ்ரீம் ஶ்ரீம் வக்த்ரலக்ஷ்மீ-பரீவாஹ-சலன்மீநாப⁴-லோசனாயை நம꞉
  14. ஹ்ரீம் ஶ்ரீம் நவசம்பக-புஷ்பாப⁴-நாஸாத³ண்ட³-விராஜிதாயை நம:
  15. ஹ்ரீம் ஶ்ரீம் தாராகாந்தி-திரஸ்காரி-நாஸாப⁴ரண-பா⁴ஸுராயை நம:
  16. ஹ்ரீம் ஶ்ரீம் கத³ம்ப³-மஞ்ஜரீ-க்லுʼப்த-கர்ணாபூர-மனோஹராயை நம:
  17. ஹ்ரீம் ஶ்ரீம் தாடங்க-யுக³லீபூ⁴த-தபனோடு³ப-மண்ட³லாயை நம:
  18. ஹ்ரீம் ஶ்ரீம் பத்³மராக³-ஶிலாத³ர்ஶ-பரிபா⁴வி-கபோலபு⁴வே நம:
  19. ஹ்ரீம் ஶ்ரீம் நவவித்³ரும-பி³ம்ப³ஶ்ரீ-ந்யக்காரி-ரத³னச்ச²தா³யை நம꞉
  20. ஹ்ரீம் ஶ்ரீம் ஶுத்³த⁴வித்³யாங்குராகார-த்³விஜபங்க்தி-த்³வயோஜ்ஜ்வலாயை நம꞉
  21. ஹ்ரீம் ஶ்ரீம் கர்பூரவீடிகா-ஆமோத³-ஸமாகர்ஷித்-தி³க³ந்தராயை நம:
  22. ஹ்ரீம் ஶ்ரீம் நிஜ-ஸல்லாப-மாது⁴ர்ய-விநிர்ப⁴த்ஸித-கச்ச²ப்யை நம:
  23. ஹ்ரீம் ஶ்ரீம் மந்த³ஸ்மித-ப்ரபா⁴பூர-மஜ்ஜத்-காமேஶ-மானஸாயை நம:
  24. ஹ்ரீம் ஶ்ரீம் அனாகலித-ஸாத்³ருʼஶ்ய-சிபு³கஶ்ரீ-விராஜிதாயை நம:
  25. ஹ்ரீம் ஶ்ரீம் காமேஶப³த்³த⁴-மாங்க³ல்யஸூத்ர-ஶோபி⁴த-கந்த⁴ராயை நம:
  26. ஹ்ரீம் ஶ்ரீம் கனகாங்க³த³-கேயூர-கமனீய-பு⁴ஜான்விதாயை நம:
  27. ஹ்ரீம் ஶ்ரீம் ரத்னக்³ரைவேய-சிந்தாக-லோல-முக்தா ப²லான்விதாயை நம:
  28. ஹ்ரீம் ஶ்ரீம் காமேஶ்வர-ப்ரேமரத்னமணி-ப்ரதிபண ஸ்தன்யை நம:
  29. ஹ்ரீம் ஶ்ரீம் நாப்⁴யாலவால-ரோமாலி-லதாப²ல-குச த்³வய்யை நம:
  30. ஹ்ரீம் ஶ்ரீம் லக்ஷ்யரோம-லதாதா⁴ரதா-ஸமுன்னேய-மத்⁴யமாயை நம:
  31. ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்தனபா⁴ர-த³லன்மத்⁴ய-பட்டப³ந்த⁴-வலி த்ரயாயை நம:
  32. ஹ்ரீம் ஶ்ரீம் அருணாருண-கௌஸும்ப⁴-வஸ்த்ர பா⁴ஸ்வத் கடீ-தட்யை நம:
  33. ஹ்ரீம் ஶ்ரீம் ரத்னகிங்கிணிகா-ரம்ய-ரஶனா-தா³ம-பூ⁴ஷிதாயை நம:
  34. ஹ்ரீம் ஶ்ரீம் காமேஶ-ஜ்ஞாத-ஸௌபா⁴க்³ய-மார்த³வோரு-த்³வயான்விதாயை நம:
  35. ஹ்ரீம் ஶ்ரீம் மாணிக்ய-முகுடாகார-ஜானுத்³வய-விராஜிதாயை நம:
  36. ஹ்ரீம் ஶ்ரீம் இந்த்³ரகோ³ப-பரிக்ஷிப்த-ஸ்மர-தூணாப⁴-ஜங்கி⁴காயை நம:
  37. ஹ்ரீம் ஶ்ரீம் கூ³ட⁴-கு³ல்பா²யை நம:
  38. ஹ்ரீம் ஶ்ரீம் கூர்ம-ப்ருʼஷ்ட²-ஜயிஷ்ணு-ப்ரபதா³ன்விதாயை நம:
  39. ஹ்ரீம் ஶ்ரீம் நக²-தீ³தி⁴தி-ஸஞ்ச²ன்ன-நமஜ்ஜன-தமோகு³ணாயை நம:
  40. ஹ்ரீம் ஶ்ரீம் பத³த்³வய-ப்ரபா⁴ஜால-பராக்ருʼத-ஸரோருஹாயை நம:
  41. ஹ்ரீம் ஶ்ரீம் ஶிஞ்ஜான-மணிமஞ்ஜீர-மண்டி³தஶ்ரீ-பதா³ம்பு³ஜாயை நம:
  42. ஹ்ரீம் ஶ்ரீம் மராலீ-மந்த³க³மனாயை நம:
  43. ஹ்ரீம் ஶ்ரீம் மஹாலாவண்ய-ஶேவத⁴யே நம:
  44. ஹ்ரீம் ஶ்ரீம் ஸர்வாருணாயை நம:
  45. ஹ்ரீம் ஶ்ரீம் அனவத்³யாங்க்³யை நம:
  46. ஹ்ரீம் ஶ்ரீம் ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதாயை நம:
  47. ஹ்ரீம் ஶ்ரீம் ஶிவகாமேஶ்வராங்கஸ்தா²யை நம:
  48. ஹ்ரீம் ஶ்ரீம் ஶிவாயை நம:
  49. ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்வாதீ⁴ன-வல்லபா⁴யை நம:
  50. ஹ்ரீம் ஶ்ரீம் ஸுமேரு-மத்⁴ய-ஶ்ருʼங்க³ஸ்தா²யை நம:
  51. ஹ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீமந்நக³ர-நாயிகாயை நம:
  52. ஹ்ரீம் ஶ்ரீம் சிந்தாமணி-க்³ருʼஹாந்தஸ்தா²யை நம:
  53. ஹ்ரீம் ஶ்ரீம் பஞ்சப்³ரஹ்மாஸன-ஸ்தி²தாயை நம:
  54. ஹ்ரீம் ஶ்ரீம் மஹாபத்³மாடவீ-ஸம்ஸ்தா²யை நம:
  55. ஹ்ரீம் ஶ்ரீம் கத³ம்ப³-வன-வாஸின்யை நம:
  56. ஹ்ரீம் ஶ்ரீம் ஸுதா⁴-ஸாக³ர-மத்⁴யஸ்தா²யை நம:
  57. ஹ்ரீம் ஶ்ரீம் காமாக்ஷ்யை நம:
  58. ஹ்ரீம் ஶ்ரீம் காமதா³யின்யை நம꞉

கடவுள்‌ வழிபாட்டின்‌ தொடக்க நிலையில்‌ இருப்பவர்‌களுக்கு இவ் வடிவமே ஏற்பட்டதாகும்‌; பெரும்‌ பயன்‌ தருவதுமாகும்‌. இத்தகைய வடிவம்‌ அம்பிகைக்குக்‌ கொடுக்‌கப்படும்‌ பொழுது, இவ்வடிவத்தில்‌ அவள் உறையும்‌ ஓர்‌ இடமும்‌, அவ்விடத்தில்‌ அவள் உறையும் ஓர் இடமும், அவ்விடத்தில் அவளுக்குள்ள பரிவார தேவதைகளும்‌ வர்ணிக்கப் படுவதையும்‌ நாம் பண்டை நூல்‌களினின்றும் அறிய லாம். பரமஶிவனுடைய உலகம் கைலாயம்‌ எனக் கூறப்படுவது போல்‌, மஹா விஷ்ணுவின்‌ உலகம்‌ வைகுண்டம்‌ எனக் கூறப்படுவது போல்‌, அன்னை மஹாத்ரிபுரஸுந்தரியின் உலகம் ஶ்ரீபுரம் எனப் படுகிறது. ஶ்ரீபுரத்தின் நடுவில் உள்ளது ஸ்ரீசக்ர நகரம்‌ ஆகும்‌. ஸ்ரீசக்ரத்திற்கு வெளியில் ஶ்ரீபுரத்தில் அடங்கியதாக பல கோட்டைகளும்‌, அக்கோட் டைகளுக்கு நடுப் பிரதேசங்களில் அடங்கியதாக பல தேவதைகளும்‌ வர்ணிக்கப் படுகின்றனர், ஶ்ரீபுரமே அம்ருதமயமான ஒரு பெரிய பாற் கடலின்‌ நடுவண்‌ உள்ளது. இந்தப்‌ பாற்கடல்‌ விஷ்ணு‌ இரு வர்ணிக் கப்படும்‌ பாற்கடலை விட எத்துணையோ பெரியது ஆகும் என அறிய வேண்டும்‌. அம்ருதமயமான இப்பாற்கடலின்‌ நடுவில்‌ ரத்னமயமான ஒரு தீவு உள்ளது. அதில்‌ பலவகையான மரங்கள்‌ செறிந்த ஒரு தோட்டம் இருக்கிறது. அதற்கும் நடுவில்‌ கற்பக மரங்கள்‌ செறிந்த ஒரு தோட்டம்.‌ அதற்கும் நடுவில் ஸந்தான(சந்தன) மரங்கள் செறிந்த தோட்டம். ‌ அதற்கும் நடுவில் ஹரிசந்தான (செஞ்சந்தான) மரங்கள் செறிந்த தோட்டம். அதற்கும்‌ நடுவில்‌ மந்தார மரங்கள் செறிந்த தோட்டம். அதற்கும்‌ நடுவில்‌ பாரிஜாத மரங்கள்‌ நிறைந்த தோட்டம்‌. அதற்கும்‌ நடுவில்‌ கடம்பமர‌க்காடு; அதற்குள்‌ புஷ்பராக-ரத்னத்தினா லான ஒரு கோட்டை. அதற்கும் உள்ளாக ஒன்றற்குள்‌ ஒன்றாக பத்ம ராக-கோமதக -வைர-வைதூர்ய-இந்த்ரநீல-முத்து-மரகத-பவள- மாணிக்யமயமான ரத்னக்‌ கோட்டையெல்லாம்‌ கடந்து சென்றால்‌ நடுவில்‌ ஒரு ஆயிரம் கால்‌ மண்டபம்‌; அதன்‌ நடுவில்‌ அம்ருதமயமான ஒரு குளம்‌; அம்ருதமயக் குளத்திற்கு நடுப்புறம்‌ , ஆநந்தமயக்‌ குளம்‌, ஆநந்தமயக் குளத்தின்‌ நடுப்புறம்‌ விமர்சவாபிகை என்ற குளம்‌. இதன்‌ நடுவில்‌ இளங்கதிரவனது போன்ற ஒளி திகழும்‌ இடம்‌. இதற்கும்‌ நடு வில்‌ நிறை-மதியினுடையது போன்ற ஒளி நிறைந்த இடம்‌. இதற்கும்‌ நடுவில்‌ மஹாசிருங்காரமயமான அகழி ஒன்று உள்ளது. அதன்‌ நடுவே ஒரு பெரும்‌ தாமரைக்காடு; அதன்‌ நடுவண்‌ சிந்தாமணிக்‌ கற்களால்‌ சமைத்த ஒரு பவனம். அதன்‌ நான்கு புறமும்‌ நான்கு வாயில்கள்‌ பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர ஆம்‌நாயங்களுக்குரிய மந்த்ரங்களின்‌ வடி வங்களாக அந்த நான்கு வாயிற்படிகளும்‌ உள்ளன. அந்த ராஜ பவனத் திற்குள்‌ ரத்னமயமான பெரிய தீபங்கள்‌ வட்டமாக அமைந்து ள்ளன! இநதத்‌ தீப வட்டத்தின்‌ நடுவில்‌ ரத்னகசிதமான பெரிய ஸிம்ஹாஸ னம்; இவ்வரியணையின்‌ நான்கு கால்களும்‌ ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன்‌, ஈசுவரன்‌ ஆகியவர்களால்‌ ஆவேசிக்கப் பட்டுள்ளன. அந்த ஸிம்ஹாஸனத்தில்‌ அமர்வதற்கான ஆதாரப்‌ பலகை ஸதாஶிவனால்‌ ஆவேசிக்கப் பட்டுள்ளது. அப்பலகையின் மீது அன்னத்தூவிகளாலான மெத்தை, அன்னத்தூவிகளாலான திண்டு பின்னால்‌ உள்ளது. அம் மெத்தைமின் மீது செவ்‌வரக்குச்‌ சாயப்‌ போர்வை விரிக்கப்பட்டு ள்ளது. ஸிம்ஹாஸனத்தில்‌ மேற்புறத்தில்‌ பெரிய விதானம்‌ அமைக்கப் பட்டுள்ளது, மஹாமாயா வடிவினதான ஒரு பெரிய மெல்லிய திரை விமானத்திலிகுந்து தொங்குவதாய்‌ நாற்புறமும்‌, ஸிம்ஹாஸனத்தின்‌ ஆதாரப்‌ பலகை வரையில்‌ அலைகிறது. இத்துணை ஆடம்பரமுடைய கட்டிலில்‌ அன்னத் ‌தூவி மெத்தையில்‌ என்றும்‌ பதினாறாட்டைப்‌ பிராய எழில்‌ ஒழுகும்‌ மஹாகாமேஶ்வரரது இடது மடியில்‌ மஹா காமேஶ்வரியாம்‌ லலிதா மஹாத்ரிபுஸுந்தரி பரா பட்டாரிகை, அவனால்‌ அணைத்துக்‌ கொள்ளப்பட்டவளாய்‌ அமர்ந்துள்ளாள்‌. மஹாகாமேஶ்வரியும்‌ என்றும்‌ பதினாறாட்டைப்‌ பிராயத்தினளாய்‌ விளங்‌குகிறாள்‌. புன்முறுவல்‌ அழகு அவளது முக மண்டலத்தில் செங்கோல்‌ செலுத்துகிறது. திரு வாயில்‌ மெல்லப்படும்‌ கற்பூர வீடிகை என்ற தாம்பூலத்தின்‌ நறுமணம்‌ உலகெங்கும் வியாபிக்கிறது. இத்தகைய திருக் ‌கோலத்துடன்‌ ஆதிசக்தியாம்‌ அன்னை மஹாத்ரிபுர ஸுந்தரி ஸ்தூலதம வடிவில்‌ கருதப் படுகிறாள்‌.
நம்முடையது போன்ற, தேசகாலங்களுக்குத்‌ தொடர்பு டையதாக அன்னைக்குக்‌ கொடுக்கப்பட்ட இந்த வடிவில்‌ அன்னை‌ பல‌ திரு விளையாடல்களையும்‌ புரிந்ததாக அவளது பராக்ரமத்தைப்‌ புராணங்கள்‌ வர்ணிக்கின்றன. மஹாவிஷ்ணு ராவணன்‌ முதலிய அரக்கர்களை அழிப்பதற்கு ராமன்‌ முதலிய வடிவங்களில் (விளங்கி யது) அவதரித்தது போல்‌, சூரபத்மனை அழிக்க சுப்ரமண்யக்‌ கடவுள்‌ அவதரித்தது போல்‌ மஹாகாமேஶ்வரியும்‌ ப⁴ண்டா³ஸுரன்‌ என்ற அஸுரனை அழிப்பதற்காக மஹாத்ரிபுரஸுந்தரியாக விளங்குகி றாள்‌. பரமஶிவனது நெற்றிக்‌ கண்ணால்‌ எரிந்துபோன மன்மதன்‌ சாம்பற் குவியலாக ஆகிவிடுகிறான்‌. அந்தச்‌ சாமபற் குவியலிலிருந்து ப⁴ண்டா³ஸுரன்‌ தோன்றுகிறான்‌. அவன்‌ தோன்றிய உடனே ப்ரஹ்ம தேவன்‌, தன்னுடைய படைப்பையெல்லாம்‌ விஞ்சிய ஒரு விசித்ரமான படைப்பாக அல்லவோ உள்ளது. இவ்வஸுரன்‌ தோன்றியது என்று, “ப⁴ண்ட்‌³, ப⁴ண்ட்‌³” என்று விண்டு சிரிக்கிறான்‌. அதனாலேயே அவ் வஸுரனுக்குப்‌ ப⁴ண்டா³ஸுரன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதாம்‌, ப⁴ண்டா³ ஸுரன்‌ உலகிற்குக்‌ கொடுக்கும்‌ இன்னல்களை அளவிட்டுச்‌ சொல்ல இயலாது: தேவர்கள் யாவரும் வருந்துகின்றனர். அவனை அழிப்பதற் க்கு வேண்டிய முயற்சியில்‌ ஈடுபடுகின்றனர்‌. பல ஆயிரம் மைல்கள்‌ சதுரமுடைய ஒரு யாக குண்டம் அமைத்து வெகு நீண்டநாள்‌ யாகம்‌ செய்கின்றனர்‌. ஆவர்கள்‌ யாகம்‌ செய்த அக்னி குண்டத்திற்கு “चिदग्निकुण्डं” “சித³க்³னிகுண்ட³ம்‌” என்று பெயர்‌. யாகத்தில்‌ பூர்ணாஹுதி வழங்கிய தருணத்தில்‌, அந்த அக்னி குண்டத்திலிருந்து அன்னை ஆதிசக்தி உதிக்கிறாள். பராசக்தியாய்‌, இச்சா-ஞான-க்ரியா சக்தியாய்‌ விளங்குகிறாள்‌. மஹாகாமேஶ்‌வர னுக்கும்‌ மஹா காமேஶ்வரிக்கும்‌ திருமணம்‌ நடத்தி வைக்கின்றனர்.‌ தேவர்களும்‌ மஹரிஷிகளும்‌ அவளது பெருமையைப்‌ பாடுகின்‌றனர்.‌ ப⁴ண்டா³ ஸுரனை அழிப்பதற்குப்‌ பெரும்‌ படையைத்‌ திரட்டிக் கொண்டு புறப்படுகிறாள‌. யானைப்‌ படைக்குத்‌ தலைவியாய் ஸம்பத்கரீ என்‌ற தேவதை செல்கிறாள்‌. குதிரைப்‌ படைக்குத்‌ தலைவியாய்‌ அஶ்வாரூடை செல்கிறாள்‌. சக்ரராஜம்‌ என்ற தேரில்‌ அமர்ந்த வண்ணம்‌ அம்பிகை போர்க்‌ கோலம்‌ பூண்ட பொலிவுடன் விளங்குகிறாள்‌. கேய-சக்ரம்‌ என்ற தேரில்‌ ப்ரதான-மந்திரி‌ ஸ்தானத்தில்‌ மஹாசியாமளை விளங்குகிறாள்‌. கிரி-சக்ரம்‌ என்ற தேரில்‌ மஹாவாராஹி அமர்நதுள்ளாள்‌. பண்டனுடன்‌ பெரும்‌ போர்‌ தொடங்குகிறது. அப்போரில்‌ பல சக்தி தேவதைகளும்‌ காட்டிய பராக்மத்தில்‌ அம்பிகை பெரு மகிழ்ச்சியடைகிறாள்‌. காமேஶ்வரீ, பகமாலினீ முதலிய பதினைந்து திதிநித்யா தேவதைகள்‌ அப்போரில்‌ காட்டிய பராக்ரமத்தில்‌ தன்‌ விழிகளைச்‌ செலுத்தி எத்துணை ஆர்வத் துடன்‌ அன்னை பார்க்கிறாள்‌! ஜ்வாலாமாலினி என்ற தேவதை ஸைன் யத்தைச்‌ சுற்றிலும்‌ காப்பாக நெருப்புக்‌ கோட்டை ஒன்றை அமைக் கிறாள்‌! அன்னையின்‌ திருக்குழத்தை பாலா த்ரிபுரஸுந்தரி ப⁴ண்டா³ ஸுரனின்‌ பிள்ளைகளைக்‌ கொன்ற பொழுது அன்னை அடைந்த மகிழ்ச்சி எவ்வளவு எனச்‌ சொல்லக்‌ கூடுமோ! தன்முன்‌ உரு வெளித் தோற்றம் போல்‌ புலப்பட்ட மஹாகாமேஶ்வரனைக்‌ காதலுடன்‌ மஹா காமேஶ்வரி கண்ணுற்றவுடன்‌ மஹாகணபதி பிறந்து விடுகிறார்‌. பிறந்தவுடனேயே மஹாகணேசன்‌ காட்டிய போர்த்‌ திறமைதான்‌ என்னே! ப⁴ண்டா³ஸுரன்‌ அமைத்திருந்த விசித்ரமான विघ्नयन्त्रं விக்னயந்த்ரத்தை (தடைப்‌ பொறியை) உடைத்து எறிந்து விடுகிறான்‌ மகாகணேசன்‌. மந்த்ரிணி என்ற மஹா சியாமளை விசுக்ரன் என்பவனைக்‌ கொல்கிறாள்‌. தண்டினி என்ற மஹாவாராஹீ ‌ விஷங்கன் என்பவனது உயிரை வாங்குகிறாள்‌. ப⁴ண்டா³ஸுரன்‌ செலுத்திய அஸ்த்ரங்களுக் கெல்லாம்‌ அவைகளை அழிக்கும்‌ எதிரான அஸ்திரங்களை ஏவி அன்னை ப⁴ண்டா³ஸுரனது ஆற்றல்‌ பழுதுபடச்‌ செய்கிறாள்‌. ப⁴ண்டா³ஸுரன்‌ அனுப்பிய ஆஸுர அஸ்த்ரங்களை அழிக்க அன்னையின்‌ விரல்களிலிருந்து புறப்பட்ட விஷ்ணுவின்‌ பல அவதார அஸ்த்ரங்கள்‌ செய்த இவ்விளையாட்டை என்னென்போம்‌? ப⁴ண்டா³ஸுரனது சகல சேனைகளும்‌ அன்னை அனுப்பிய महा पाशुपत अस्त्र மஹாபாஶுபத அஸ்த்ரத்தால்‌ எரிந்து அழிந்தன. இறுதியில்‌ महा कामेश्वर अस्त्र மஹாகாமேஶ்வர அஸத்ரத்தைச்‌ செலுத்தி அன்னை ப⁴ண்டா³ஸுரனையும்‌ அவனது தலைநகரமான “ஶூன்யக நகரம்‌” என்ற நகரத்தையும்‌ அழித்தாள்‌. ப்ரம்மா, விஷ்ணு, இந்திரன், மற்ற தேவர்கள்‌ யாவரும்‌ அன்னையைத்‌ துதிப்பாடல்களால்‌ போற்றுகின் றனர்‌. மஹாகாமேசீ-மஹாகாமேசர்களின்‌ காதலினின்றும்‌ மறுபடியும்‌ மன்மதன்‌ புத்துயிர்‌ பெறுகிறான்‌. இவ்வாறு‌ மன்‌மதன்‌ புத்துயிர்‌ (Resurrection) பெறும்‌ வரையிலுள்ள கதாபாகமும்‌ ப்ரஹ்மாண்ட புரா ணத்தின் கடைசியிலுள்ள லலிதோபாக்யானத் தில்‌ அழகாக வர்ணிக்கப்பட்டுள்ள து. புராணக்‌ கதைகள்‌ யாவுமே அதிபாமரர் ‌களின்‌ தன்மை கருதிக்‌ கடவுளின்‌ ஸ்தூலதம வடிவின்‌ வழிபாட்‌டில்‌ வெற்றி பெறுவதற்காகவே என அறிதல்‌ வேண்டும்‌. ஆனால் மேற் பரப்பாக வெறும்‌ கதைகளை போல்‌ உள்ள புராணங்க ளிலும்‌ உயர்‌ந்த தத்துவ நுட்பங்கள்‌ இலைமறை காய்‌களை போல்‌ வைக்கப் பட்டுள் ளன என்பதை மறந்துவிடக்‌ கூடாது உயர்ந்த தத்துவ நுட்பங்கள்‌ பாமரர்களின்‌ நலன்‌ கருதி கதைகள்‌ வடிவில்‌ கொடுக்கப் பட்டுள்ளன என்‌பதே பெரியோர் களின்‌ ஒரு தலையாக முடிவு செய்ததாகும்‌. ஆதிசங்கரர்‌ இயற்றிய ப்ரம்மஸூத்ர பாஷ்யத்தின் வியாக்யா னமான பாமதிக்கு உரை எழுதிய அமலாநந்த ஸரஸ்வதி தனது கல்ப தரு என்‌ற உரையில்‌ அந்தரதிகரணம்‌ என்ற பத்தியின்‌ தொடக்கத் தில்‌ இரண்டு சுலோகங் களில்‌, புராண பயன்க‌ளை மறை பொருளைப் பற்றிக்‌ குறிப் பிட்டுக்‌ கூறியிருப்பதை உற்று நோக்குக. கடவுண்மை வாழ்வைத்‌, தூய பேரறிவு நிலையை இப்பொழுதே, இவணே (now and here) தங்களிடத் தில்‌ நிறை வேற்றிக்‌ கொள்ள முடியாத பாமரர்களி டமும்‌ கருணை கொண்டு அப்பேருண்மை வாழ்வை என்றாவது, எப்பிறப்பிலாவது பாமரர்களும்‌ பெறவேண்டும்‌ என்று அப்பே‌ருண்மைக்குத்‌ தொடர்பு டைய நுட்‌பங்களை யெல்லாம்‌ கதை வடிவங்க ளில்‌ பெரியோர்கள்‌ புராணங்களாகச்‌ சமைத்து வைத்‌துள்ளனர்‌.
இதுகாறும்‌ ஸ்தூல-தமம்‌ (the grossest) என்ற வடிவத்தைப்பற்றி அறிந்த நாம்‌, இனி அன்னையின்‌ ஸ்தூலதல-தர (the grosser form) வடிவத்தைச்‌ சிறிது அறிவோம்‌. கதா ரூபத்தில்‌ கொடுக் கப்பட்ட உண்மைகள் எல்லாம்‌ ரேகா ரூபத்தில்‌ (geometrical representation, linear representation) கொடுக்கப்படும் பொழுது, அதுவே அன்னையின் ‌ சக்ரம்‌ அல்லது யந்த்ரம்‌ என்பதும்‌ இதுவே. ஸ்ரீசக்ரத்தின்‌ வடிவம்‌ அல்லது ஸ்ரீயந்தரம்‌ இங்கு கொடுக்கப்பட்டுளது.

