மஹாசியாமளையின் வழிபாடுShyamala – amrtananda yogiமஹாசியாமளையின் வழிபாடு
மஹாசியாமளை
லகுஶ்யாமளை
வாக்வாதினீ
நகுலீ
கேய சக்ரம்
மஹாகணபதி உபாஸனையை அடுத்து பொதுவாக பாலா மந்திரம் என்ற மூன்று எழுத்து மந்திரம் உபதேசிக்கப்படு கிறது. இம்முறை தற்காலத்து வழிபாட்டு வகையில் காணப் படுவதாகும். ஆயினும் உண்மை நோக்குமிடத்து மஹா கணபதிக்கு அடுத்தபடி மஹாசியாமளையின் உபாஸ னையே செய்யத்தக்கது என்பது சாஸ்திரங்களுக்குப் பொருத்துவதாகும். யுக்திக்கும் பொருந்துவதாகும். தேவி வழிபாட்டில் முழு வெற்றியடைவதற்கு வேண்டிய உள்ளப் பண்பாட்டை பொதுவான முறையில் மஹாகணபதி உபாஸனை அளிக்கிறது. அத்தகைய உள்ளப் பண்பாடு சிறப்பான முறையில் மகாசியாமளை உபாஸனையால் கிட்டுகிறது.
மஹாகணபதி நற்பண்பாடுகளுக்கெல்லாம் தலைவராக இருப்பவர். நற்பண்பாடுகள் எல்லாம் ஸத்வகுணத்தின் பாற் பட்டவைகள் ஆகும். ஆகவே மஹாகணபதி உபாஸனை வழி படுபவனுக்கு உள்ளத்தில் ஸத