ஸ்ரீநகரத்தின்‌ நடுவண் உள்ள அன்னையின் ராஜ பவனம் ஸ்ரீசக்ர வடிவத்தில்‌ அமைக்கப்பட்டதுதான்‌ என அறிய வேண்டும். ப⁴ண்டா³ ஸுரனைஅழிப்பதற்காக அன்னை போர்க் கோலம் பூண்டு அமர்ந்த தேரும் ஶ்ரீசக்ர வடிவ முடையது தான் என அறிய வேண்டும்‌, ஸ்ரீசக்ரம்‌ ஒன்பது ஆவரணங்கள் உடையது. ஆவரணங்கள் என்றால் ‌ மறைப்புக் கள்‌ எனப்பொருள்‌. ஆனால், இவ்விடத்தில், ஒன்றற்குள் ஒன்றாக அமை ந்துள்ள அங்கணங்கள்‌ என அறிய வேண்டும்‌. உட்புறமுள்ள அங்க ணத்தை நோக்கி, வெளிப்புறம்‌ உள்ள அங்கணம்‌ மறைப்புப் போல இருப்பதால், எல்லாமே ஆவரணங்கள்‌ என்று கூறப் படுகின்‌றன, ஒன்பது ஆவரணங்களும்‌ கடக்கப் படுகையில், ஆவரணம்‌ (மறைப்பு) அற்ற பேருண்மை வடிவாக அன்னையின் உண்மையான‌ பெம்மை புலப் படுகிறது. அந்தந்த ஆவரணங்களில்‌ அன்னையின், ஆதிசக்தி யின் கூறு ஒரோர்‌ வகையில்‌ விளங்குகிறது. ஆக ஒன்பது ஆவரணங் களுமே சேர்ந்தது அன்னையின்‌ திருமேனியாகவே பாவிக்கப்படுகி றது. இந்தத்‌ திருமேனியை தாமிரத்‌ தகட்டிலோ வெள்ளித்‌ தகட்டிலோ, தங்கத்‌ தகட்டிலோ, பஞ்சலோகத்‌ தகட்டிலோ அல்லது படிகம்‌ முதலிய கற்களிலோ பொறித்து 3 வழிபடுவது முறை ஆகும்.‌ பட்டுத்‌ துணியில்‌ எழுதியோ, அல்லது பூர்ஜபத்ரம்‌ (பூவாசு மரத்தின்‌ இலை) முதலிய வற்றில்‌ வரைந்தும்‌ வழிபடுவது உண்டு, (பூர்ஜம்‌ என்பது இமய மலைச்‌ சாரலில்‌ காணப்படும்‌ ஓருவகை மரம்‌). தகடுகளில்‌களில் ஊர்த்வ ரேகையாகவோ (embossed lines) அல்லது அதோ ரேகையாகவோ (engraved lines) ஸ்ரீசக்ரத்தை வரையலாம்‌. ஊர்த்வ ரேகையாக வரைவது விசேஷமாகும்‌, ஸ்ரீசக்ரத்தை மேரு வடிவில்‌ பூசிப்பது இன்னும்‌ விசேஷமாகும்‌. சாதாரணத்‌ தகட்டில்‌ வழிபடும் பொழுதும்‌ மேரு வடிவத்திலேயே ஸ்ரீசக்ரத்தை பாவனை செய்யவேண்‌டும்‌. அதன்‌ விளக்கம்‌ அறிவோம்‌. ஸ்ரீசக்ரம்‌ ஒனபது ஆவரணங்களை உடையது என்று கூறினோம்‌. அவையாவன:-
(1) த்ரைலோக்ய மோஹனம்‌ (त्रैलोक्यमोहनं)
(2) ஸர்வாஶாபரிபூரகம்‌ (सर्वाशापरिपूरकं)
(3) ஸர்வ ஸம்க்ஷோப⁴ணம்‌ (सर्वसंक्षोभणं)
(3) ஸர்வஸௌபா⁴க்³யதா³யகம்‌ (सर्वसौभाग्यदायकं)
(5) ஸர்வார்த2 ஸாதகம்‌ (सर्वार्थसाधकं)
(6) ஸர்வரக்ஷாகரம்‌ (सर्वक्षाकरं)
(7) ஸர்வரோக³ஹரம்‌ (सर्वरोगहरं)
(8) ஸர்வஸித்³தி⁴ப்ரதம்‌ (सर्वसिद्धिप्रदं)
(9) ஸர்வாநந்த³மயம்‌. (सर्वानन्दमयं)
த்ரைலோக்யமோஹனம்‌ என்ற ஆவரணத்தை த்ரைலோக்ய மோஹன சக்ரம்‌ என்றும்‌ கூறுவதுண்டு, . இங்ஙனமே மற்ற எட்டு ஆவரணங்க ளையும்‌ “சக்ரம்”‌ என்ற பெயரால்‌ குறிப்பிடுவார்கள்‌, ஆனால்‌ இந்த ஒன்பது ஆவரணங்கள்‌ அல்லது சக்ரங்கள்‌ சேர்ந்து ஸ்ரீசக்ரமாகிறது என்பதை மறந்துவிடக்‌ கூடாது. ஸர்வாநந்தமய சக்ரம்‌ என்ற ஒன்பதா வது அவரணம்‌ அதற்கு முந்தியதான ஸர்வஸித்திப்ரத சக்ரம்‌ என்ற எட்டாவது ஆவரணத்தின் நடுவில்‌ உள்ள பிந்துவாகும்‌. எட்டாவது ஆவரணம்‌ முக்கோண வடிவுடையது. எட்டாவது ஒன்பதாவது ஆவரணங்கள்‌ ஒன்றற்‌கொன்று பிரிக்க முடியாத தொடர்பில்‌ உள்ளன என அறிய வேண்டும்‌, முதல்‌ ஆவரணம்‌ ஒன்றற்குள்‌ ஒன்றான மூன்று சதுரங்கள்‌ (நான்கு வாயிற்படிகளுடன்‌ நான்கு பக்கங்களிலும்‌ கூடிய) வடிவில்‌ உள்ளது. இம்முதல்‌ ஆவரணத்தின்‌ வெளிச்‌ சதுரத்தின்‌ பக்கம்‌ எவ்வளவு நீளமோ அவ்வளவு உயரம்‌ பிந்து என்ற ஸர்வாநந்தமய சக்ரத்தின்‌ மேற்புறம்‌ என்று அறிய வேண்டும்‌. ஆகவே, ஸ்ரீசக்ரம்‌ ஒரு கனசதுரம்‌ (cuboid‌) வடிவில்‌, உள்ளது போல்‌ கருதப்பட்டு வெளியில்‌ அந்தந்த ஆவரணங்களுக்கு உரிய பகுதிகள்‌ நீங்கலாக மற்றப்‌ பகுதி கள்‌ செதுக்கி எடுக்கப்பட்டு விட்டது போன்ற வடிவில்‌ தியானிக்கப் படவேண்டும்‌, த்ரைலோக்ய மோஹன சக்ரம்‌ என்ற முதல்‌ ஆவரணம் ஒரு தளத்தில் (Plane) இருக்குமானால்‌ அதனையும் விட உயரமான தளத்தில்‌ (higher plane) அடுத்த ஸர்வாஶாபரிபூரக சக்ரம்‌ உள்ளதாக அறிய வேண்டும்‌. இங்ஙனமே முந்தியதைவிடப்‌ பிந்திய ஆவரணம்‌ உயர்த்த தளத்தில்‌ (higher plane) தியானிக்கப்பட்டு, பிந்து சக்ரம்‌ என்ற ஒன்பதாவது ஆவரணம்‌ எல்லாவற்றிற்கும்‌ மேற்பட்ட தளத்தில்‌ (the highest plane) தியானிக்கப்பட வேண்டும்‌.
இப்படி முந்தியதைவிடப்‌ பிந்திய ஆவரணம்‌ உயர்ந்த தளத்தில்‌ இருக்கும்‌ வண்ணமே ஸ்ரீசக்ரத்தை அமைத்துக்‌. கொண்டுவிட்டால்‌, அதுவே ஸ்ரீசக்ரமேரு என்று சொல்லப் படுகிறது. மிகத்‌ தாழ்த்த தளத் திலுள்ள த்ரைலோக்ய மோஹன சக்ரத்திற்கும்‌ (the lowest plane), மிக உயர்த்த தளத்தின‌ தான ஸர்வாநந்தமய சக்ரத்திற்கும்‌ (the highest plane) இடையிலுள்ள தூரம்‌ (height) த்ரைலோக்ய மோஹன சக்ரத்தின்‌ வெளி ச்‌சதுரத்தின்‌ ஒரு பக்கத்தின்‌ (side) அளவு (length‌) உள்ளதாகும்‌. இவ்வாறு‌ அமைக்க்படுவது ஸம்பூர்ண மேரு(सम्पूर्ण मेरु) எனப்படும்‌. இவ்வுயரம பாதியானால்‌ (அதாவது த்ரைலோக்ய மோஹன சக்ரத்தின் ‌வெளிச்‌ சதுரப்பக்கத்தில்‌ பாதியானால்‌), அர்த்தமேரு (अर्धमेरु) எனப்படும்‌. ஸ்ரீசக்ரத்தை மேரு வடிவிலேயே பூஜை செய்ய வேண்டும்‌. தகடுகளில வரைந்து வழிபடுபவர்கள், பூஜா காலத்தி லாவது பாவனையிலாவது (imagination) மேரு வடிவத்திலேயே ஸ்ரீசக்ரத்தைக் கொள்ளுதல்‌ வேண்டும்‌. ஸ்ரீசக்ர பூஜைதான்‌ நவாவரண பூஜை எனப் படுகிறது. இது நவாவரண மஹாயஜ்ஞமாகக் கருதப் படுகிறது. இந்த நவாவரண மஹாயஜ்ஞத்தை நாள்தோறும்‌ தவறாது செய்பவன்‌ வாஜபேயம்‌, ஸோமயாகம்‌, அச்வமேதம்‌ போன்ற யஜ்ஞம்‌ செய்த தீக்ஷிதர்க ளை எல்லாம்‌ காட்டிலும்‌ எத்தனையோ கோடி மடங்கு மேலான பெருமை யுடையவன்‌ என அறுதியாக உணர வேண்டும்‌.
முதல்‌ ஆவரணம்‌:- பஞ்சதஶாக்ஷரியின் ‘ல’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக உள்ள சதுரத்தின், மூன்று கோடுகள் மஞ்சள், வெள்ளை, சிகப்பு நிறங்களுடையது, பூமியின் தத்துவமான த்ரைலோக்ய மோஹன சக்ரம்‌ என்ற முதல்‌ ஆவரணத்தில்‌ இருபத்தெட்டு தேவதைகள்‌ பூஜிக்கப் படுகின்‌ற னர்‌. முதல்‌ சதுரத்தில்‌ பத்து தேவதைகளும்‌, அதற்குள்ளான இரண்டாவது சதுரத்தில்‌ எட்டு தேவதைகளும்‌, அதற்கு‌ உள்ளான சதுரத்தில்‌ பத்து தேவதைகளும்‌ பூஜிக்கப் படுகின்றனர்‌. முதல்‌ பத்து தேவதைகள்‌ ஸித்³தி⁴ தேவதைகளாம்‌; இடையிலுடள எட்டு தேவதைகள்‌ மாத்ருகா தேவதைகளாம்‌; இறுதியிலுள்ள பத்து தேவதைகள்‌ முத்ரா தேவதைகளாம்‌. இந்த இருபத்தெட்டு தேவ தைகளுக்கும்‌ ப்ரகடயோகினிகள் என்று பெயர். இவ்‌ இருபத்தெ ட்டு தேவதைகளுக்கும்‌ தலைவியாக, அதாவது த்ரைலோக்ய மோஹன சக்ரத்‌ தலைவியாக அம்பிகை மஹாத்ரிபுரஸுந்தரி, த்ரிபுரா என்ற நாமதேயத்துடன்‌ விளங்குகிறாள்‌. இவளது வலது புறத்தில்‌ அணிமாஸித்³தி⁴ தேவதையும்‌, இடது புறத்தில்‌ ஸர்‌வ ஸம்க்ஷோபிணீ முத்ரா தேவதையும்‌ விளங்குகின் றனர்‌. இந்த சக்ரத்தில்‌ அம்பிகைக்கு ஸர்‌வ ஸம்க்ஷோபிணீ என்‌ற முத்ரை காட்டப்படவேண்டும்‌.

குறிப்பு :- நவாவரண மஹாயஜ்ஞத்தில்‌ மொத்தம்‌ ஐம்பத்தொன்று முத்ரைகள்‌ இருக்கின்‌றன. அவைகளில்‌ ஆவரண பூஜாகாலத்தில் காட்டப்பட வேண்டிய‌ முத்ரைகள்‌ பத்து. இந்தப் பத்து முத்ரைகளும்‌ ஸ்ரீசக்ர பூஜையில்‌ வெகு வெகு முக்யமானவைகள்‌.
இரண்டாவது ஆவரணம்‌:- பஞ்சதஶாக்ஷரியின் ‘ஸ’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக சந்த்ரனின் தத்துவமான ஸர்வாஶா பரிபூரக சக்ரம்‌ என்ற இரண்டாவது ஆவரணம்‌ வெள்ளை நிறமான பதினாறு தளங்களை உடையது. த்ரைலோக்ய மோஹன சக்ரத்திற்கு உள்ளடங்கியது. ஆனால்‌ த்ரைலோக்ய மோஹன சக்ரததிற்கு உயர்ந்த தளத்தில்‌ (Higher plane) விளங்கு வது. காமாகர்‌ஷிணி முதல்‌ சரீராகர்‌ஷிணி இறுதி யாக பதினாறு தேவதைகள்‌ இங்கு பூஜிக்கப் படுகின்றனர்‌. த்ரிபுரேசீ என்ற பெயருடன்‌ அன்னை இந்த சக்ரத்திற்குத்‌ தலைவி யாக (சக்ரேஶ் வரியாக) விளங்குகிறாள்‌. சக்ரேஶ்வரியின் வலது, இடது புறங் களில்‌ லகிமாஸித்³தி⁴ தேவதையும்‌, ஸர்‌வவித்ராவிணீ முத்ரா தேவதையும்‌ விளங்குகின்றனர்‌. ஸர்‌வவித்ராவிணீ என்‌ற இரண்டாவது முத்ரையை இந்த சக்ர பூஜையின் இறுதியில் காட்ட வேண்டும்‌.

மூன்றாவது ஆவரணம்‌: பஞ்சதஶாக்ஷரியின் ‘ஹ’ என்ற அக்ஷரத் தின் உருவகமாக உள்ள ஶிவனின் அஷ்டமூர்த்தி தத்துவமான ஸர்வஸம்க்ஷோபணம்‌ என்ற மூன்றாவது ஆவரணம்‌ செம்பருத்தி பூவின் நிறமான எட்டு தளங்களை உடையது. இரண்டாவது ஆவரணத் தினுள்‌ அடங்குவதாய்‌, ஆனால்‌ அதனிலும்‌ உயர்ந்த (Higher plane) தளத்திலுள்ளதாய்‌ விளங்குவது மூன்றாவது ஆவரணம்‌. அனங்க குஸுமா முதல் அனங்கமாலினி இறுதியாக எட்டு தேவதைகள்‌ இங்கு பூஜிக்கப்படுகின்‌றனர்‌. த்ரிபுரஸுந்த³ரீ என்று சக்ரேஶ் வரிக்குப்‌ பெயர்‌. ஸித்³தி⁴ தேவதையும்‌ முத்ரா தேவதையும, மகிமா ஸித்³தி⁴யும்‌. ஸர்வாகர்ஷிணி முத்ரையும்‌ ஆவர்‌. முன் போலவே வலது, இடது பக்கங்களில் பூஜை காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வாகர்ஷிணி முத்ரை.

நாலாவது ஆவரணம்‌: பஞ்சதஶாக்ஷரியின் ‘ஈ’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக உள்ள மஹாமாயாரூப பதினாங்கு உலகத்தின் தத்துவமான ஸர்வ ஸெளபாக்கிய தாயகம்‌ என்ற சக்ரம்‌ மாதுளம் பூவின் நிறமான பதினான்கு முக்கோணங்கள்‌ கொண்டது. ஸர்வஸம்க்ஷோபிணி முதல்‌ ஸர்வத்வந்த்வக்ஷயங்கரீ இறுதியாக பதினான்கு தேவதைகள்‌. சக்ரேஶ்வரீ த்ரிபுரவாஸினீ ஈசித்வம்‌; ஸித்³தி⁴ தேவதை; ஸர்வ வஶங்கரீ முத்ரா தேவதை; காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வ வஶங்கரீ ஆகும்‌. ‌

ஐந்தாவது ஆவரணம்‌: பஞ்சதஶாக்ஷரியின் ‘ஏ’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக உள்ள மஹாவிஷ்ணுவின் ரூப தஶாவதார தத்துவ மான ஸர்வார்த்த ஸாதகம்‌ என்ற சக்ரம்‌ ஸிந்தூரத்தின் நிறமான பத்து முக்கோணங்கள்‌ உடையது. ஸர்வ ஸித்³தி⁴ப்ரதா முதல் ஸர்வஸௌபாக்ய தாயினீ இறுதி யாகப்‌ பத்து தேவதைகள்‌ ; சக்ரேஶ்வரீ த்ரிபுராஶ்ரீ ஆவாள்‌; வசித்வம்‌ ஸித்³தி⁴ தேவதை; ஸர்வோன்மாதினி ‌முத்ரா தேவதை; காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வோன்மாதினி.

ஆறாவது ஆவரணம்: பஞ்சதஶாக்ஷரியின் ‘ர’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக உள்ள அக்னியின் ரூபமான தஶகலைகளின் தத்துவ மான ஸர்வரக்ஷாகர சக்ரம்‌ செம்பருத்தி பூவின் நிறமான பத்து முக்கோணங்கள்‌ கொண்டது, ஐந்தாவது ஆவரணத்திலுள்ள பத்து முக்கோணங்கள்‌ பஹிர்தஶாரம்‌ எனப்படும்‌. ஆறாவது ஆவரணத் திற்குறிய பத்து முக்கோணங்கம்‌ அந்தர்தஶாரம்‌ எனப்படும்‌. பத்து முக்கோணங்களிலும்‌ பத்து தேவதைகள்‌ ஸர்வஜ்ஞா தொடங்கி ஸர்வேப்ஸிதபலப்ரதா இறுதியாக.‌ த்ரிபுரமாலினீ சக்ரேஶ்வரீ; ப்ராகாம்யம் ஸித்³தி⁴ தேவதை; ஸர்வமஹாங்குஶா முத்ராதேவதை. காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வமஹாங்குஶா ஆகும்‌.

ஏழாவது ஆவரணம்‌ – பஞ்சதஶாக்ஷரியின் ‘க’ என்ற அக்ஷரத்தின் உருவகமாக உள்ள காமேஶ்வரரின் அஷ்ட ரூப தத்துவமான ஸர்வரோகஹரம்‌ என்ற சக்ரம்‌ பதம்ராக கற்களின் நிறமான எட்டு முக்கோணகளை உடையது; வசினி முகல்‌ கெளலினி இறுதியாக எட்டு வாக்தேவதைகள்‌ சக்ரேஶ்வரீ த்ரிபுராஸித்தா. ஸித்³தி⁴ தேவதை புக்தி; முத்ரா தேவதை ஸர்வகேசரி; காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வகேசரி ஆகும்‌.

எட்டாவது ஆவரணம்‌ :-ஸ்ரீ சக்ரத்தின்‌ நடுவில்‌ உள்ள முக்கோணமே‌ எட்டாவது ஆவரணம்‌; பஞ்சதஶாக்ஷரியின் ‘பிந்து³வின்’ உருவகமாக உள்ள விருக்ஷிபூவின் நிறமான முக்குண தத்துவமான ஸர்வ ஸித்³தி⁴ப்ரதசக்ரம்‌ எனப்படுகிறது. இந்த முக்கோணத்தின நான்கு திசைகளிலும்‌ முதலில்‌ அம்பி கையின்‌ திருக்கரத்தில்‌ ஏந்தப்‌ படும்‌ பாசம்‌, அங்குசம்‌, தனுஸ்‌, பாணம்‌ என்ற ஆயுத தேவதைகளைப்‌ பூசிக்க வேண்டும்‌, இது இந்த ஆவரணத்திலுள்ள விசேஷமாகும்‌, ஏழாவது ஆவரண பூஜை முடிந்ததும்‌, எட்டாவது ஆவரண பூஜை தொடங்குவதற்கு முன்‌ ஆயுத பூஜை களைச்‌ செய்யவேண்டும்‌, முக்கோண வடிவினதான ஸர்வ ஸித்³தி⁴ ப்ரதம்‌ என்ற இந்த எட்டா வது ஆவரண பூஜையில்‌, முக் கோணத்தின்‌ மூன்று கோணங்க ளிலும்‌ முறையே மஹாகாமேஶ்வரீ; மஹா வஜ்ரேஶ்வரீ, மஹா பகமாலினீ என்ற மூன்று தேவதை களையும்‌, முக்கோணத்தின்‌ நடுவில்‌ மஹாத்ரிபுரஸுந்த³ரீ என்ற தேவதை யையும்‌ பூஜிக்க வேண்டும்‌. ஆக இம்‌முக்கோணத்தில்‌ பூஜிக்கப் படுகிற தேவதைகள்‌ நான்கு. ஆயுத தேவதைகளையும்‌ சேர்த்தால்‌ எட்டாகும்‌. ஆனால் ஆயுத தேவதைகள்‌ இந்த எட்டாவது ஆவரண பூஜைக்குள்‌ அடங்கியதல்ல என்றும்‌, ஏழு-எட்டு ஆவரணங் களுக்கு இடையிலுள்ளது என்றும்‌ ஏற்கனவே கூறினோம்‌. எட்டாவது ஆவர ணத்திற்கு சக்ரேஶ்வரீ த்ரிபுராம்பா ஆவாள்‌; ஸித்³தி⁴ தேவதை இச்சா; முத்ரா தேவதை ஸர்வபீஜ முத்ரா; காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வபீஐமுத்ரை ஆகும்‌.

ஒன்பதாவது ஆவரணம்‌ :–எட்டாவது ஆவரணமான முக்கோணத் தின் நடுவில்‌ உள்ள, பஞ்சதஶாக்ஷரியின் ‘நாததின்’ உருவகமாக உள்ள வெளிர்-சிகப்பு நிறமான ப்ரப்ரஹ்ம தத்துவமான பிந்துவே ஒன்பதாவது ஆவரணமாகும்‌. முக்கோணத்தின்‌ மூன்று, பக்கங் களையும்‌ தொட்டுக்‌ கொண்டு (touching the three sides) முக்கோண த்திற்குள்‌, சிறுவட்டமாக தியானிக்கப் பட வேண்டும்‌ பிந்து சக்ரம்‌, தகடு முதலியவை களில்‌ வரையும்‌ பொழுதும்‌ அப்படியே வரைதல்‌ வேண்டும்‌, மரபு தெரியாதவர்கள்‌. முக்கோணத்தின்‌ நடுவில்‌, பக்கங்களைத்‌ தொடாதவாறு சிறு புள்ளியாக அமைத்து விடுகின்றனர்‌. இது சரியல்ல. பிந்துவும்‌ முக்கோணமும்‌ அவினாபாவ சம்பந்தம்‌ உடையவை; ‘ அதாவது ஒன்றுவிட்டு ஒன்று இராத தொடர்பு கொண்டதாம்‌, ஆயினும்‌ முக்கோணம் எந்த தளத்தில்‌ உள்ளதோ, அந்த தளத்திற்கு உயர்ந்த தளததில (Higher plane) எழும்பி இருப்பதாகவே பிந்து கொள்ளப்பட வேண்டும்‌. லலிதா மஹா த்ரிபுரஸுந்த³ரீ பரா பட்டாரிகையைப்‌ பிந்துவில்‌ பூஜிக்க வேண்டும்‌, இவ்வாறு‌ மஹாஷோட³ஶீ உபாஸ கர்கள்‌ பூஜித்தல்‌ வேண்டும்‌, பஞ்சதஶீ, ஸெளபாக்ய வித்யா உபாஸகர்கள்‌ லலிதா மஹாத்ரிபுரஸுந்த³ரீ என்று பூஜிக்க வேண்டும்‌, சக்ரேஶ்வரி என்ற வடிவத்தில்‌ அம்பிகைக்கு இங்கு மஹாத்ரிபுரஸுந்த³ரீ என்று பெயர்‌. பல இடங்களில்‌ த்ரிபுரா, த்ரிபுரஸுந்த³ரீ, மஹா த்ரிபுர ஸுந்த³ரீ, லலிதா மஹாத்ரிபுர ஸுந்த³ரீ, லலிதா மஹா த்ரிபுரஸுந்த³ரீ பரா பட்டாரிகை என்று வரும்‌ பெயர்களில்‌ உள்ள வேற்றுமையை உற்று நோக்குக; அப்பெயர்களால்‌ குறிப்பிடபட்ட தேவதைகள்‌ தனித் தனி தேவதா ஸ்வரூபங்கள்‌ என அறிக, ஒன்பதாவது ஆவர ணத்தில்‌ ஸித்³தி⁴ தேவதை ப்ராப்தி; முத்ரா தேவதை ஸர்வ யோனி; காட்டப்பட வேண்டிய முத்ரை ஸர்வயோனி முத்ரை ஆகும்‌.

நவாவரண பூஜை பஞ்சதஶீ உபாஸகர்களுக்கு இவ்வளவே ஆகும்‌. பிந்துவுக்கும்‌ மேம்பட்ட ஸ்தானத்திலுள்ள பூஜை பஞ்சதஶீ உபாஸக ர்களுக்குக்‌ கிடையாது. அவர்களுக்குப்‌ பூஜையில்‌ பத்தாவது முத்ரையும்‌ இல்லை என அறியவும்‌.
மஹாஷோட³ஶீ உபாஸகர்களுக்கு ஏற்பட்ட விசேஷம்‌ அடியிற்‌ கண்டதாகும்‌, அவர்கள்‌ ஒன்பதாவது ஆவரணமான பிந்துவுக்கும்‌ அப்பாற்பட்ட (அதீதமான) இடத்தில்‌ துரீயவித்யை என்ற பதின் ‌மூன்று எழுத்து மந்த்ரத்தால்‌ பூஜை செய்ய வேண்டும்‌. இங்கு துரீய வித்யையான அம்பிகையே சக்ரேஶ்வரி, தனித்த சக்ரேஶ்வரி இல்லை, ஆனால்‌ பத்தாவது ஸித்³தி⁴ தேவதை ஸர்வகாம ஸித்³தி⁴ யும்‌, பத்தாவது முத்ராதேவதை “ஸர்வ த்ரிகண்டா”முத்ரா தேவதை யும்‌ இங்கு அம்பிகையின்‌ வலது, இடது பக்கங்களில்‌ பூஜிக்கப் படு கின்றனர்‌. இங்கு காட்டப்படும்‌ முத்ரை ஸர்வத்ரிகண்டா முத்ரை ஆகும்‌.

முதல்‌ ஆவரணத்திலுள்ள இருபத்தெட்டு தேவதைகளுக்கும்‌ ப்ரகட-யோகினிகள்‌ என்ற பொதுப் ‌பெயர்‌ இருப்பது போல்‌ மற்ற ஆவரணங்களிலும்‌ பெயர்கள்‌ உண்டு: அவையாவன:-
(1) ப்ரகடயோகி³னிகள்‌ प्रकटयोगिनीः
(2) கு³ப்தயோகி³னிகள் गुप्तयोगिनीः
(3) கு³ப்ததரயோகி³னிகள்‌ गुप्ततरयोगिनीः
(4) ஸம்ப்ரதா³யயோகி³னிகள்‌ संप्रदाययोगिनीः
(5) குலோத்தீர்ணயோகி³னிகள்‌ कुलोत्तीर्णयोगिनीः
(6) நிக³ர்ப⁴யோகி³னிகள்‌ निगर्भयोगिनीः
(7) ரஹஸ்யயோகி³னிகள்‌ रहस्ययोगिनीः
(8) அதிரஹஸ்யயோகி³னிகள்‌ अतिरहस्ययोगिनीः
(9) பராபராதிரஹஸ்யயோகி³னி परापरातिरहस्ययोगिनी
ஒவ்வொரு ஆவரண பூஜையின்‌ இறுதியிலும்‌ கந்தம்‌, புஷ்பம்‌, தூபம்‌, தீபம்‌ நைவேத்யம், தாம்பூலம்‌, கற்பூர நீராஜனம்‌ என்ற உபசாரங்க ளைக்‌ குறைவின்றிச்‌ செய்ய வேண்டும்.

மஹாத்ரிபுரஸுந்த்ரிக்கும் அங்க-உபாங்க-ப்ரத்யங்க-தேவதைகள் உண்டு. அங்கதேவதை பாலை, உபாங்கதேவதை அன்னபூர்ணா, ப்ரத்யங்க தேவதை அஶ்வரூடை. இவர்களையும் பூஜித்தல் வேண்டும்.
இவ்வாறு‌ விரிவான முறையில்‌ ஸ்ரீசக்ர பூஜைசெய்யப்பட வேண்டும்‌. நவாவரண பூஜை செய்வதற்கு முந்தி அங்கமாக க்ரியா கலாபங்கள்‌ ஏராளமாக உள்ளன. ஸ்ரீசக்ர பூஜையை ந்யாஸ ரூபமாகச்‌ செய்யலாம்‌; கட்கமாலா என்ற ஸ்தோத்ரத்தைப்‌ படிப்பதாலும்‌ ஸ்ரீசக்ரபூஜை ஆகிறது. விரிவான முறையில்‌ க்ரியா கலாபங்களுடனும்‌ செய்யலாம்‌
(1) ஸ்ரீசக்ர பூஜையில்‌ பூ⁴-ப்ரஸ்தார பூஜை, மேரு-ப்ரஸ்தார பூஜை, கைலாஸ‌-ப்ரஸ்தார பூஜை (भू प्रस्तार पूजा-मेरु प्रस्तार पूजा-कैलास प्रस्तार पूजा) என்று மூன்று வகைகள்‌ உள்ளன.
(2) பாஹ்யபூஜை, ஆந்தர பூஜை (बाह्यपूजा-आन्तरपूजा)என்று இரண்டு வகைகள்‌ உள்ளன.
(3) பஹிர்யாகம்‌, அந்தர்யாகம்‌, மஹாயாகம்‌ (बहिर्याग-अन्तर्याग-महायाग) என்று மூன்று வகைகள்‌ உள்ளன.
(4) அபராபூஜை, பராபரா பூஜை, பராபூஜை (अपरा-परापरा-परा पूजा) என்று மூன்று வகைகள்‌ உள்ளன.
அந்தந்த அதிகாரிகள்‌ தங்கள்‌ தங்கள்‌ பக்குவத்திற்கும்‌, பண்பாட்டிற் கும்‌ உரிய பூஜையைக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. இல்லாவிடில் மனக்‌ குழப்பம்‌ எஞ்சுவதாகும்‌.
ஶிவத்³ருʼஷ்டி என்ற க்ரந்தத்தில் ஶ்ரீசிதாநந்தநாதர் கண்ட சுலோகங்கள், தன்னுடைய ஸபர்யா வாஸனா விமர்சனம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

शिवदृष्टि-
बिन्द्वादि भूपुरान्तानि नवचक्राणि भैरवि । ईक्षणादि प्रवेशान्ता सृष्टिरीशेन निर्मिता ॥
चतुरश्रादि बिन्द्वान्त नव चक्राणि सुन्दरि । जग्रदादि विमोक्षान्तः संसारो जीव कल्पितः ॥
भूपुरादि त्रिभिश्चक्रै र्विश्व तैजस प्राज्ञयोः । धामत्रयं विभाव्यं तदूर्ध्वे तत्पदमैश्वरं।
ततो बहिर्दशारे तु गुरूपसदनं स्मृतं । अन्तर्दशारचक्रे तु श्रवणं च विभावयेत्‌ ॥
वसुकोणे तु मननं निदिध्यासं त्रिकोणके ।बिन्दौ तु शिवजीवैक्यं भावनीयं बुधैः सदा ॥
ஶிவத்³ருʼஷ்டி-
பி³ந்த்³வாதி³ பூ⁴புராந்தானி நவசக்ராணி பை⁴ரவி।
ஈக்ஷணாதி³ ப்ரவேஶாந்தா ஸ்ருʼஷ்டிரீஶேன நிர்மிதா॥
சதுரஶ்ராதி³ பி³ந்த்³வாந்த நவ சக்ராணி ஸுந்த³ரி।
ஜக்³ரதா³தி³ விமோக்ஷாந்த꞉ ஸம்ஸாரோ ஜீவ கல்பித꞉॥
பூ⁴புராதி³ த்ரிபி⁴ஶ்சக்ரை ர்விஶ்வ தைஜஸ ப்ராஜ்ஞயோ꞉।
தா⁴மத்ரயம் விபா⁴வ்யம் ததூ³ர்த்⁴வே தத்பத³மைஶ்வரம்॥
ததோ ப³ஹிர்த³ஶாரே து கு³ரூபஸத³னம் ஸ்ம்ருʼதம்।
அந்தர்த³ஶாரசக்ரே து ஶ்ரவணம் ச விபா⁴வயேத்॥
வஸுகோணே து மனனம் நிதி³த்⁴யாஸம் த்ரிகோணகே।
பி³ந்தௌ³ து ஶிவஜீவைக்யம் பா⁴வனீயம் பு³தை⁴꞉ ஸதா³॥
பை⁴ரவி = ஓ! பைரவியே
பி³ந்து³ ஆதி³ பூ⁴புர-அந்தானி நவ சக்ராணி = பிந்து முதல் பூபுரம் வரையினாலான ஒன்பது சக்ரங்களும்; ஈக்ஷண ஆதி³ = முதல் அசைவான தன்னைத்தான் காணுதல், அஹம் ஸ்புரணம், முதற்கொண்டு’ ப்ரவேஶ-அந்தா= பல தத்துவங்களைத் தாண்டி, கடைசியில் காணும் ப்ரபஞ்சமாக உள்ள நிலையாக; ஸ்ருʼஷ்டி꞉ ஈஶேன நிர்மிதா= உலகைப் படைத்தல் என்னும் தத்துவமாக ஈசன் உண்டாக்கினான். ஸுந்த³ரி= ஓ! ஸுந்தரியே; சதுரஶ்ர ஆதி³ பி³ந்து³ அந்த நவ சக்ராணி= பூபுரம் முதல் பிந்து வரையினாலான ஒன்பது சக்ரங்களும்; ஜக்³ரத்³ ஆதி³ = விழிப்பு நிலை முதல்; ஜீவ கல்பித꞉ ஸம்ஸார꞉ = ஜீவ பாவத்தில் ஸம்ஸாரம் என்று நினைக்கப் பட்ட (தலிருந்து); வி-மோக்ஷ-அந்த꞉ = (தளைகலிருந்து) விடுதலை முடிய (என அறியலாம்); பூ⁴புர ஆதி³ த்ரிபி⁴꞉ சக்ரை꞉ = பூபுரம் முதல் மூன்று சக்ரங்கள் (பூபுரம், சோடஶ தளம், அஷ்ட தளம்); விஶ்வ = (முறையே) விஶ்வன் அபிமானியான விழிப்பு நிலை (பூபுரம்); தைஜஸ= தைஜஸன் (என்ற மனத்தின் எண்ணங்கள்) அபிமானியான கனவு நிலை (சோடஶ தளம்); ப்ராஜ்ஞயோ꞉ = ப்ரக்ஞன் (என்ற ஆழ்ந்தஉள்ளுணர்வின்) அபிமானியான ஆழ்ந்ததூக்க நிலை(களாகும்-அஷ்டதளம்)
தா⁴ம த்ரயம் விபா⁴வ்யம் = மூன்று நிலைகளிலும் பாவிக்கப் பட வேண்டும். தத் ஊர்த்⁴வே = அதன் மேலுள்ள (நான்காவது சக்ரமான சதுர் தசாரம்); தத் பத³ம் ஐஶ்வரம்= ஈசுவரனை உபாஸிக்கும் மன நிலையாம்; ததோ ப³ஹிர்த³ஶாரே=அதன் பின்னர் காணும் (ஐந்தாவ தான) வெளிப்பத்து கோணங்கள்; து கு³ரு உபஸத³னம் ஸ்ம்ருʼதம் = ஸத்குருவை அடைதல் என்ற நிலை குறித்ததாம்; அந்தர்த³ஶாரசக்ரே = (அதன் பின்னர் காணும் ஆறாவதான) உள் பத்து கோணங்களில் ; து ஶ்ரவணம் ச விபா⁴வயேத்= ஸத்குருவின்பால் பெறும் கேள்வி ஞானத் தை குறித்தாய் கொள்ளல் தகும்; வஸுகோணே = (அதன் உள் காணும் ஏழாவதான) எட்டு கோணங்களில்; து மனனம் = ஸத்குருவின் பால் பெறும் கேள்வி ஞானத்தை மீண்டும் மீண்டும் ஆவர்த்திது புரிதலாய் கொள்ளல் தகும்; த்ரிகோணகே= (அதன் உள் காணும் எட்டா வதான) முக்கோணத்தில்; நிதி³த்⁴யாஸம் =ஸத்குருவின்பால் பெற்ற ஞானத்தை புரிந்தபின் இடையறாது மனத்தில் நிலைத்தாய் கொள்ளல் தகும்; பி³ந்தௌ³ = (அதன் உள் காணப்படும் ஒன்பதாவதான) பிந்து வில்; து ஶிவ ஜீவ ஐக்யம் =ஜீவன் என்ற பாவம் ஶிவனுடன் ஒன்றி யதாய், அபேதமானதை உணர்தலாய்; பு³தை⁴꞉ பா⁴வனீயம் ஸதா³= அறிவுள்ளவர்களால் எப்பொழுதும் கொள்ளல் தகும்
ஸ்ரீமேரு சக்ரம்‌
தேவியின்‌ ஸ்தூலதர (the grosser) ரூபத்தைப் பற்றி அறியத்‌ தொடங்கி னோம்‌. ஸ்ரீசக்ரமே அவ்வடிவமாகும்‌ எனவும்‌, ஸ்ரீசக்ரத்தில்‌ உள்ள தேவதைகளையும்‌ அறிந்தோம்‌. ஒன்பது ஆவரணங்களில்‌ அமர்ந்த அந்தத்‌ தேவதைகளின்‌ பூஜை முறையைப் பற்றி ஒருவாறு தெரிந்து கொண்ட நாம்‌, இக்கட்டுரையில்‌ மேலும்‌ பல விவரங்களை அறிய முற்படுவோம்‌. வெகு விரிவான கர்மகலாபங்களுடன்‌ (Ritualistic details) ஸ்ரீசக்ரத்தை வழிபடலாம்‌ அல்லது ஸ்ரீசக்ர பூஜையில்‌ வழி படப்படும்‌ எல்லாத்‌ தேவதைகளை யும்‌ நமது சரீரத்தில்‌ ந்யாஸம்‌ செய்து கொள் வதாலும்‌ ஸ்ரீசக்ரபூஜை நிறைவாய்‌ அமைகிறது. ஸ்ரீசக்ர ந்யாஸம் ‌-ஸ்ருஷ்டி ந்யாஸம்‌, ஸ்திதி ந்யாஸம்‌-ஸம்ஹார ந்யாஸம்‌-என மூன்று வகையாய்‌ உள்ளது. இம்மூன்று வகை ந்யாஸங்களையும்‌‌ தனது சரீரத்தில்‌ செய்து கொண்டவன்‌ அணிமாதி ஸித்³தி⁴களெல்லாம்‌ கைவரப்‌ பெற்றவனாக ஆவதோடு, இயல்பிலேயே எப்பொழுதும்‌ தானே பரதேவதையின்‌ நிஜ‌ ஸ்வரூபம்‌ உடையவனாகிறான்‌. தான்‌ ஊனுடல்‌ கொண்டு உலகில்‌ நடமாடுகையிலேயே ஜீவன்முக்தனாய்ப்‌ பொலிகிறான்‌; பரதேவதையின்‌ ஸாயூஜ்யபதம்‌ அவனுக்கு ஊனுடல்‌ வாழ்விலும்‌ கிட்டுகிறது. அத்தகையவனது உடலே அம்பிகையாகவும்‌, அம்பிகையின்‌ நடமாடும்‌ ஆலயமாகவும்‌ உள்ளது. அவனது பேச்‌செல் லாம்‌ மஹாமந்த்ர ஜபமே; அவனது செயலெல்லாம்‌ பூஜையில்‌ காட்டப் ‌படும்‌ பலவகையான முத்ரைகளே போன்ற பெருமையுறுகின்‌றன. அவன்‌ சாப்பாடே ஹோமம்‌ ஆகிறது. இந்திரிய ஸுகமெல்லாம்‌ அத்தகையவனிடம்‌ ஆத்ம-ஸுகமாகவே பொலிகிறது. ஸ்ரீசக்ரத்தின்‌ ந்யாஸத்தால்‌ இந்த நிலை ஒருவனுக்குக்‌ கிட்டுவதற்கு அவனது த்ருட மான நிச்சய ஞானம்‌ காரணமாகிறது. ஸந்தேஹ ஆத்மாக்களுக்கு எந்த ந்யாஸமும்‌ யாதொரு பயனும்‌ அளிப்பதில்லை. ஸ்ரீசக்ர பூஜை யின்‌ வேறு பல விரிவுகளைக்‌ குருமுகமாக நேரிடவே தெரிந்து கொள்ளவேண்டும்‌. ஸ்ரீசக்ர ந்யாஸம்‌ போலவே மஹா ஷோடா⁴ ந்யாஸம்‌ என்பதும்‌ பெருமையுடையதாகும்‌. மஹாஷோட³ஶீ‌ பூர்ணா பிஷேக திக்ஷை பெற்றவர்களுக்கே மஹாஷோடா⁴ ந்யாஸத்தில்‌ அதிகாரமுண்டு. வெகு வெகு த்ருடமான நிச்சய ஞானமுடையவன்‌ “கட்கமாலா“ என்ற ஸ்துதியின் மூலம்‌ தன்‌ சரீரத்தில்‌ வியாபக முத்ரை யைச்‌ செய்து கொள்வதாலேயே பூர்ணமான ஸ்ரீசக்ர பூஜையின்‌ பலனை அடைகிறான்‌. இதில்‌ எள்ளளவும்‌ ஸந்தேஹமில்லை. மூன்று நான்கு நிமிஷங்களில்‌ கட்கமாலையைச்‌ சொல்லி விடலாம்‌. கட்க மாலையைப்‌ பாடம்‌ செய்து, நாள்தோறும்‌ மூன்று முறை சரீரத்‌தில்‌ வியாபக முத்திரை இட்டுக் கொள்பவன்‌ அடையும்‌ பலன்‌ அளவிட முடியாததேயாம்‌. கோடிக்கணக்கான பிறவிகளில்‌ கோடிக்கணக்கான புண்ய தீர்த்தங்கவில்‌ மூழ்கிய பயனும்‌, கோடிக் கணக்கான பிறவிக ளில்‌ கோடிக்கணக்கான முறை ஸோமயாகம்‌-வாஜபேயம்‌-அச்வ மேதம்‌ முதலிய யாகங்களைச்‌ செய்த பலனும்‌, இதுபோல்‌ மற்ற எந்தக்‌ கர்மங்களாலும்‌ அடையப்படும்‌ எந்தப்‌ புண்ணிய பலனும்‌ கட்க மாலையை ஒருமுறை சொல்லுவதாலேயே அடையப்படும்‌ என்றால்‌, கட்கமாலையின்‌ பெருமையை என்னென் பது! பலகோடி பிறவிகளில்‌ முறைப்படி. செய்யப்‌படும்‌ பித்ரு கர்மாக்களால்‌ எத்தனை திருப்தி பித்ருதேவதைகளுக்கு ஏற்படுமோ, அத்துணையும்‌ ஒருமுறை கட்க மாலா பாராயணமே தரும்‌. கோடிக் கணக்கான ஸகல தேவதைகளும்‌ கட்கமாலா பாராயணம்‌ செய்பவர்களுக்குத்‌ தாங்களே தொண்டர்க ளாகின்றனர்‌. அந்தத்‌ தேவதைகளை நோக்கித்‌ தனியாக வழிபாடுகள்‌ செய்வதோ, வேண்டு கோள்கள்‌ விடுப்பதோ தேவையே இல்லை, மேலும்‌ ஒரு ரஹஸ்யம்‌ ஸ்ரீசக்ரத்தை ஒருமுறை தரிசிப்பதாலேயே மேலே கூறிய யாவும்‌ கிட்டிவிடுகிறது. விரிவான பூஜையோ, ந்யாஸமோ, கட்கமாலா பாராயணமோ ஒன்றுமே வேண்டாம்‌. காலையில்‌ எழுந்த உடனே ஒருகணம்‌ ஸ்ரீசக்ர தரிசனம்‌ செய்தாலே வேதத்திலும்‌ ஸ்ம்ருதியிலும்‌ கூறப்பட்டுள்ள சகல கர்மங்களின்‌ பலன்‌களும்‌, சகல தேவதோபாஸனங்களின்‌ பலன்‌களும்‌ உடனே உண்டாகிவிடுகிறது, ஸ்ரீசக்ர தரிசனம்‌ அத்தகைய புண்ணியத்தைத்‌ தரவல்லது. அத்தகைய புண்ணியம்‌ ஸ்ரீசக்ர தரிசனத்தாலேயே கிடைக்கும்‌ என்ற நிச்சய ஞானம்‌ உடையவனாக ஒருவன்‌ ஆவதற்கு எத்துணை உள்ளத்‌ திண்மை யுடையவனாக இருக்க வேண்டும்‌! ‌ ஸ்ரீசக்ர மேரு தரிசனத்தால்‌ அன்பர்கள்‌ யாவரும்‌ எல்லாப்‌ பயன்களும்‌ நிறைவேறுவார்களாக.
श्रीचक्रपादोदक माहात्म्यं – सर्वोल्लासतन्त्र गङ्गा पुष्कर नर्मदासु यमुना गोदावरी गौतमी गङ्गाद्वार गया प्रयाग बदरी वारणासी सिन्धुषु । रेवा सेतु सरस्वती प्रभृतिषु ब्रह्माण्ड भाण्डोदरे तीर्थ स्नान सहस्र कोटि फलदं श्रीचक्रपादोदकं ।। ஶ்ரீசக்ரபாதோ³த³க மாஹாத்ம்யம்- ஸர்வோல்லாஸதந்த்ர
க³ங்கா³ புஷ்கர நர்மதா³ஸு யமுனா கோ³தா³வரீ கௌ³தமீ
க³ங்கா³த்³வார க³யா ப்ரயாக³ ப³த³ரீ வாரணாஸீ ஸிந்து⁴ஷு .
ரேவா ஸேது ஸரஸ்வதீ ப்ரப்⁴ருʼதிஷு ப்³ரஹ்மாண்ட³ பா⁴ண்டோ³த³ரே
தீர்த² ஸ்னான ஸஹஸ்ர கோடி ப²லத³ம் ஶ்ரீசக்ர பாதோ³த³கம்
கங்கை நதியில் நீராடல், புஷ்கர தீர்தத்தில் நீராடல் (ராஜஸ்தானில் அஜ்மீர் என்ற இடத்திலுள்ள குளம்), நர்மதை நதியில் நீராடல், யமுனை நதியில் நீராடல், கௌதமி என்ற கோதாவரி நதியில் நீராடல் மற்றும், கங்கை சமவெளியில் சேருமிடமான ஹரித்வாரத்தில் யில் நீராடல், கயையிலுள்ள பால்குண நதியில் நீராடல், த்ரிவேணீ ஸங்கமமான பிரயாகையில் நீராடல், பத்ரியிலுள்ள அலகநந்தா முதலிய நதிகளில் நீராடல் , வருணை-அஸி நதிகளின் மத்தியுலுள்ள வாரணாசியில் நீராடல் மற்றும் சிந்து நதியில் நீராடல், ரேவா நதியில் நீராடல், ஸமுத்ர ஸ்னானம் செய்யும் ஸேது என்ற தனுஷ்கோடியில் நீராடல், சரஸ்வதி நதியில் நீராடல் முதலியன பிரபஞ்சத்தின் வயிற்றில் உள்ள அனைத்து புனித நீராடலின் பலனைக் காட்டுலும் ஆயிரம் கோடி மடங்கு பலன் தருவது ஸ்ரீசக்ர அபிஷேகாதி பூஜா ஸமர்ப்பணமான நீரின் பலனாகும்.

பரதேவதையின்‌ ஸ்தூல-தம வடிவத்தையும்‌, ஸ்தூல-தர வடிவத்தை யும்‌ பற்றி அறிந்த நாம்‌ அவளது ஸ்தூல (Gross) வடிவத்தை அறிவாம்‌. வெளியில் விக்ரஹமோ, சக்ரமோ வைத்து வழிபடாமல்‌ இதயத்‌ தாம ரையில்‌ மட்டும்‌ தியானிக்கப்படும்‌ வடிவமே ஸ்தூல வடிவமாம்‌. கர சராணாதி அவயவங்களோடுகூடிய வடிவையாகிலும், அல்லது ஸ்ரீசக்ர ரூபமான வடிவையாகிலும்‌, அல்லது மந்த்ரங்களுக்குரிய வரிவடிவை யாகிலும்‌ த்ருடமான பாவனா யோகத்தில்‌, இதயத் தாமரையில்‌ தியானிப்போமானால்‌, அவ்வாறு‌ தியானிக்கப்படும்‌ வடிவமே ஸ்தூல வடிவமாம்‌. ஸ்தூலதம வடிவத்திறகும்‌ (the grossest form) ஸ்தூல வடிவத்திற்கும்‌ (the gross form) உள்ள வேற்றுமையை நன்கு அறிய வேண்டும்‌. ஸ்தூலதம வடிவத்தில்‌, வெளியில்‌ வைத்து வழிபடப் படும்‌ விக்ரஹம்‌ உலோஹம்‌, ஸ்படிகம்‌ முதலான கற்கள்‌ ஆகியவைகளா லேயே ப்ரதானமாக உள்ளது; ஆகவே ஸ்தூலதம வடிவம்‌ பிற உலகிய லுக்குரிய பொருளால்‌ (matter) ஆனது என்று அறிய வேண்டும்‌. ஆயினும்‌ . இவ்வடிவத்தில்‌ கடவுள்‌ அர்ச்சாவதாரம்‌ (idolised incarnation‌) பூண்ட வராகக்‌ கூறப்படுகிறார்‌. ஸ்தூலதர (the grosser) வடிவத்தில்‌ கொள்ளப் படும்‌ ஸ்ரீசக்ரமும்‌ வெளியில்‌ உலோகம்‌ முதலியவைகளால்‌ அமைக்க ப்பட்டு வழிபடப்படுவதால்‌, இவ்‌வடிவமும்‌ அர்ச்சாவதாரதின்‌ பாற் பட்டதே அகும்‌. ஆனால்‌ ஸ்தூல வடிவத்தில்‌ உள்ளத்திலே மட்டும்‌ தியானிக்கப்படுகிற வடிவம் முக்யமாம்‌. ஸ்ரீசக்ர வடிவமும்‌ உள்ளத் திலே மட்டும்‌ தியானிக்கப் படுமானால்‌, அல்லது ஸஹஸ்ரார சக்ரம்‌ போன்ற இடங்களில்‌ மட்டும்‌ தியானிக்கப் படுமானால்‌ அதாவது ஆந்தர பூஜையில்‌ பாவனா ரூபமாக மட்டும்‌ கொள்ளப் படுமானால்‌, அப்‌பொழுது அதுவே ஸ்தூல (the gross) வடிவமாகிறது. மேலே ஸூக்ஷ்ம வடிவத்தை அறிய இருக்கிறோம்‌. ஸூக்ஷ்ம (the subtle) வடிவத்தில்‌ அம்பிகை மந்த்ர ரூபிணியாக வழிபடப் படுகிறாள்‌. ஆனால்‌ அம் மந்த்ரத்‌தின்‌ வெறும்‌ நாதம் மட்டும்‌ (mere sound form) ஸூக்ஷ்ம ரூபமா கிறது. ஆனால் மந்த்ரத்திற்கு வரிவடிவம்‌ (script form) கொடுத்து, உள்ளத்தில்‌ தியானித்தால்‌ அப்பொழுது மந்த்ர ரூபமே ஸ்தூல ரூபமா கிறது. வரிவடிவத்தையும்‌ பலகையில் எழுதியோ, உலோகத்‌ தகட்டில்‌ பொறித்தோ, புறவழிபாட்டில்‌ கொண்டோமானால்‌, அப்பொழுது அவ் வரிவடிவமே ஸ்தூலதர ரூபமாகவும்‌ ஆகிவிடுகிறது; அர்ச்சாவதாரமா கவும்‌ கொள்ளப்படலாம்‌. இதுகாறும்‌ கூறியதினின்றும்‌ நாம்‌ ஸ்தூல ரூபத்தைப்பற்றி அறிவது என்ன? உள்‌ளத் தாமரையில்‌ மட்டும்‌ அம்பிகையை கர சரணாதி அவயவங்கள்‌ கொடுத்தோ, அல்லது ஸ்ரீசக்ர ரூபத்திலோ, அல்லது மந்த்ரத்தின வரிவடிவத்திலோ வழிபடு வோமானால்‌, அப்பொழுது அம்பிகையை அவளது ஸ்தூல ரூபத்தில்‌ வழிபடுகிறோம்‌. ஸ்தூலதமம், ஸ்தூலதரம்‌, ஸ்தூலம்‌ ஆகிய இம்மூன்று வடிவங்களும்‌ மந்த அதிகாரிகளுக்கு உரியனவாகும. ஸ்தூல வடி வத்திலேயே ஸ்தூல ஸ்தூலதமம்‌ கர-சாணாதி அவயவங்‌களோடு தியானிக்கப்படும்‌ வடிவம்‌; ஸ்தூல ஸ்தூல-தரம்‌ சக்ர ரூபமாக தியானிக்கப்படும் வடிவம்‌. ஸ்தூல-ஸ்தூல வடிவம்‌ மந்த்ரத்தின்‌ வரி வடிவ தியானமாகும்‌. ஸ்தூலதம ஸ்தூலதர வடிவங்‌களில்‌ தியானமும்‌ உண்டு. ஆனால்‌ புறவழிபாடுதான்‌ முக்ய மாகும்‌. ஸ்தூல வடிவத்தில்‌ புறவழிபாடு இருக்கலாம்‌; ஆனால்‌ இருந்து தான்‌ ஆக வேண்டும்‌ என்ற அவசியமில்லை. பின்னர்‌, உள்ளத்தில்‌ தியானத்தில்‌ கொள்ளப்படும்‌ வடிவமே முக்யமாகும்‌. ஸ்தூல வடிவத்தில்‌ வழிபாடு செய்கிறவர்கள் தாங்கள்‌ போகிற இடங்களுக் கெல்லாம்‌ பூஜைப்‌ பெட்டியை எடுத்துக் கொண்டு போகவேண்டிய தேவையற்றவர்கள் என்று அறியவும்.
இப்பொழுது ஸூக்ஷ்ம வடிவத்திற்கு வருவோம்‌. ஸூக்ஷ்ம (subtle form) வடிவம மந்த்ரவடிவானது; அதிலும்‌ ஒலியே (sound) முக்யமானது. வரி வடிவம்‌ இங்கு முக்யம‌ல்ல. ஒரு மந்த்ரத்திற்கு வரிவடிவம்‌ (script form) கொடுக்கப்படும் பொழுது, அந்தந்த மொழியின்‌ வரிவடிவத்திற் குரிய வேறு பாட்டினால்‌, மந்த்ரத்தின்‌ வரிவடிவத்‌திலும்‌ பல வேற்றுமைகள்‌ வருகின்‌றன. ஆனால்‌ ஒலி வடிவத்தில்‌ வேற்றுமையில்லை. உதாரண மாக “ஐம்” என்ற ஓரெழுத்து மந்த்ரம்‌ தமிழ்‌, ஸம்ஸ்க்ருதம்‌, மலையா- ளம்‌, தெலுங்கு முதலிய பல மொழிகளிலும்‌ வரிவடிவத்தில் வேறு படலாம்‌, ஆனால்‌ ஒலி வடிவத்தில்‌ வேறுடடுலதில்லை. ஒலி வடிவ வழி பாடே, ஸூக்ஷ்ம ரூப வழிபாடாகும்‌. ஒலிவடிவத்தில்‌ வழிபடுவதால்‌, வழிபடுவோனிடம்‌ ஏற்படும்‌ சிறப்பியல்புகளைப்‌ படிப்படியாக அறிய வேண்டும்‌. தேவி வழிபாட்டில்‌ கொள்ளப்படும்‌ மந்த்ரங்கள்‌ முக்யமாக மூன்று. (1) பாலை (2) பஞ்சதசாக்ஷரீ (3) ஷோட³ஶீ, இம் மூன்று மந்த்ரங் களைப் பற்றியும்‌ முன்னரே சிறிது குறிப்பிட்டுள்ளோம்‌. மந்த்ரத்தினு டைய விசேஷ ஆற்றல்களைப் பற்றியும்‌, அவ்வாற்றல்களை நம்மிடத் தில்‌ நிறை வேற்றிக் கொள்ளும் முறைகளைப் பற்றியும்‌ விரிவாக அறிதல் வேண்டும்‌. மந்த்ரத்தின்‌ பொருள்களையும்‌ அறிய வேண்டும்‌. இவ்வாறு‌ மந்த்ரங்களின்‌ முழு விரிவுகளைப்‌ பற்றியும் தெளிந்த அறிவுடன்‌, அவைகளின்‌ ஆற்றலில்‌ முழு நம்பிக்கையுடன்‌, மந்த்ரங் களில் ஈடுபடும் வகையே மந்த்ர யோகமாகும்‌.
யோகத்தை நம்‌ முன்‌னோர்கள்‌ கர்ம-பக்தி-‌ஞான யோகங்கள்‌ என்றும்‌, ஹட-மந்த்ர-லய-ராஜ யோகங்கள்‌ என்றும்‌ இருபெரும் பிரிவில்‌ வர்ணித்துள்ளார்‌கள்‌. மந்த்ர யோகமே மற்றவற்றைக் காட்டிலும்‌ வழி எளிதானது. ஆனால் முழுமையும்‌ தனித்த நிலையில்‌ எந்த யோகமும்‌ முழுப்‌ பயனை அளிக்காது. முன்‌ கூறப்பட்ட ஏழு யோக ‌ வகைகளுமே ஸமுச்சயயுற்ற யோகமே (Internal yoga) நிறை வான வெற்றி ‌ அளிககும்‌. விரிவுகளைக் காண்போம்‌,
ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்த³ரீ பராபட்‌டாரிகையின்‌ ஸூக்ஷ்ம வடிவமான (subtle form) மந்த்ரத்‌ திருமேனியைப்‌ பற்றி சென்ற கட்டுரையில்‌ குறிப்பிட்‌டோம்‌. முந்திய ஒரு கட்டுரையில்‌ பாலா, பஞ்சதசாக்ஷரீ, ஷோட³ஶீ, மஹா ஷோட³ஶீ ஆகிய. மந்த்ரங்களைப் பற்றி அறிந்தோம்‌. முக்யமான இம்மூன்று மந்த்ரங்களுள்‌ அவரவர் களின்‌ பண்பாட்டுக்கிணங்க ஏதாவது ஒரு மந்த்ரத்தை ஸாதனை செய்து ஸித்³தி⁴ பெறும்‌ வகையைப்‌ பற்றி இங்கு அறிவோம்‌.
லக்ஷக்கணக்கான முறை மந்த்ரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப்‌ போக்கில்‌ மந்த்ர ஸித்³தி⁴ பெறுதல்‌ என்பது தற்‌போதைய காலச் சூழ் நிலையில்‌ ஒவ்வாததாக உள்ளது. ஆகவே நமது முன்னோர்கள்‌ மந்த்ரங்களில்‌ ஸித்³தி⁴ அடைவதற்குச்‌ சில வழி களையும் தங்கள் அனுவபத்தில் மூலம் விளக்கியுள்ளனர். அவைகளை வரிசையாகக் காண்போம்‌.
எந்த ஒரு மந்த்ரத்தையும்‌ ஒரே நாளில் ஸித்³தி⁴ செய்யலாம். வ்ழிபடுவோனது ஊக்கமும்‌ தளரா முயற்சியும்‌ இதற்‌குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம்‌, கிருஷ்ண பக்ஷம் ‌ ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும்‌ உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ, அல்லது சதுர்தசி திதியிலோ ஸூர்யோதயம்‌ தொடர்ச்சி‌ மறு நாள் ஸூர்யோதயம்‌ வரைவில்‌ இடையறாது ஒரு மந்த்ரத்தை ஜபிப்பதால்‌ அந்த மந்த்ரம் ஸித்³தி⁴யாகிறது. உயாசகன்‌ “ஸர்வ ஸித்³தீ⁴ஶ்வரன்‌” ஆகிறான்‌. அதாவது எல்லா ஸித்³தி⁴களுக்கு தலைவன்‌ ஆகிறான்‌. இப்படி ஒரு நாளில்‌ அதாவது அறுபது நாழிகை நேரத்தில்‌ மந்த்ர ஸித்³தி⁴ அடைவதற்கான‌ ஈடுபடுபவன்‌ சில ஐயங்களுக்கு உள்ளத்தில்‌ இடங்கொடுகாத உறுதியினாக இருத்தல் வேண்டும்‌ வேறு பல சாஸ்த்ரங்களிலும்‌ ஆசார முறை களிலும்‌ கொள்ளப் படும்‌ ப்ரமாணங்களை செவியில்‌ வாங்கிக்‌ கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக்‌ கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்த்ரத்தினாலேயே ஆகிறது என்ற இதயம்‌ உடையவனாக உபாஸகன் இருத்தல் வேண்டும்‌.
குறிப்பு: ஜபம்‌, ஹோமம்‌, தர்ப்பணம்‌, மார்ஜனம், ப்ராஹ்மண ஸந்தர்ப் பணம் ஆகிய ஐந்து அங்கங்களுடன் புரஶ்சரணத்தின்‌ மூலம்‌ அறிந்தி ருக்கிறோம்‌. ஆகையினால்‌, பஞ்சாங்க புரஶ்சரண முறையை இங்குக் குறிப்பிடவில்லை
ஒரு மாதத்தில்‌ மந்த்ரஸித்³தி⁴ அடையலாம்‌. ஒரு கிருஷ்ணா ஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய நாளொன் றுக்கு நூற்று எட்டுமுறை நியமத்துடன்‌ ஜபம்‌ செய்வதால்‌ மந்த்ரம் ஸித்³தி⁴யாகிறது. ஆனால்‌, இங்கு ஒரு, விசேஷம்‌: மந்த்ரத்துககு முன்னும்‌ பின்‌னும்‌ மாத்ருகாக்ஷரங்கள்‌ ஐம்பத்தொன்றையும்‌ (the fifty-one letters of Sanskrit alphabet) முறையே ஏறு வரிசையிலும்‌ இறங்கு வரிசையிலும்‌ அமைத்து ஜபம்‌ செய்ய வேண்டும்‌, இப்படி மாத்ருகா ஸம்‌புடிதமாக மந்த்ரத்தை நாளொன்றுக்கு 108 தடவை யாக ஒரு மாத ஜபம்‌. கிருஷ்ணாஷ்டமி போல்‌, கிருஷ்ண சதுர்தசி சுக்ல அஷ்டமி, சுக்ல சதுர்தசி திதிகளும்‌ இந்த ஜப முறைக்கு ஏற்றவையே
मातृकाक्षर:- अं आं इं ईं उं ऊं ऋं ॠं ऌं ॡं एं ऐं ओं औं अं अः कं खं गं घं ङं चं छं जं झं ञं टं ठं डं ढ णं तं थं दं धं नं पं फं बं भं मं यं रं लं वं शं षं सं हं ळं क्षं-मूलं-क्षं ळं हं सं षं शं वं लं रं यं मं भं बं फं पं नं धं दं थं तं णं ढं डं ठं टं ञं झं जं छं चं ङं घं गं खं कं अः अं औं ओं ऐं एं ॡं ऌं ॠं ऋं ऊं उं ईं इं आं अं
மாத்ருʼகாக்ஷர: (ஏறு வரிசை) அம் ஆம் இம் ஈம் உம் ஊம் ருʼம் ரூʼம் லுʼம் லூʼம் ஏம் ஐம் ஓம் ஔம் அம் அ꞉ கம் க²ம் க³ம் க⁴ம் ஙம் சம் ச²ம் ஜம் ஜ²ம் ஞம் டம் ட²ண்ட³ம் ட⁴ ணம் தம் த²ம் த³ம் த⁴ம் நம் பம் ப²ம் ப³ம் ப⁴ம் மம் யம் ரம் லம் வம் ஶம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம்-மூலம்- (இறங்கு வரிசை) க்ஷம் ளம் ஹம் ஸம் ஷம் ஶம் வம் லம் ரம் யம் மம் ப⁴ம் ப³ம் பऐ²ம் பம் நம் த⁴ம் த³ம் த²ம் தம் ணம் ட⁴ம் ட³ம் ட²ம் டம் ஞம் ஜ²ம் ஜம் ச²ம் சம் ஙம் க⁴ம் க³ம் க²ம் கம் அ꞉ அம் ஔம் ஓம் ஐம் ஏம் லூʼம் லுʼம் ரூʼம் ருʼம் ஊம் உம் ஈம் இம் ஆம் அம்
(3) மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல்‌ ஒரு மாதத்தில்‌ மந்த்ர ஸித்³தி⁴ யை விரும்புபவன்‌, குறிப்பிட்ட திதிகளில்‌ தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில்‌ முடியுமாறு நாளொன்றுக்கு 1008 முறை மந்த்ரத் தை மட்டும்‌ ஜபம்‌ செய்வதால்‌ வெற்றி அடைவது நிச்சயம்‌.
(4) மாத்ருகாக்ஷரங்களில்‌ பூதலிபி வரிசை என்று ஒருமுறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்த்ரத்திற்கு முன்னும்‌ பின்னும்‌ ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி(only one letter of the alphabet), நாளொன்றுக்கு 1008 முறை ஜபம்‌ செய்வ‌தால்‌, மந்த்ஸித்³தி⁴ நிச்சயம்‌.
भूतलिपि:- अ-इ-उ-ऋ-ऌ-ए-ऐ-ओ-औ-ह-य-र-व-ल-क-च-ट-त-प-ख-छ-ठ-थ-फ-ग-ज-ड-द-ब-घ-झ-ढ-ध-भ-ङ-ञ-ण-न-म-श-ष-स
भूतलिपि+ मूलं:- अ-मूलं-अ-इ-मूलं-इ-उ-मूलं-उ-ऋ-मूलं-ऋ-ऌ-मूलं-ऌ-ए-मूलं-ए-ऐ-मूलं-ऐ-ओ-मूलं-ओ-औ-मूलं-औ-ह-मूलं-ह-य-मूलं-य-र-मूलं-र-व-मूलं-व-ल-मूलं-ल-क-मूलं-क-च-मूलं-च-ट-मूलं-ट-त-मूलं-त-प-मूलं-प-ख-मूलं-ख-छ-मूलं-छ-ठ-मूलं-ठ-थ-मूलं-थ-फ-मूलं-फ-ग-मूलं-ग-ज-मूलं-ज-ड-मूलं-ड-द-मूलं-द-ब-मूलं-ब-घ-मूलं-घ-झ-मूलं-झ-ढ-मूलं-ढ-ध-मूलं-ध-भ-मूलं-भ-ङ-मूलं-ङ-ञ-मूलं-ञ-ण-मूलं-ण-न-मूलं-न-म-मूलं-म-श-मूलं-श-ष-मूलं-ष-स-मूलं-स
பூ⁴தலிபி:- அ-இ-உ-ருʼ-லுʼ-ஏ-ஐ-ஓ-ஔ-ஹ-ய-ர-வ-ல-க-ச-ட-த-ப-க²-ச²-ட²-த²-ப²-க³-ஜ-ட³-த³-ப³-க⁴-ஜ²-ட⁴-த⁴-ப⁴-ங-ஞ-ண-ந-ம-ஶ-ஷ-ஸ
பூ⁴தலிபி+ மூலம்:- அ-மூலம்-அ-இ-மூலம்-இ-உ-மூலம்-உ-ருʼ-மூலம்-ருʼ-லுʼ-மூலம்-லுʼ-ஏ-மூலம்-ஏ-ஐ-மூலம்-ஐ-ஓ-மூலம்-ஓ-ஔ-மூலம்-ஔ -ஹ-மூலம்-ஹ-ய-மூலம்-ய-ர-மூலம்-ர-வ-மூலம்-வ-ல-மூலம்-ல-க-மூலம்-க-ச-மூலம்-ச-ட-மூலம்-ட-த-மூலம்-த-ப-மூலம்-ப-க²-மூலம் -க²-ச²-மூலம்-ச²-ட²-மூலம்-ட²-த²-மூலம்-த²-ப²-மூலம்-ப²-க³-மூலம்-க³-ஜ-மூலம்-ஜ-ட³-மூலம்-ட³-த³-மூலம்-த³-ப³-மூலம்-ப³-க⁴-மூலம்-க⁴-ஜ²-மூலம்-ஜ²-ட⁴-மூலம்-ட⁴-த⁴-மூலம்-த⁴-ப⁴-மூலம்-ப⁴-ங-மூலம்-ங-ஞ-மூலம்-ஞ-ண-மூலம்-ண-ந-மூலம்-ந-ம-மூலம்-ம-ஶ-மூலம்-ஶ-ஷ-மூலம்-ஷ-ஸ-மூலம்-ஸ
(5) ருʼக்வேத ப்ராதி சாக்யத்தில்‌ (Vedic orthography) அறுபத்து மூன்று எழுத்துக்கள்‌ கொண்ட நெடுங்கணங்கு (alphabet) ஒன்று கூறப் ‌படுகிறது. இந்த அறுபத்து மூன்று‌ எழுத்துக்க‌ளை ஏறு இறங்கு வரிசைகளில்‌ மந்த்ரத்தின்‌ முன்னும்‌ பின்னும்‌ முறையே கூட்டி நாளொன்றுக்கு 108 முறை மூல மந்த்ர ஜபம்‌ செய்வதாலும்‌ மந்த்ர ஸித்³தி⁴ நிச்சயம்‌.
ऋग्वेद प्रतिशाख्य:- अ आ अ३ इ ई इ३ उ ऊ उ३ ऋ ॠ ऋ३ ऌ ऌ३ ए ए३ ऐ ऐ३ ओ ओ३ औ औ३ ऐ एै ओ औ (२१) क ख ग घ ङ -च छ ज झ ञ-ट ठ ड ढ ण-त थ द ध न-प फ ब भ म (२५) य र ल व श ष स ह (८) कुꣲ खुꣲ गुꣲ घुꣲ (४) अं अः (२) ळ (३) [21+25+8+4+2+3 = 63]
ருʼக்³வேத³ ப்ரதிஶாக்²ய:- அ ஆ அ3 இ ஈ இ3 உ ஊ உ3 ருʼ ரூʼ ருʼ3 லுʼ லுʼ3 ஏ ஏ3 ஐ ஐ3 ஓ ஓ3 ஔ ஔ3 ஐ ஏை ஓ ஔ (21) க க² க³ க⁴ ங -ச ச² ஜ ஜ² ஞ-ட ட² ட³ ட⁴ ண-த த² த³ த⁴ ந-ப ப² ப³ ப⁴ ம (25) ய ர ல வ ஶ ஷ ஸ ஹ (8) குꣲ கு²ꣲ கு³ꣲ கு⁴ꣲ (4) அம் அ꞉ (2) )(ப )(க ள (3) [21+25+8+4+2+3 = 63]
(6) கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்தசி இறுதியாக உள்ள ஏழே நாட்‌களில்‌ மந்த்ர ஸித்³தி⁴யை அடையலாம்‌. ஏழு நாட்களிலும்‌ மொத்தம்‌ கூட்டி (40,000) நாற்பதாயிரம் எண்ணிக்கை வரும்படி ஜபம் செய்ய வேண்டும்‌. இந்த ஏழு நாள்‌ ஜப முறையில்‌ தசாம்ஶக்‌ கணக்கில் ஹோமம்‌ முதலானவைகளும்‌ உண்டு என அறியவும்‌. இந்த ஜபம்‌ நாளொன்றுக்கு ஐய்யாயிரத்து எழுனூற்று பதினான்கு (5714) ஆகும்‌; கடைசி நாள்‌ ஐய்யாயிரத்து எழுனூற்று பதினாறு (5716) ஆகும்‌. அந்நந்த நாளில் ஹோமம் முதலியன தசாம்ஶக் கணக்கில் செய்ய வேண்டும்.
(7) ஸூர்ய, சந்த்ர கிரஹண காலம்‌ பூராவும்‌ ஒரு மந்த்ரத்தை ஜபம்‌ செய்வதால்‌ அம்மந்த்ரம்‌ ஸித்³தி⁴யாகிறது. மொத்தமாக செய்த ஜபத்தின் ஹோமம் முதலியன தசாம்ஶக் கணக்கில் செய்ய வேண்டும்.
(8) ஒவ்‌வொரு இரவும்‌, (இரவு பூராவும்‌) ஸர்வ உபசாரங்களுடன்‌ மூன்று முறை நவாவரண பூசையை ஒரு மாத காலம்‌ செய்வதால்‌ மந்த்ரஸித்³தி⁴ ஏற்படுகிறது.
(9) மாத்ருகாக்ஷரங்கள்‌ ஒவ்வொன்றுக்‌கும்‌ ஒவ்வொரு மூலிகை பிரபஞ்சஸாரம்‌ முதலிய நூல்களில்‌ கூறப்பட்டுள்ளது. தான்‌ ஸித்³தி⁴ செய்ய வேண்டிய மந்த்ரத்‌ தில்‌ உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகை களையெல்லாம்‌ கூட்டிப்‌ பொடி செய்து குளிகைகளாய்ச்‌ செய்து கொண்டு, அவற்றை ஜபம்‌ செய்யும்பொழுது வாயில்‌ அடக்கிக் கொண்டிருப்பதால்‌ மந்த்ரம்‌ எளிதில்‌ ஸித்³தி⁴யாகிறது.

உதாரணமாக, காதி பஞ்சதஶாக்ஷரீ மந்த்ரத்தின் கூட்டு

மஹாபாதுகையை, தனது ஸஹஸ்ரார சக்ரத்தில்‌ தியானம்‌ பண்ணுவதால்‌ மந்த்ரம்‌ ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்‌குள்‌ மந்த்ரம்‌ அடங்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்த்ரமே இல்லாததாலும்‌, மஹாபாதுகை‌ தியானத்தால்‌ அடைய முடியாதது என்பது ஒன்றில்லை.
श्रीमहापादुका:- ॐ ऐं ह्रीं श्रीं ऐं क्लीं सौः ऐं ग्लौं हंसःशिवःसोहं-सोहं हंसः शिवः-हंसःशिवःसोहं हंसः ह्स्ख्फ्रें हसक्षमलवरयूं ह्सौं सहक्षमलवरयीं स्हौः श्रीं ह्रीं क्लीं ऐं सौः ॐ ह्रीं श्रीं कएईलह्रीं हसकहलह्रीं सकलह्रीं सौः ऐं क्लीं ह्रीं श्रीं हसकलह्रीं-हसकहलह्रीं -सकलह्रीं हसकल-हसकहल-सकलह्रीं प्रज्ञानं ब्रह्मा-अहं ब्रह्मास्मि-तत्त्वमसि-अयमात्मा ब्रह्मा-ब्रह्मण्याय नमः-हंसश्शिवस्सोहं-सोहं हंसः शिवः-हंसश्शिवस्सोहं हंसः ग्लौं ऐं श्रीविद्यानन्दनाथात्मक श्रीचर्यानन्दनाथ श्रीमहा पादुकां पूजयामि नमः
ஶ்ரீமஹாபாது³கா:- ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌ꞉ ஐம் க்³லௌம் ஹம்ஸ꞉ஶிவ꞉ஸோஹம்-ஸோஹம் ஹம்ஸ꞉ஶிவ꞉-ஹம்ஸ꞉ஶிவ꞉ஸோஹம் ஹம்ஸ꞉ ஹ்ஸ்க்²ப்²ரேம் ஹஸக்ஷமலவ ரயூம் ஹ்ஸௌம் ஸஹக்ஷமலவரயீம் ஸ்ஹௌ꞉ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ꞉ ஓம் ஹ்ரீம்ஶ்ரீம் கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகல ஹ்ரீம் ஸௌ꞉ஐங்க்லீம் ஹ்ரீம்ஶ்ரீம் ஹஸகலஹ்ரீம்-ஹஸகஹல ஹ்ரீம் -ஸகலஹ்ரீம் ஹஸகல-ஹஸகஹல-ஸகலஹ்ரீம் ப்ரஜ்ஞானம் ப்³ரஹ்மா-அஹம் ப்³ரஹ்மாஸ்மி-தத்த்வமஸி-அயமாத்மா ப்³ரஹ்மா-ப்³ரஹ்மண்யாய நம꞉-ஹம்ஸ꞉ ஶிவ꞉ ஸோஹம்-ஸோஹம் ஹம்ஸ꞉ ஶிவ꞉-ஹம்ஸ꞉ ஸோஹம் ஶிவ꞉ ஹம்ஸ꞉ க்³லௌம் ஐம் ஶ்ரீவித்³யாநந்த³நாதா²த்மக ஶ்ரீசர்யாநந்த³ நாத² ஶ்ரீமஹாபாது³காம் பூஜயாமி நம꞉
(11) ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி ப்ரோக்ஷஞானம் (intellectual conviction) த்ருடமாக கைவரப் பெற்றவன்‌ மந்த்ரத்திற்கு முந்தியும்‌, பிந்தியும்”‌ ஶிவோஹம்” என்ற பாவனையுடன்‌ மந்த்ர ஜபம்‌ செய்‌வ தால்‌, மந்த்ரம்‌ எளிதில்‌ ஸித்³தி⁴யாகிறது ஶிவோஹம்‌ என்பதற்குள்‌ ஸகல‌ ஶப்த ப்ரபஞ்சமும்‌, அர்த்த ப்ரபஞ்சமும்‌ அடங்கி விடுவதால்‌,
(12) இவ்வாறு “அஹம் ப்ரஹ்‌மாஸ்மி अहं ब्रह्मास्मि” என்றோ, அல்லது “ஈம்‌ ईं” என்ற பரா-காமகலாக்ஷரத்தையோ முன்னும்‌ பின்னும்‌ மந்த்ரத்தில்‌ கூட்டி ஜபம்‌ செய்வதால்‌ ஸகல ஸித்³தி⁴களும்‌ நிறை வேறுகின்‌றன. மந்த்ர யோகத்தைப் பற்றிய நுட்பங்களை, ஸித்³தி⁴ என்றால்‌ என்ன என்பதைப்‌ பற்றியும்‌ அறிவோம்‌.
மஹாவித்தையின் ஸங்கிரஹமான அர்த்த விசாரம் செய்யப் படு கின்றது. ஸ்ரீபஞ்சதஶீ வித்தையானது, தத்வமஸி, அஹம்‌ பிரஹ்மாஸ்மி முதலிய மஹாவாக்கியங்களைப்‌ போன்றதேயாகு மென்பது அதன்‌ அர்த்தவிசாரத்தால்‌ நன்கு ஏற்படுகின்றது.
ए (ஏ) = ஹே மாயாதீதஸ்வரூப சித்சக்தியே!
क (க)=பிரஹ்மத்தில்‌ கற்பிக்கப்பட்ட அவித்பையால்‌ ஏற்படும்
ह्रीं (ஹ்ரீம்) = (பேத) வ்ருத்திகளை ‌
ईल (ஈல) = நிவர்த்தி செய்வாயாக.
எந்த அவித்யா-விருத்திகளால்‌ எனக்கு ஜீவபாவமேற்பட்டதோ அந்தபேதரூப அவித்யா-விருத்திகளை நாசம்‌ செய்வாயாக. இதனால்‌ த்வம்பதவாச்சியமான ஜீவனது உபாதியையொழித்து லக்ஷ்யமான கூடஸ்த நிலையையடைதல்‌ தொனிக்கின்றது.

हल(स्य) ஹல(ஸ்ய)= வியாபகமாயுள்ள
क(स्य) க(ஸ்ய) = பரப்ரஹ்மத்தினுடைய அதாவது பிரஹ்‌மாகாரமாகும்
ह्रीं (ஹ்ரீம்) = விருத்தியை ‌
हस (ஹஸ)-அடைவிப்பாயாக.

எந்த மாயோபாதியால்‌ ஜீவனுக்குப்‌ பிரஹ்மத்தோடு ஐக்கியம்‌ உண்டாகாதோ அந்த உபாதியைத்‌ தத்பதவாச்சியார்த்தத்தினின் றும்‌ நீக்க (सत्यं ज्ञानमनन्तं ब्रह्म; आनन्दो ब्रह्म – ஸத்யம் ஜ்ஞானமனந்தம் ப்³ரஹ்ம; ஆனந்தோ³ ப்³ரஹ்ம )என்னும்‌ நிலையையும்‌ ஞானத் தையும்‌ அடைவிப்பாயாக, இதனால்‌ தத்பதார்த்த சோதனம்‌ தொனிக்கின்றது.

सकलह्रीं (ஸகலஹ்ரீம்)- அகண்டாகாரவிருத்தியை அதாவது (अयमात्मा ब्रह्म; अहं ब्रह्माऽस्मि; सर्वं खल्विदं ब्रह्म- அயமாத்மா ப்³ரஹ்ம; அஹம் ப்³ரஹ்மா (அ)ஸ்மி; ஸர்வம் க²ல்வித³ம் ப்³ரஹ்ம) என்னும்‌ ஜக, ஜீவபரர்களின்‌ அபேத-தர்ஶன அகண்ட நிலையை (हस-ஹஸ) = அடைவிப்பாயாக, இதனால்‌ அஸிபதம்‌ கூறப்பட்டது. இவ்வாறு‌ கூறுவது ஸ்ரீபஞ்சதஶீ மஹாவித்தையின் ரஹஸ்யார்த்தமாகும்.
‌“ஶுப⁴க்ருத்” (April 14th 1962- April 13th 1963) என்ற புத்தாணடு புலர்‌கிறது. “ஶுப⁴க்ருத்” என்றால் என்ன? நன்மையைச்‌ செய்வது எதுவோ அதுவே “ஶுப⁴க்ருத்” எனப்படுகிறது, புலரும் புத்தாணடு நன்மையைச்‌ செய்யும் ஆண்டு என்ற பொருள்‌ நமக்கு கிடைக்கிறது. நன்மையைச்‌ செய்யும் இப்புத்தாண்டு அமுதசுரபியின்‌ இவ்விதழ் மூலம் அமுதசுரபியையே தருகிறது. அமுதசுரபி என்றால்‌ என்ன? பேரார்வத்துடன் திளைப்ப தற்குக் காரணமானது எதுவோ அதுவே सुरभि ஸுரபி⁴ என்ற வடசொல்லின்‌ பொருள்‌ ஆகும். பாலை சுரப்பதன்‌ மூலம்‌ மக்களுக்கு வாழ்வின்‌ நலத்தைப்‌ பயக்கும்‌ பசுவும் ஸுரபி எனப் படுகிறது. இலக்கணை யாக(connotatively) வேண்டியார்க்‌கு வேண்டிய தையெல்லாம் உடனே நல்கும் காமதேனுவும்‌ ஸுரபி என்ற சொல்லின்‌ பொருளாகிறது. விண்ணகரத்தை அலங்கரிக்கும்‌ காமதேனுவும் ஒரு நாள்-அதாவது விண்ணகரமே அழியும்படியான அந்த நாள்-அழிய வேண்டியதே ஆகும். ஆக, அமுத (அம்ருத)= அழியாத, இறவாத என்ற அடைமொழி விண்ணகரத்து காமதேனுவுக்‌கு முற்றிலும்‌ பொருந்துவது எனக் கூற முடியாது. அம்ருத / அமுத என்ற அடை மொழியினால் என்றும் பொன்றாத, உலகம்‌ யாவும் பொன்றி விடும் நாளிலும் பொன் றாத‌ விண்ணகரத்து காமதேனுவை‌ நாம் ஏன் கொள்ள வேண்டும்‌. அந்தந்த வேளையின்‌ பசிப் பிணியைப்‌ போக்கும் வல்லமையுடைய தாக விளங்கும்-மணிமேகலை பெற்ற அல்லது துரெளபதி பெற்ற-அன்ன மிடும்‌ பாத்திரமும்‌ அமுதசுரபி என்ற சொல்லின்‌ முழுப் பொருளுக்கு, உண்மையான பொருளுக்கு உரித்தாகாது. நான்‌ குறிப் பிடும்‌ அமுத சுரபி என்றும் பசியிலாப்‌ பெருவாழ்வை நல்கும்‌ பெருமை யது என்று அறிய வேண்டும்‌. தான்‌ சாகின்றவன்‌ பிறருக்குச்‌ இறவா மையை வழங்க இயலுமோ? தான்‌ அழியும்‌ தன்மையது தன்னைப்‌ பெற்றவருக்கோ, தன்னை வழிபடுபவனுக்கோ அழியாமையை வழங்‌கும்‌ வல்லமைத் தாகுமோ? அம்ருதசுரபி (இறவாத காமதேனு) தான்‌ என்றும்‌ பொன்றாத பெருமை உடையது என்று குறிப்பிட்டோம் தன்னை அண்டியவர்க்கும்‌ தன்னிடத்து இயல்பிலுள்ள இறவாமை என்ற பெருமையை வழங்கும்‌ வல்லமை உடையது இறவாத என்ற பொருள்‌ உடைய அம்ருத என்ற சொல்‌ லாக்ஷணிகமாக அம்ருதத்வம்‌ (இறவாமை) என்ற பொருளையும்‌, அதையடுத்து அம்ருதத்வ-தாயகம்‌ (இறவாமையைத்‌ தருவது) என்ற பொருளையும்‌ உடையதாகிறது. ஆகவே அம்ருதசுரபி (1) இறவாத காமதேனு என்றும்‌ (2) இறவாமையை வழங்கும்‌ காமதேனு என்றும்‌ இருபொருள்கள்‌ கிடைத்தன. இறவாத வாழ்வில்‌ தான்‌ விளங்கிக் கொண்டு தன்னை அண்டுபவர்களுக்கும்‌ இறவாமையை அருளும்‌ அம்ருதசுரபி (அமுதசுரபி)-“ஶுப⁴க்ருத்‌”-நன்மை பயப்பது என்பது எவ்வளவு பொருத்தமுடையதாகிறது! இறவாமை யாம்‌ பெரு வாழ்வினும்‌ மேலான “ஶுப⁴ம்‌” (மங்களம்‌, நலன்‌) வேறு ஒன்று உண்டோ? அத்தகைய “ஶுப⁴ம்”‌ என்பதை நாம்‌ அறிவதற்கு அடி கோலு வதாக மேலே வரையப் படும்‌ கட்டுரைப்‌ பொருள்‌ அமைவதால்‌, ஶுப⁴க்ருத் ‌ என்ற புத்தாண்டு புலரும்‌ சமயத்‌திற்கு இது எத்துணைப்‌ பொருத்தம்‌ உடைய தாகிறது! நாம்‌ மேலே காணப்‌புகும்‌ கட்டுரைப் பொருளே “ஶுப⁴க்ருத்” ஆகவும்‌, அதே சமயத்தில்‌ “அமுத சுரபி”யாகவும்‌ அமையும்‌ அழகை நினைத்து நினைத்து நாம்‌ வியக்கும்‌ வண்ணமாக வும்‌, வியப்பதோடு மட்டும் அன்றி, வாழ்வின்‌ உண்மை இன்பம்‌ பொலி வதற்கும்‌ அடிகோ லுவதாகவும்‌ உள்ள அழகை என்‌னென்போம்‌ !
நாம்‌ விமர்சித்துவரும்‌ பொருளுக்கு ஏற்புடைய நிலையில்‌ மந்த்ரங் களே அமுதசுரபிகளாகவும்‌, ஶுப⁴க்ருத்துக்களாகவும்‌ உள்ளன, என அறியலாம்‌. மந்த்ர யோகத்தைப் பற்றி சென்ற கட்டுரையில்‌ சிறிது குறிப்பிட்டோம்‌. தேலிக்குக்‌ குறிப்‌பிடப்பட்ட ஏழு வடிவங்களுள்‌ மந்த்ர ங்கள்‌ நுண்வடிவங்கள்‌ (Subtle forms) என்று அறிந்ததோடு, ஏழு வடிவங் களுள்ளும்‌ நடு நாயகமாக அமைந்துள்ளது நுண்வடிவங்‌களாம்‌ மந்த்ர வடிவங்கள்‌. ஸ்தூலதம-ஸ்‌தூலதர-ஸ்தூலங்கள்‌ என்ற மூன்று வடிவங்க ளுக்கு அடுத்தபடியாகவும்‌, பர-ஸூக்ஷ்மதம்‌ – ஸூக்ஷ்ம-தரங்கள்‌ என்ற மூன்று வடிவங்களுக்கு முந்தியுமாகவும்‌, இடைக்கழி-விளக்கு நிலை யில்‌ (देहली-दीप-न्याय தேஹளி-தீப-நியாயத் தில்‌) மந்த்ரங்கள்‌ என்ற நுண்‌ வடிவங்கள்‌ இருப்பதைக்‌ கவனிக்க வேண்‌டும்‌. மற்ற ஆறு வடிவங்க ளிலும்‌ தன்‌ ஒளி காந்தும்படி மந்த்ரத்‌ திருமேனியின்‌ சிறப்பு உள்ளது. மந்த்ரத்‌ திருமேனியில்‌ மறைந்து கிடக்கும்‌ ஆற்றல்‌ தொகுதி ஒருவனு க்கு ஸித்³தி⁴த்துவிட்டால் ‌பின்னர்‌ புதிதாக அடையப்பட வேண்டுவது என்பதே ஒன்றும் கிடையாது‌. ஆனால் பலர்‌ இவ்வாறு‌ மந்த்ரங்களின்‌ பெருமையை அறிவதில்லை. ஸித்³தி⁴களுக் கெல்லாம்‌ தலை சிறந்த ஸித்³தி⁴யான ஆத்மஸித்³தி⁴ (ஆத்ம வடிவாக வாழும்‌ வாழ்வின்‌ வெற்றி) மந்த்ரங்களால்‌ அடையக் கூடியதல்ல என்று அறிவாளிகள்‌ என்று கருத ப்படுபவர்களுள்ளும்‌ சிலர்‌ உள்ளனர். அத்தகையவர்கள்‌ மந்த்ரங் களைப்‌ பற்றித்‌ தாங்கள் முன்‌ கூட்டியே பெற்றுள்ள மனத்தடிப்புகளுள்‌ (Prejudices) திளைப்‌ப வர்களாய்‌ மந்த்ரங் களைப்‌ பரிஹஸிக்கின்றனர். பரிஹஸித்ததன்‌ விளைவு களுக்கும்‌ ஆளாகின்றனர்‌. தனக்குத்‌ தெரியாத ஒன்றைப்‌ பரிஹஸிக்கும்‌ பழக்கம்‌ அறிவாளிகளிடமிருந்து மறையும்‌ நாளே ஒரு நாடு நலனுறத்‌ தொடங்கும்‌ நாளாம்‌. அத்தகைய நாள்‌ இந்த “ஶுப⁴க்ருத்”‌ ஆண்‌டில்‌ தொடங்கும்படி பரதேவதையை வழுத்துகவாமாக.‌
மந்த்ரங்களுள்‌ மறைந்து கிடக்கும்‌ ஆற்றலை (Potential power) அறிய நாம்‌ உள்ளது கிளர்தல்‌ (theory of evolution) என்ற தத்துவத்தைச்‌ சிறிது அறிய வேண்டும்‌. கடவுள்‌ தத்துவம்‌ (Truth of godhead) உலகில்‌ எல்லா விடத்தும்‌, எல்லாக்‌ காலத்‌தும்‌, எல்லாப்‌ பொருளனிடத்தும்‌ உறைவதா கும்‌. மிக மிக ஜடங்கள்‌ (the most inert matter) என்ற பொருள்களிடத்தும்‌ கடவுள்‌ தத்துவம்‌ உள்ளது. ஆனால்‌ நன்கு புலப்பட்ட நிலையில்‌ (evolved stage) நமக்குத் தோன்றவில்லை. அப்பொருளினின்று (inert matter) உயிரின்‌ தோற்றம்‌ (emergence of life) ஏற்பட்டுள்ளதை அறிவாளிகள்‌ அறிவர்‌. உயிர்‌ (life) ஏற்கனவே ஜடத்தில்‌ (matter) மறைந்திராமல்‌ போனால்‌, அத்தகைய ஜடத்தினின்றும்‌ உயிர்‌ எவ்வாறு‌ தோன்றக்‌ கூடும்‌? இல்லாது வாராது (Nothing can come out of nothing) ஒரு சமயத்துப்‌ புலப்‌படாது மறைந்திருப்பது பின்னர்‌ ஒரு சமயத்தில்‌ புலப்படுமாறு தோன்றலாம்‌. ஆக உயிர்‌ (life) ஜடத்திலே புதிதாக, முதன்‌ முதலாகப்‌ பிறப்பதில்லை? ஏற்‌கனவே ஜடத்தில்‌ மறைந்திருந்த (Potential, unmanifest, involved) உயிர்‌ தோற்றமுதுகிறது. வெளிப்பட்ட ஆற்றலுடையதாகிறது, கிளர்கிறது (becomes kinetic, manifest and evolved). உயிர்‌ தோ‌ன்றியது போல்‌, உயிரினின்றும்‌ மனம்‌ (mind) பிறந்தது. மனத்திலே விலங்கு மன த்தினின்றும்‌ (from animal mind, bestial mind) மானுடமனம்‌ (human mind), தோ‌ன்றியது. மானுடச் ச‌ட்டையில்‌ மானுடமனம்‌ பலரிடத்தும்‌ பொலி கிறது. அரிதாக ஒரு சிலரிடம்‌ இன்னும்‌ பண்புறாக விலங்கு மனமும்‌ உள்ளது. ஜடத்‌தினின்று உயிரும்‌, உயிரினின்றும்‌ மனமும்‌ தோன்றி‌ இந்தக்‌ கிளர்ச்சி (evolution) அவ்வளவோடு முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. விலங்கு மனம்‌, மானுடமனமாகப்‌ பரிணமித்தது போல்‌ மானுடமான திவ்யமனமாகப் (Divine mind) பரிணமி‌ப்‌பதும்‌ ஸாத்யமாகிறது. மனத்தகத்தே மறைந்து கிடைக்கும்‌ ஆற்றல்‌ வகை களும்‌ (எத்தனையோ கோடிக்‌கணக்கான ஆற்ற‌ல்‌ வகைகளுள்‌) ஒரு சிலவே உலகின் மிக பெரிய மேதாவிகளிடத்தும்‌ இது வரையில்‌ புலப் பட்டுள்ளது. இன்னும்‌ வெளிப்பட வண்டிய ஆற்றல்களும்‌ பண்பு வகை களும்‌ ஏராளமாக உள்ளன. தன்‌னகத்து மறைந்து கிடக்கும்‌ முழு-ஆற்றலும்‌ புலப்படும்படியான ஒருவகையான பரிணாமத்தை (Transformation) மனம்‌: அடையும்‌ பொழுது அதற்கு மனம்‌ என்ற பெயர்‌ இல்லாமல்‌ போகலாம்‌; வேறு ஒரு பெயர்‌ கொடுக்கப்படலாம்‌. ஆனால்‌ இப்பொழுதைக்கு நமது வியவஹாரத்துக்கு உரிய வகையில்‌; அந் நிலைக்கு ஔன்‌மனஸ்யம் औन्मनस्यं‌ (One pointed-focussed mind) என்று நாம்‌ பெயர்‌ கொடுத்துக் கொள்வோம்‌. தந்த்ர சாஸ்திரங்களிலும்‌, ஸித்த மார்க்க நூல்களிலும்‌ உன்மனீ, மனோன்‌மனீ முதலிய சொற்கள்‌ ஆளப்படுவதை அறியவும்‌. நமது காலத்‌திய அரவிந்தரும்‌ அதிமனம்‌ (Super mind) என்று வழங்குவதையும்‌ அறியலாம்‌. ஔன்மனஸ்யம்‌ ஒருவன்னிடத்து இயல்பாக பொலிந்துவிடுமானால அப்பொழுது அவனது ஊன் உடலிலும்‌ நாம் இப்பொழுது கருதிப் பார்பதற்கு எளிதில் முடியாத பல பரிணாமங்கள்‌ பொலி வேண்டும். உடலின்‌ மிக மிகச் ஜடமான(even the most inconsistent cell) அறிவிலியான உயிரணு விலும்‌ ஒரு வகையான திவ்ய பரிணாமம்‌ divine transfiguration) பொலிய வேண்டும்‌. புராணங்களில்‌ வர்ணிக்கப்‌படும்‌ பிரஹ்லாதனிடம்‌ ஔன்மனஸ்ய வாழ்வு விளங்கியது. நுண்ணறிவுக்‌ கண்‌ கொண்டு காண்பவர்களுக்கு எளிதில்‌ புலனாகும்‌ உண்மையாம்‌. ஹிரண்யகசிபு வி‌னால் இழைக்கப் பட்ட எத்துணைப்‌ பெரிய தீங்குகளாலும்‌ சிறிதும்‌ ஊறு பெறாத பெம்மையுடன்‌ பிரஹ்லாதனுடைய ஊன்‌ உடலும்‌ விளங்கியது புராணங்களில்‌ அறுதியிட்டுக் கூறப்படும்‌ ஓர்‌ உண்மை. கடவுண்மையைத்‌ தன்‌னிடத்து நிறைவேற்றிக்‌ கொள்ளுமாறு அகில உலகினரிடையும்‌ மஹப்ரசாரகராகத்‌ திரிந்து வரும்‌ நாரதரும் கூட பிரஹ்லாதனுக்கு அடுத்த படியா‌கவே வைத்து எண்ணப்படுகிறார்‌. மஹாபக்தர்களுள்‌ பரம உதாஹரணனாக (the greatest example) பிரஹ்லாத‌ன் கூறப் படுவதை நாராயண பட்டதரி தனது நாராயணீ யத்தில் 247-வது சுலோகத்தில்‌ குறிப்பிடு கிறார். மஹா பக்தர்களைக்‌ கணக்கிடுகையில்‌ ப்ரஹலாத- நாரத‌-பராசர-புண்டரிக- வ்யாஸ- அம்பரீஷ-ஶுக-சௌனக-பீஷ்ம-தால்ப்ய‌- ருக்மாங்கத- அர்ஜுன-வசிஷ்ட‌-விபீஷண‌ முதலியோர்களைக்‌ கூறும்‌ பிரசித்தமான சுலோகத்தில்‌ ப்ரஹலாதன் முதலிடம்‌ பெற்றிருப்பதை அறியவும்‌.
प्रह्लाद-नारद-पराशर-पुण्डरीक-व्यासाम्बरीष-शुक-शौनक-भीष्म-दाल्भ्यान्।
रुक्माङ्गदार्जुन-वसिष्ठ-विभीषणादीन् पुण्यान् इमान् परम-भागवतान् नमामि॥
ப்ரஹ்லாத³-நாரத³-பராஶர-புண்ட³ரீக-
வ்யாஸாம்ப³ரீஷ-ஶுக-ஶௌனக-பீ⁴ஷ்ம-தா³ல்ப்⁴யான்।
ருக்மாங்க³தா³ர்ஜுன-வஸிஷ்ட²-விபீ⁴ஷணாதீ³ன்
புண்யான் இமான் பரம-பா⁴க³வதான் நமாமி॥
ஔன்மனஸ்ய நிலையைத்‌ தன்னிடத்துப்‌ பரிபூரணமாகப்‌ பெற்றவன்‌ (Plenary possession) ப்ரஹ்லாதன்‌ என்பது பாகவதத்தின்‌ உட் கிடக்கை ஆகும்‌. ப்ரஹ்‌லாதன்‌ மஹாபக்தன்‌-மஹாஜ்ஞானி-மஹாஸித்தன்‌. ஔன்மனஸ்ய நிலை விளங்கப்‌ பெற்றவனிடம்‌ இம்மூன்று நிலை களும்‌ ஒருங்கே நிறைவாக விளங்குகின்‌றன; ஒன்றற்கொன்று முரண் பாடின்றி விளங்குகின்றன. ஔன்மனஸ்ய நிலையின்‌ இப்பெருமை யை நமது காலத்தில்‌ ஓரளவுக்கு விளக்கியவர்‌ அரவிந்தர் ஆவர்‌; அரவிந்தர்‌ வர்ணித்துள்ள திவ்ய ஜீவனம்‌ (The life Divine) தாந்த்ரீக யோகத்தின்‌ சிகர நிலை ஆகும்‌. சாக்தம்‌-சைவம்-ஸித்த மார்க்‌கம்‌ ஆகிய மூன்றும்‌ ஸங்கமமுற்று நிறைவாகப்‌ பொலியும்‌ திவ்ய நிலை யே ஔன்‌மனஸ்ய நிலை. ஔன்மனஸ்ய யோகம் ‌பண்டைய நூல்க ளில்‌ பரக்கப்‌ பேசப்படுகின்றது; அத்தகைய நிலை விளங்கப்‌ பெற்ற மஹாஸித்தர்கள்‌ பலர்‌ பண்டைய நூல்களில்‌ பேசப் படுகின்றனர்‌. ஔன்‌மனஸ்ய நிலையில்‌ வெற்றியடைய நமக்‌கெல்லாம்‌ ப்ரஹ்லாதனே உதாஹரணன்‌. ஏன்‌? ப்ரஹ்லாதனது முறை வெகு எளிது. நாராயண நாம உச்சாரணம்‌-ஸ்மரணம்‌ ஒன்றே ப்ரஹ்லாத னிடம்‌ அந்‌நிலையைத்‌ தோற்றுவித்தது. “நாராயண” என்ற நாலெழுத்து மந்த்ரமே ப்ரஹ்லாதனுக்குக்‌ கடவுண்மை வாழ்வை மலர் வித்‌தது. அதுபோல்‌ நாமும்‌ பரதேவதைக்‌குரிய பாலா, ஸெளபாக்ய வித்யா, ஷோட³ஶீ, மஹாஷோட³ஶீ ஆகியவற்றுள்‌ ஒன்றன்‌ மூலமாக ஔன்மனஸ்ய ஸித்³தி⁴யை அடைய முடியும்‌, ஔன்மனஸ்ய ஸித்³தி⁴ யை ப்‌பெற்றவன்‌ உலக வாழ்விற்‌கு‌ பயன்படாதவன் ஆகிவிடுவானோ என்று கவலையுற வேண்டும்‌. ஔன்‌மனஸ்ய வாழ்‌வு உடையவனே உலகியல்‌ வாழ்விலும்‌ நன்கு வாழ முடியும்‌; விஶ்வாதீத உணர்வும்‌ (transcendental consciousness) விஶ்வாத்‌மக உணர்வும்‌ (Cosmic consciousness) தனி மனிதன்‌ என்ற உணர்வும்‌ (individual consciousness) அவனிடத்து, அதாவது ஔன்மனஸ்ய வாழ்வினனிடத்து, முரண்பாடின்றி விளங்கு கின்றன. தன்‌ உடலைப்‌ பொருத்தமட்டும்‌ சாக்தன்‌ என்று தன்‌னைக்‌ கொள்ளும்‌ உணர்வினன்‌ தான்‌ தமிழ்‌ நாட்டினன்‌ (Tamilian) என்ற உணர் வையும்‌ உடையவனாகிறான்‌; இங்ஙனமே தான்‌ இந்தியன்‌ (Indian) என்ற உணர்வினனாகவும்‌ இருக்கலாம்‌, மேலும்‌ விரிந்த நிலையில்‌ தான்‌ விஶ்வமானவன்‌ (Citizen of the World) என்றும்‌ இருக்கலாம்‌, சாக்தனிடம்‌ உள்ள தனிமனிதன்‌ என்ற உணர்வு-தமிழன்‌ உணர்வு-இந்தியன்‌ உணர்வு-விஶ்வமானவ உணர்வு ஆகிய நால்வகை உணர்வுகளும்‌ முந்தியவற்றைப்‌ பிந்தியது அடக்குவதாய்‌, ஆனால்‌ ஒன்றற்கொன்று முரண்பாடின்‌றியதாய்‌ விளங்க முடியுமாகையால்‌, அவ்வாறே ஒளன்மனஸ்ய நிலையில்‌ வாழ்பவன்‌ தனி மனித வாழ்வி லும்‌ (Individual human consciousness) தனது கடமைகளை உலகியலை நோக்கிச்‌ செம்மையாகச்‌ செய்பவன்‌ ஆகிறான்‌, திருவிளையாடற்‌ புராணத்தில்‌ எல்லாம்‌ வல்ல ஸித்தரான படலத்தில்‌, தென்மதுரை நகரத்து வீதியில்‌ கால்‌ நிலந்தோய நடமாடிய பரமஶிவனார்‌ தனி மனிதன்‌ பிறரது கண்களுக்குப்‌ புலப்படும்படியான ஊனுடல்‌ தாங்கிய வனாகவே அதி மனிதனாகக்,‌ கடவுள்‌ மனிதனாக (Godman) வாழ முடியும்‌ என்பதை விளக்கி னார்‌ அன்றோ! கடவுளுக்கு மானுட வடிவம்‌ கொடுக்கும்‌ கொள்கையும்‌ (Anthropomorphism) இவ் ‌வுண்மையையே வலியுறுத்து கின்‌றதேயன்றி, கடவுளை மானுட வடிவத்திற்கு இழித்து விட்ட தாகக்‌ கொள்ளுவது சிறவாது. வைகுண்டாதிபதியான மஹா விஷ்ணு ராமன்‌ என்ற மனிதனாக அவதரித்தான்‌ என்ற இடமும்‌ மானுடன்‌ கடவுண்மை வாழ்வில்‌ விளங்க இயலும்‌ என்பதைப்‌ பறை சாற்றுவதே ஆகும்‌. மானுடன்‌ கடவுண்மை வாழ்வாம்‌ ஒளன்மனஸ்யம்‌ என்ற வாழ்வில்‌ ஏற்றம்‌ (Ascent) உறும்‌ பண்பு சிறக்கையில்‌, கடவுள்‌ அவனிடம்‌ இறக்கம்‌ (Descent) உறுகிறார்‌ என்று சொல்லப் படுகிறது. ஒளன்மனஸ்ய வாழ்வு ஒருவனிடம்‌ பொலியத்‌ தொடங்கும்‌ கணத்தில்‌ அத்தகையவனிடம்‌ அவ்வமயம்‌ ஏற்றமும்‌ (Ascent towards Godhead‌) இறக்கமும்‌ (Descent of Divine) ஒருங்கே நிகழ்கின்றன, இத்‌தகைய அரிய பெரிய நிலையை வெகு எளிதில்‌ அம்பிகையின்‌ மந்த்ரத் திருமேனி நிறைவேற்றித்‌ தருகிறது.
எந்த ஒரு மந்த்ரமும்‌ ஒளன்மனஸ்ய வெற்றியைப்‌ பெறுவதற்குப்‌ பயன் படும்‌. அப்படியான‌, மந்த்ரங்கள்‌ பல (ஏழு) கோடிகளாக விரிந்திருப்பா னேன்‌? என்ற வினா எழுவது இயல்பு. இவ்விடத்தில்‌ தான்‌ நமது பண்டைய பெரியோர்களின்‌ பெருந்தகைமையும்‌, வாலறிவும்‌, ஆராய்ச்சி நுட்பமும்‌ புலனாகின்‌றன. ஊன்‌ உடலின்‌ தோற்றத்‌தில்‌, குரலில்‌, நடையில்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ உடலில்‌ வேற்றுமை உள்ளது; எள்ளளவாவது வேற்றுமை இருந்தே தீருகிறது. இது, இயற்கை யின் நீதி. (Individuality is the law of Nature)‌ புற உடலிலேயே இத்துணை வேற்றுமை என்றால்‌, ஸூக்ஷ்ம உடலில்‌ எத்துணை வேற்றுமை இருக்க வேண்டும்‌? அடிப்படை அமைப்பில்‌ (the fundamental constitution) ஊனுடலில்‌ வேற்றுமை இல்லாவிடினும தோற்றம்‌, நிறம்‌, குரல்‌ முதலி யவற்றுள்‌ வேற்றுமை கண்‌ கூடு. அவ்வாறே மனத்தின்‌ அடிப்படை அமைப்பின்‌ வேற்றுமை இல்லாவிடினும்‌ தனிப்பட்ட குணம்‌ முதலிய வற்றில்‌ வேற்றுமை இருந்தே தீருகிறது. ஸூக்ஷ்ம உடலில்‌ மனமே வெகு முக்யமானது. ஒவ்வொரு மனிதனிடத்தும்‌ மனம்‌ விழைவு வகைகளில்‌ வேற்றுமைப்‌ படுகிறது. கடவுண்மையை, ஒளன்மனஸ்‌ய த்தை நிறைவேற்றிக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற வேட்கை பல மனங்க ளுக்குப்‌ பொதுவாக இருக்கலாம்‌. ஆனால்‌ அந்நிலை நிறை வேறுவதற் கான முறைகளைப்‌ பின்பற்றுவதில்‌ மனத்துக்கு மனம்‌ பண்பாட்டில்‌ வேறுபடுகிறது. மந்த்ரயோகம்‌ என்ற முறையைக்‌ கைக்கொள்ளுவதில்‌ பல மனங்களுக்கு பொதுவான பண்பாடு (Common culture) இருந்தாலும்‌ குறுப்பிட்ட மந்த்ரங்களில் குறிப்பிட்ட மனங்களுக்கு விழைவு ஏற்படு கிறது. ஆகவே பல மனப் பண்பாட்டிற்க்குகந்த வகையில்‌ பல்வேறு மந்த்ரங்கள்‌ உள்ளன.
மந்த்ரங்கள்‌ அக்ஷரங்களின்‌ பலவகையான கூட்டுக்களே தொகை களே ஆகும் (Permutation and combination of letters) ‌ ஆனால்‌, அக்ஷரங்க ளின்‌ கூட்டுக்களால், அக்கூட்டுக்களில்‌ ஆற்றலமைதியில் (the constitution of power) வேற்றுமை ஏற்படுகிறது. சில மந்த்ரங்கள்‌ மிக மிக விரைவில்‌ பலன்‌ தருகின்றன; சில மந்த்ரங்கள்‌ நீண்ட காலப் போக்கில்‌ நிதானமாகப்‌ பலன்‌ தருகின்றன. அதி சீக்ரத்தில்‌ நிறைந்த பலனை அடைய வேண்டும்‌ என்ற பெருவிழைவுடைய மனங்களுக்கு, மிக மிக ஆற்றல்‌ பொதிந்த அக்ஷரக்கூட்டங்களாம்‌ மந்த்ரங்களும்‌ உள்ளன. மிக மிக ஆற்றல்‌ உடைய மந்த்ரங்கள்‌ என்று அவ்வவற்றின்‌ ஆற்றலைப்‌ பற்றியெல்லாம்‌ தங்களது நீண்டகால ஆராய்ச்சியின்‌ மூலம்‌, உழைப் ‌பின்‌ மூலம்‌ பண்டைய பெரியோர்கள்‌ விளக்கி உள்ளனர்‌. மிக ஆற்ற லுடைய மந்த்ரத்தை ஒருவன்‌ பெற்றாலும்‌, அவ்‌வொரு மந்த்ரத்தில்‌ விடா முயற்சியுடன்‌ உழைக்காமல்‌ போவானாயின்‌, அம்மந்த்ரம்‌ அவனிடம்‌ தனது ஆற்றலை வெளிப்படுத்துவதில்லை. பல குரவர்களை நாடிக்கொண்டு பல மந்த்ரங்களில்‌ மாறி மாறி ஈடுபடு பவர்‌கள் தங்களது முயற்சியை விழலுக்கிரைத்த நீராக்கிக்‌ கொள்கிறார்கள்‌. அத்தகைய பண்பாட்டிலுள்ளவர்கள் தங்கள்‌ பிழை யைத் தங்கள்‌ அனுபவத்திலேயே, தங்களது தோல்விகளின்‌ மூலமாகவே ஒரு பிறவி யிலோ, பல பிறவிகளிலோ அறிகின்‌றனர். பின்னர்‌ ஒரு மந்த்ரத்தில்‌ விடாப்பிடியுடன் ஈடுபடுவதற்கான திண்மையைப்‌ பெறுகின்றனர்‌. தான்‌ கொண்ட மந்த்ரத்தில் அசைக்க முடியாத விஶ்வாஸம்‌ (நம்பிக்கை) உடையவாகள்‌ மஹாபாக்யசாலிகள்.‌ ஆனால்‌ உலகில்‌ எல்லோரும்‌ பாக்யசாலிகளாகப்‌ பிறக்கவில்லையே! தண்ணீருக்காகப்‌ பலவிடங்களில்‌ கிணறு வெட்டினவனைப்‌ பற்றி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய உவமைக்‌ கதைக்கு இலக்கியமாகத் திகழ்கின்‌ற வர்களே அன்‌றோ உலகில்‌ மல்கி உள்ளனர். ஆக, மந்த்ரத்தில்‌ எத்துனை ஆற்றல்‌ இருந்தாலும்‌, அதில்‌ உழைப்பவனுக்கு த்ருட விஶ்வாஸமும்‌ இடையறா உழைப்பும்‌ அவசியமாகும்‌. த்ருட- விஶ்வாஸமும்‌ இடையறா உழைப்பும்‌ உடையவர்கள்‌ சடுதி யிலோ, அல்லது சிறிது காலந்தாழ்ந்தோ நிறைந்த வெற்றியை அடைவது திண்ணம்‌. எவ்வளவுக்கு விஶ்வாஸத்துடன்‌ கூடிய உழைப்பு உள்ளதோ, அவ்வளவுக்கு வெற்றி திண்ணமாகும்‌.
மந்த்ரங்களில்‌ ஈடுபட்டவன்‌ அடையும் வெற்றி வகைகளைப்‌ பற்றி அறிவதற்கு முன்‌, மந்த்ரங்களில்‌ எப்படி ஈடுபட வேண்டும்‌ என்ற முறைகளைச்‌ சிறிது அறிவோம்‌. எந்த மந்த்ரத்திலும்‌ ஈடுபடுபவன்‌ தனது மந்த்ரத்தை வெகு குப்தமாக (உள்‌ளத்தில்‌ மறைவாக) வைத்துக்‌ கொள்ளவேண்டும்‌. தான்‌ மந்த்ர உபாஸகன்‌ என்றோ, அல்லது இன்ன மந்த்ரத்தை வழிபடுபவன்‌ என்றோ பலரிடத்தும்‌ தம்பட்டம்‌ அடித்துக் கொள்‌ளக்கூடாது. மந்த்ரத்தில்‌ உழைப்பவன்‌ தொடக்க காலத்தில்‌ நன்கு உரக்க வாய்‌ விட்டுச்‌ சொல்லிப்‌ பழக வேண்டும்‌. ஆனால்‌ இக் காலத்திலும்‌ பிறர்‌ செவியிற்படாவண்‌ணம்‌ தனியிடத்திலிருந்து உரக்கச்சொல்லி சில நாள்‌, அல்லது மாதம்‌ பழக வேண்டும்‌. தான் மந்த்ரோபாஸகன்‌ என்பதோ, இன்ன மந்த்ரத்தை வழிபடுபவன்‌ என் பதோ, பலரும்‌ அறியும்‌ பொழுது, அவ்‌வாறு அறிபவர்களின் மன அலைகள்‌ மந்தரோபாஸகனைப்‌ பற்றியும்‌, அவனது முயற்சிகளைப்‌ பற்றியும்‌ பல வகைகவில்‌ குறுக்கிடும்‌. அப்பொழுது வழிபடுபவனுக்கு உழைப்பும்‌ சிரமமும்‌ அதிகமாகின்‌றன. மனத்திலும்‌ சோர்வு, சோம்பல்‌ போன்ற நிலைகள்‌ ஏற்படும்‌. வெள்ளத்தை நோக்கி எதிர்‌ நீச்சல்‌ போட வேண்டியவனுடைய நிலை மனத்திற்கு ஏற்படுகிறது. ஸ்தூல சரீரம்‌ இல்லாது ஸூக்ஷ்ம சரீரிகளாக (Disembodied souls) உள்ள ஜீவகோடிகள்‌ உலகில்‌ கணக்கிட முடியாத அளவுக்கு உள்‌னனர்‌. அத்தகையவர் களுடைய மன அலைகளே பல சமயம்‌ மந்த்ரோபாஸகனுக்கு‌ இடையூறு செய்கின்றன. அத்தகைய மனங்களில்‌ அனுகூலமான வைகளும்‌ உண்டு ஆனால்‌ ப்ரதிகூலமானவைளே அதிகம்‌. அப்படி யிருக்க உடல்‌ தாங்கி நடமாடுபவர்களின்‌ மன அலைகளும்‌ சேர்ந்து உபாஸகனது முயற்சிகளில்‌ குறிக்‌கிடுமானால்‌, வெற்றியடை வதற்கு உபாஸகன்‌ வெகு சிரமப்படவேண்டியிருக்கிறது. ஆகவே, தனது வழிபாடு, முயற்சி ஆகியவைகளை யாரிடமும்‌ தம்பட்டமடிக் காது, தான்‌ ஒரு மந்த்ர உபாஸகன்‌, அதுவும்‌ குறிப்பிட்ட இன்ன மந்த்ர உபாஸகன், என்பதே தனக்கு உபதேசித்த குருவைத்‌ தவிர வேறு யாருக்கும்‌ தெரியாத வகையில்‌ குப்தமாக மந்த்ரத்தில்‌ உழைக்க வேண்டும்‌, அப்பொழுது சடுதியில்‌ மந்தரம்‌ ஸித்³தி⁴கும்‌, ஸூக்ஷ்ம சரீரிகளாக மட்டும்‌ சஞ்சரிப்‌பவர்களின்‌ மன அலைகள்‌ நம்மைத்‌ தாக்கா வண்ணம்‌ நிபாஸங்கள்‌, திக்‌பந்தங்களையெல்லாம்‌ செவ்வையாகச்‌ செய்து கொள்ள வேண்டும்‌. தனது முயற்சியில்‌ ஒத்துழைத்‌துத்‌ தனக்கு வெற்றி தருமாறு அனுகூலமான அலைகளை அனுப்பித்‌ தனக்கு வாழ்‌வில்‌ உய்வு ஏற்படும்படி குருபரம்பரையைச்‌ சேர்ந்த மஹாபுருஷர்களைத்‌ தொடக்கத்‌திலும்‌ இறுதியிலும்‌ நன்கு தியானிக்க வேண்டும. உலகினரின் நலனுக்காக நுண்ணுடலில்‌ ஸஞ்சரிக்கும்‌ குருபரம்பரையினரது அனுகூலமான மன அலைகளைப்‌ பெறுவதால்‌ உபாஸகன்‌ அதி சீக்ரத்தில்‌ மந்தர ஸித்³தி⁴யை அடைகிறான்‌. தனக்கு மந்த்ரத்தை உபதேசித்த ஊனுடல்‌ தாங்கிய நிலையில்‌ உள்ள குருவினிடமும்‌ நன்றியுடனும்‌, அடக்கத்துடனும்‌, பக்தி நன்றியுடனும்‌, அடக்கத்துடனும்‌, பக்தியுடனும்‌ இருப்பது வெகு வெகு அவசியமாகும்‌. தக்ஷிணாமூர்த்தி தொடங்கியுள்ள. மஹாகுரு பரம்பரையில்‌ தனக்கு சிஷ்ய ஸ்‌தானம் ஏற்படும்படியாக அருள்புரிந்த‌ குருவினிடம்‌ நன்றியில்லாமற்‌ போனால்‌, குருபரம்பரையின்‌ அனுக்ரஹம்‌ ஏற்படாத தோடு, குருபரம்பரையின்‌ சாபத்‌திற்கும் (Most adverse mental waves)‌ ஆளாக வேண்டி வரும்‌; அப்பொழுது தான்‌ எடுத்துக் கொண்ட மந்த்ரத்தில்‌ வெற்றியேற்‌படாததோடு, மட்டுமல் லாமல்‌ தனது வாழ்வின்‌ பல துறைகளிலும்‌ தோல்வியும்‌ துன்பமும்‌ குறுக்கிடுகிறது. வேதாந்த ஞானத்‌தைச்‌ சரியான முறையில்‌ பெறாது, தான்‌தோன்றித்‌தனமான முறையில புரித்து கொண்டு, குருவினிடம்‌ அபசாரம்‌ செய்தவர்கள்‌ வாழ்வில்‌ வரும்‌ பல இன்னல்களுக்‌குக்‌ காரணம்‌ தெரியாது திகைக்கின்றனர்‌; துன்புறுகின்றனர்‌, குருவினிட மும்‌, குரு பரம்பரையினிடமும்‌ புரியும்‌ அபசாரம்‌ அவனைப்‌ பல பிறவி களிலும்‌ தொடரலாம்‌, இவ்‌ விஷயத்தை மந்த்ரோபாஸகர்கள்‌ நன்குக்‌ கவனிக்கவேண்டும்‌. தொடக்கத்தில்‌ மந்த்ரங்களை வாய் விட்டுச்‌ சொல்லிப்‌ பழகவேண்டும்‌. என்கிறோம்‌, மனமும்‌ அங்குச்‌ சேர வேண்டும்‌ எனறு சொல்லாமலே கூறப்படுகிறது. மனத்‌தினால்‌ மட்டும்‌ செய்யப்படும்‌ ஜபம்தான்‌ சிறந்தது. ஆனால்தொடக்க காலத்தில்‌ மனத்‌ தினால்‌ மட்டும்‌ ஜபம்‌ செய்ய எல்‌லாராலும்‌ முடியாது. நமது சிறிய குழந்தையைப்‌ பள்ளியில்‌ சேர்த்த தொடக்க காலத்தில்‌ குழந்தையைப்‌ பள்ளிக்கு அழைத்துச்‌ செல்ல ஒரு ஆயாவை அமர்த்துகிறோம்‌, ஏன்‌? பள்ளிக்குப்‌ போகும்‌ வழியில்‌ பல கவர்ச்சிகளுக்குக்‌ குழந்தை ஈடு கொடுத்து அதனால்‌ துன்பத்தையும்‌ ஆபத்தையும்‌ அடையலாம்‌, பல வண்டிகளும்‌, வாஹனங்‌களும்‌ ஓடிக்‌ கொண்டிருககிற விதியில்‌ குழந்தை பள்ளிபோகும்‌. தொடக்க காலத்‌தில்‌ பல கவர்ச்சிகளால்‌ ஈர்க்கப்பட்டுக்‌ கவனக்‌ குறைவுகளுக்கு ஆளாகலாமல்லவா ! அதற்காக ஆயாவை ஏற்படுத்துறோம்‌. ஆயா இல்லாமலேயே கவனத்துடன்‌ பள்ளிபோகும்‌ ஆற்றல்‌ குழந்தைகளுக்கு வந்தவுடனே ஆயாவை நிறுத்தி விடு கிறோம்‌. அதுபோல, தொடக்க காலத்தில்‌ மனமாகிற குழந்தையுடன்‌ வாசிக ஜபம்‌ (வாய்‌ விட்டுச்‌ சொல்லி ஜபம்‌ செய்தல்‌) என்ற ஆயா தேவை. கொஞ்சநாள்‌ கழித்து வாசிக ஜபம்‌ தேவையில்லாமற்‌ போகிறது. மனது தானே ஜபம்‌ செய்யும்‌ ஆற்றல்‌ உடையதாகிறது. மனத்தினால்‌ மட்டும்‌ ஜபம்‌ செய்வதைப்‌ பற்றிய விரிவுகளை காண்‌போம்‌.
மந்த்ரங்களை ஜபம்‌ செய்யும்‌ முறையைப்‌ பற்றி ஆராயத்‌ தொடங்கிய நாம்‌, சென்ற கட்டுரையில்‌ வாசிக ஜபம்‌ என்பது பற்றி அறிந்தோம்‌. வாசிக ஜபம்‌-வாய்விட்டு உரக்கச்‌ சொல்லி-ஜபம்‌ செய்வது. வாசிக ஜபத்திலும்‌ மனது சேராமல்‌ வெறு வாய்ச் சத்தமாக இருக்கக்‌ கூடாது என்பதும்‌ அறிந்தோம்‌. தொடக்க காலத்தில்‌ வாசிக ஜபம்‌ எவ்வாறு‌ பேருதவி செய்கிறது என்பதையும்‌ அறிந்‌தோம்‌. வாசிக ஜபத்திலிருந்து முற்றிலும்‌ மனத்தினாலேயே செய்யப்படும்‌ மானஸிக ஜபத்திற்கு ஒருவன்‌ வருகையில்‌, இடையில்‌ உபாம்சு ஜபம்‌ என்ற ஒருமுறையும்‌ உள்ளது. பிறருடைய செவிகளுக்‌குப்‌ புலப்படாமல்‌ தன்‌ செவிக்கு மட்டும்‌ புலப்படும்‌ வண்ணம்‌ உதடுகளின்‌ அசைவுகளால்‌ மட்டும்‌ வெகு மெலிந்த ஒலியுடன்‌ ஜபம்‌ செய்வது உபாம்சு ஜபம்‌ ஆகும்‌. உபாம்சு ஜபத்திலும்‌ மனமும்‌ சேர்ந்து உழைக்கிறது என்பது சொல்லாமலே பெறப்படும்‌. வாசிக ஜபம்போல்‌ உபாம்சு ஜபமும்‌ தொடக்க காலத்தில்‌ பயனுடையதாகும்‌. சில காலம்‌ உபாம்சு ஜபத்‌தில்‌ நன்கு பழகியவன்‌ இறுதியில்‌ மானஸிக ஜபத்தில்‌ நன்கு வேறூன்ற முடியும்‌. மானஸிக ஜபம்தான்‌ உண்மையில்‌ சிறந்ததாகும்‌. நம்முடைய வாயும்‌, உதடுகளும்‌ அடித்துத்‌ துரத்தப்பட்டாலும்‌ நம்மை விட்டு நீங்கா; ஆனால்‌ மனமோ நம்‌மிடத்தில்‌ கட்டுப்பட்டு இருக்கவேண்டும்‌ என்று நாம்‌ எவ்வளவு விரும்பின்லும்‌ பல வேறு திக்குகளில்‌ ஓடிவிடும்‌ தன்மையுடையதாய்‌ உள்ளது; பல வேறு சிந்தனைகளில்‌ தடுமாறும்‌ பான்மையுடையதாய்‌ இருக்கிறது. இத்தகைய அதனுடைய தன்மை மாறி நிலையாக ஒரே மந்த்ரத்தில்‌ நீண்ட காலம்‌ வேறூன்றி நின்று உழைக்கும் பான்மைத்தாக மனத்தில்‌ ஒரு மாற்றம்‌ நிகழவேண்டும்‌. இத்தகைய மாற்றம்‌ வெகு எளிதில்‌ கூடுவதொன்‌றல்ல; விடாப்பிடி யான உழைப்பினாலேயே கைகூடுவதாகும்‌, வாசிகமாக ஒரு மந்த்ரத்தை லட்சம்‌ முறைகள்‌ ஜபம்‌ செய்வதால்‌ ஏற்படும்‌ பயன்‌ (புண்யபலன்‌) உபாம்சு ஜப முறையில்‌ ஒரு ஆவ்ருத்தியால்‌ கிட்டி விடுகிறது. உபாம்சு ஜப முறை யில்‌ லக்ஷம்‌ ஆவ்ருத்திகள்‌ ஒரு மந்த்ரத்தை ஜபம்‌ செய்வதால்‌ என்ன பயன்‌ கிடைக்குமோ அப்பயன்‌ மானஸிக ஜபத்‌தின்‌ ஒரு ஆவ்ருத்தியால்‌ கிட்டும்‌ என ஞானார்ணவம்‌ கூறுகிறது. மானஸிக ஜபத்தின்‌ சிறப்பு எத்துணைத்தாகும்‌ என்று இயம்பவும்‌ வேண்டுமோ ? மனத்தின்‌ கண்‌ மறைந்து கிடக்கும்‌ ஆற்றல்கள்‌ யாவும் மானஸிக ஜபத்தினுலேயே வெளிப்படுகின்றன. மனத்தின்‌ கண்‌ மறைத்துகிடக்கும்‌ ஆற்றல்கள்‌ எவை ! உலகியலை பற்றிய எல்லா ஞானங்களும்‌, பரவியலை பற்றிய எல்லா ஞானமும்‌ மனத்தின்‌ வெகு ஆழத்தில்‌ மறைந்து கிடப்பவைகளே. நம் மனத்தின்‌ கண்‌ ஏற்கனவே மறைந்திராத‌ எந்தப்‌ புதிய ஞானமும்‌ நம்மால்‌ புறவுலகினின்றும்‌ அடையப்‌ படுவதில்லை. புற உலகினின்றும்‌ புதிதாக நாம்‌ பெறுவது என்று நாம்‌ கருதும்‌ எந்‌த ஞானமும்‌ நமது மனத்தின்‌ கண்‌ ஏற்கனவே மறைந்திருந்து, தற்பொழுது ஒரு ஸாதனத் தினால்‌, முயற்சியினால்‌ வெளிப்படுவதே ஆகும்‌. கல்வி என்‌ற சொல்லே இப்பொருளை காட்டுகிறது. நம் மனத்தின்‌ கண்‌ மறைந்து கிடைக்கும்‌ அறிவு வகைகள்‌ கல்லி எடுக்கப்‌படுவதற்கான முயற்சியே கல்வி ஆகும்‌. ஆகவே அறிவாற்றல்கள்‌ (Powers of Knowledge) யாவும்‌ ஏற்கனவே நம்மிடத்து மறைந்து கிடக்கின்‌றன, கிணறு தோண்டு பவன்‌ தண்ணீரைப்‌ புதியதாக உண்டாக்குவதில்லை; தண்ணீர்‌ வெளிப்படுவதற்கு முடியாமல்‌ மேற்பரப்பிலுள்ள மறைப்புகளை நீக்குகின்றான்‌; அவ்வளவே. அறிவாற்றல்களின்‌ நிலை இங்ஙனமெ னில்‌ செயலாற்றல்களின்‌ (Powers of Action) நிலையும்‌ இத்தகைத்தே ஆகும்‌. மிக மிகப்‌ பெரிய பொறிகளால்‌ (Engines) உலகில்‌ நிறைவேற்ற ப்படும்‌ எல்லா வெற்றிகளைத்‌ தருவதற்கு வேண்டிய ஆற்றல்கள்‌ யாவும்‌ மனத்தினுடைய வெறும்‌ சிந்தனையிலேயே மிளிர்கின்றன. ஆனால்‌ சிந்தனையின்‌ வல்லமை (Power of Thought) அத்துணையாகப்‌ பொலியாமலிருப்பதற்குக்‌ காரணம்‌ மனத்தின்‌ மேற்பரப்பில்‌ மல்கி யுள்ள பல்வேறு குறைபாடுகளே ஆகும்‌. இக்‌குறைபாடுகள்‌ நம்பிக்கை யின்மை, கோழைமை போன்ற பலவடிவங்களில்‌ விளங்குகின்றன. இத்தகைய குறைபாடுகள்‌ மனத்தின்‌ மேற்பரப்பினின்றும்‌ விலகும்‌ பொழுது, மனத்தின்‌ அடித்தளத்திலிருந்து பீச்சியடிக்கும ஆற்றலின்‌ வல்லமையை அளவிட்டுச்‌ சொல்வதற்குப்‌ புற உலகில்‌ கருவிகளும்‌ உளவோ? அறிவாற்றல்களும்‌, செயலாற்றல்களும்‌ இப்பான்‌மைத்‌தா யின்‌, பொருளாற்றல்களும்‌, (Powers of wealth) இப்பான்மைத்தே ஆம்‌ என்பதில்‌ தினையளவும்‌ ஐயம்வேண்‌டாம்‌. உலகின்கண்‌ “கண்ணுள்‌ள எல்லாச்‌ செல்வங்களும்‌ மனத்தின்கண்‌ மறைத்து கிடக்கின்றன. மனத்தின் கண் மறைந்து கிடக்கும்‌ பொருட்‌ செல்வத்தின்‌ அளவும்‌ உலகில்‌ பொலியும்‌ பொருட்‌ செல்வத்‌தின் அளவும்‌ ஒரு பெருங்கடலை யும்‌ அக்‌கடலின்‌ ஒரு சிறு நீர்த் திவலையையும்‌ நிகர்பனவே. புற உலகில்‌ பருப்பொருள்‌களாக உள்ள எல்லாச்‌ செல்வங்களும்‌ புற உலகிற்குரிய சாதனங்கள்‌ கருவிகள்‌, முதலானவையின்றியே, சிந்தனை மாத்திரத்தினாலேயே [By the mere power of thought) மனத் தினால்‌ நிறைவேற்றக்‌ கூடியவையே; அதாவது மனம்‌ தன்னில்‌ மறைந்திருக்கும்‌ செல்வங்களைப்‌ புற உலகில்‌ பருப்பொருள்‌களாக புலப்படுத்‌தும்‌ வல்லமையுடையதாகும்‌. வானளாவிய நிலையில்‌ புற உலகில்‌ பொலியும்‌ விண்கீறிகளாம்‌ (Skyscrapers) பெருங்‌கட்டடங்கள்‌ போன்‌றவைகளும்‌ மனத்தின்‌ ஒரு சிந்தனத்தினாலேயே (by mere thought) யாதொரு சாதனமும்‌, கருவியுமின்றி (without the help of any accessory or instrument) ஸ்ருஷ்டி செய்யப்படக் கூடியவைகளே ஆகும்‌. உலகியல்‌ நிலையில்‌ மனத்தினால்‌ ஆகாத ஒரு செயலும்‌ இல்லை; மனத்தினால்‌ நிறைவேற்ற முடியாத ஒரு பொருளும்‌ இல்லை; மனத் துக்குப்‌ புறம்‌பான எத்தகைய ஞானமும்‌ புற உலகியல் நிலையில்‌ இல்லை. மனம்‌ என்பது தனிப்‌ பட்ட ஒன்றும்‌ அன்று. அகில உலகிலும்‌ வியாபித்துள்ள மனம்‌ ஒன்றே ஆகும்‌. மிகப் பிருமாண்டமான ஒரு நுண்பொருட்‌ கோளம்‌ (A gigantic spherical body of subtle matter) போல்‌ மனதை அறிவோமானால்‌, அந்தக்‌ கோளத்தின்‌ மேற்பரப்பில்‌ உள்ள வெகு வெகு நுண்ணிய புள்ளிகளே (Very, very microscopic points) தனி மனங்களாம்‌ (Individual minds) ஒவ்‌வொருவரும்‌ தனது தனி மனமாம்‌ மேற்‌பரப்பில்‌ அடங்கிவிடாது, தன் மனத்தின்‌ ஆழங்களில்‌ குளிக்க இயலுமானால்‌, தனி மனம்‌ என்பதே ஒரு மித்யை (Fiction) என்பதை அறிவான்‌; விஶ்வாத்ம மனம்‌ (Cosmic mind) என்‌பதே உண்மை என அறிவான்‌. விஶ்வாத்ம மனம்‌ என்பது தான்‌ ப்ரஹ்மதேவன்‌ என்‌று புராணங்களில்‌ வர்ணிக்கப்படுகிறது. விஶ்வாத்ம மனம்‌ ஒருவனிடம்‌ ஸஹஜமாய்ப்‌ பொலிந்து விடுமாயின்‌ அவன்‌ எல்லாமறிந்தவனாக வும்‌, ஏதும்‌ வல்லவனாகவும்‌ ஆகிறான்‌. தான்‌ ஒரு தனிமனிதன்‌ என்று பிறரால்‌ காணப்படுவானாவினும்‌, தன்னைத்‌ தனி மனிதனாகப்‌ பிறருக்குக் காட்டும்‌ தனியுடலில்‌ அவன்‌ சிறையுண்டவன்‌ அல்லன்‌ பிறரது உடல்களையும்‌ அடக்கியாளும்‌ வல்லமை வெகு வெகு சுலப மான செயலாகும்‌. ஒரு தனி மனிதன் தனது கைகளை எவ்வளவு சுலப மாக நீட்டி மடக்குகிறுனோ, அதுபோல அவ்வளவு சுலபமாக உலகி லுள்ள எல்லா உடலங்‌களையும்‌, தாவரங்கள்‌, விலங்குகள்‌ மனிதர்கள்‌ போன்‌ற எல்லா உயிர்களின்‌ உடலங்களையும்‌ உயிரற்றவை என்‌று கூறப்படும்‌ எல்லாச்‌ சிறிய பெரிய பொருள்‌களை யும்‌, விஶ்வாத்ம மன வாழ்வினன்‌ ஆளமுடியும்‌. ஒரு தனி மனிதனுக்குத்‌ தான்‌ விரும்பித்‌ தன் கால்களால்‌ நாலடிகள்‌ நடப்பது எவ்வவவு சுலபமோ அவ்வளவு சுலப மாகும்‌ விஶ்வாத்ம மன வாழ்வினனுக்கு எல்லா வகையான ஞான ஸித்³தி⁴களும்‌, க்ரியா ஸித்³தி⁴களும்‌, இச்சா ஸித்³தி⁴களும்‌ என அறிய வேண்டும்‌.
மந்த்ரங்களின்‌ மானஸிக ஜபத்தினால்‌ ஸகல ஸித்³தி⁴களையும்‌ வெகு இயல்பாக ஒருவன்‌ தன்னிடத்து நிறைவேறறிக்‌ கொள்ள முடியும்‌ அவ்வாறு‌ நிறைவேற்றிக்‌ கொள்வதற்கான விஶ்வாத்ம மன வாழ்வை வெகு இயல்பில்‌ நிறைவேற்றிக்கொள்ள. முடியும்‌ என்றால்‌, மானஸிக ஜபத்தின்‌ பெருமையை என்னென்பது? மானஸிக ஜபம்‌ அரிய பெரிய ஸித்³தி⁴களைத் தருகிறது என்றவுடன்‌, “அத்தகைய ஸித்³தி⁴களால்‌ என்ன பயன்?” அத்தகைய ஸித்³தி⁴களில்‌ ஒருவன்‌ நாட்டம்‌ கொள்ளல்‌ தகுமோ? ஸித்³தி⁴களால்‌ நாம்‌ துன்பமுறுவதைத்‌ தவிர உண்மையான இன்பம்‌ அடைய இயலுமோ ?’ என்பது போன்‌ற வினாக்களை என்பது போன்‌ற வினாக்களை எழுப்புகின்றனர்‌. மலடி ஒருத்தி தன் பக்கத்து வீட்டுக்காரி ஒரு பிள்ளையை ஈன்றபொழுது, பிள்ளைகளை ஈனுவதால்‌ என்ன பயன்‌? பிள்ளைகளைப்‌ பெறுவதில்‌ ஒருத்தி நாட்டம் கொள்வாளானால்‌ அவள்‌ அடைவது துன்பத்தையே தவிர இன்பம்‌ ஆகுமோ? என்பது போன்ற வினாக்களை எழுப்பினாளாம்‌. அது போலத்தான்‌ இருக்‌கிறது, ஸித்³தி⁴க்களின்‌ பயன்‌ பயனிலையைப்‌ பற்றி ஒருவன்‌ வாய்ப் பந்தல்‌ போடுவது ஆகும்‌. தனக்கு எட்டாத பழம்‌ புளித்த பழம்‌ என்று நரி ஒன்று கூறியது போலத்தான்‌ ஸித்³தி⁴யின்‌ பயனின்மையைப்‌ பற்றிப்‌ பேசு பவர்களெல்லாம்‌ உள்ளனர்‌. உண்மை யில்‌ ஸித்³தி⁴களே அல்லாத, ஆனால்‌ க்ஷுத்ர ஆவிகளின்‌ உதவி கொண்டு ப்ரகடனம்‌ செய்யப் படுகின்ற, சின்னஞ்சிறு செயல்களில்‌ பிரமிப்பவர்களும்‌ விஸ்மயம்‌ அடைபவர்களும்‌, ஸித்³தி⁴கள்‌ பயனற்ற வைகள்‌ என்றால்‌ அதற்கு ஏதாவது பொருளுண்டோ? நாம்‌ இங்குக்‌ குறிப்பிடும்‌ ஸித்³தி⁴ என்பது ஈச்வரனது நிலை ஆகும்‌. அவனிடம்‌ அணிமாதிகளும்‌, ஸர்வஜ்ஞத்வம்‌ முதலியவைகளும்‌ நிழல்போல்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கின்‌றன. அதே சமயத்தில் அவ்‌ ஈசுவரன்‌ தனது ஸச்சிதானந்த நிர்க்குணப்‌ பெருமையினின்‌றும்‌ எள்ளளவும், பிறழாத பெம்மையுடனும்‌ இருக்‌கின்றான் ஆகவே நாம்‌ குறிப்பிடும்‌ ஸித்³தி⁴ மானிட உணர்வு நிலையில்‌ வாழ்பவன்‌ பெறும்‌ சிறிய அடை வுகள்‌ (Petty attainments) அல்ல. உலகியலில்‌ வீறுகொண்ட வாழ்வும்‌ (Dynamic life) ஆத்மீகத்தில்‌ ஸஹஜ ஸுகானுபவமும்‌ ஒருங்கே முரண் ‌பாடின்றிப்‌ பொலியும்‌ ஸித்³தி⁴யே நாம்‌ குறிப்பிடும்‌ ஸித்³தி⁴ அத் தகைய ஸித்³தி⁴ மந்தர யோகத்தில்‌ மானஸிக ஜபத்தின்‌ மூலம்‌ அமை யப்படுகிறது என்‌கிறோம்‌. உபாஸகனை விட்டு மனம்‌ விலகிய ஸச்சிதானந்தப்‌ பெருவாழ்வை, அதேசமயத்‌தில்‌ மனத்தினிடம்‌ உயர்ந்த பண்பாடுகளும்‌ அணிமாதி ஸித்³தி⁴களும்‌ விளங்கும்‌ வாழ்வை, இத்தகைய மஹாஸித்³தி⁴யுடன்‌- ஒருங்கே இருவகை ஸித்³தி⁴யுடன்‌-கூடிய மஹாஸித்³தி⁴ நிலையையே நாம்‌ குறிப்பிடுவது என அறிய வேண்டும்‌. ஆக நாம்‌ குறிப்பிடுவது ஈசுவரபாவம்‌ (Godhood) என்ற மஹாஸித்³தி⁴ நிலையாம்‌. ஈசுவரனிடத்தில்‌ ஸித்³தி⁴கள்‌ அவனது நிழல்போல்‌ விளங்குகின்றன. அதனால்‌ ஈசுவரனுக்குத்‌ துன்பம்‌ என்பது உண்டோ? அத்தகைய ஈசுவர பாவமே மஹாயோகத்துடன்‌ கூடிய மஹாஸித்³தி⁴ நிலையில்‌ வாழும்‌ வாழ்வாகும்‌. இவ்‌வாழ்வு மானஸிக ஜபத்தினால்‌ எளிதில்‌ அடையப் படுகிறது எனில்‌, மானஸிக ஜபத்தின்‌ ஏற்றத்தை என்னென்பது! மனத்தினால்‌ மட்டும்‌ செய்யப்படும்‌ மானஸிக ஜபத்தின்‌ முறைகளை இனி அறிவோம்‌. தான்‌ எடுத்துக் கொண்ட மந்த்ரத்தை மனத்தினால்‌ மட்டும்‌ தெளிவாக நன்கு உச்சரிக்க வேண்டும்‌, வேறு கருத்துக்கள்‌ இடையில்‌ குறுக்கிட வண்ணம்‌ மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்தல் வேண்டும்‌. தொண்டை, உதடுகள்‌, நாவு ஆகிய இடங்களிலும்‌ சிறிதும்‌ அசைவு‌ இல்லாமல்‌ மனத்தினால்‌ மட்டும்‌ ஜப‌ம் செய்வதே மானஸிக ஜபமாரும்‌, தொடக்க காலத்தில்‌ இந்த ஜபம்‌ அவ்வளவு சுலபமாக இருக்காது. ஆயினும்‌ வாசிக உபாம்சு ஜபங்களில்‌ பழகியவனுக்கு மானஸிக ஜபம்‌ எளிதில்‌ கைகூடும்‌. மானஸி ஜபத்தின்‌ தொடக்க காலத்தில்‌, மனது வேறு எண்ணங்களால்‌ குறுக்கிடப்படும் விக்ஷேபம்‌ என்ற தோஷத்தினால்‌ மனச்‌ சோர்வு அடைய வேண்டாம்‌. விக்ஷேபம் அடையும்‌ மனத்தைத்‌ திரும்பத்‌ திரும்ப, தான்‌ எடுத்துக்கொண்ட மந்த்ரத்தில்‌ நிறுத்துவதால்‌ சிறிது நாட்களில்லோ, மாதங்களிலோ விக்ஷேபம் ‌ என்ற தோஷத்தை ஜயித்துவிடலாம்‌. ஆரம்பத்‌தில்‌ விடத்தில்‌ அமர்த்த நிலையில்‌ இருந்து கொண்டுதான்‌ மானஸிக ஜபம்‌ செய்வதில்‌ ஈடுபடவேண்டும்‌. ஒவ்வொரு நாளும்‌ கால் மணியோ, அரை மணியோ, ஒரு மணியோ அவரவர்களுக்கு முடிந்த கால அளவை முதலிலேயே நிர்ணயித்துக்‌ கொண்டு, அந்தக்‌ கால அளவு க்குக்‌ குறையாமல்‌ மானஸிக ஜபத்தில்‌ ஈடுபட வேண்டும்‌. அக்கால வரையறையும்‌ காலையிலே மாலை யிலோ அல்லது இரண்டு வேளைக ளிலுமோ குறிப்பிட்ட நேரத்தில்‌ இருக்க‌ வேண்டும்‌. குறிப்பிட்ட நேரமும்‌ ஜபம்‌ செய்யும்‌ கால‌ அளவும் ஒவ்வொரு நாளும் முக்யமாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *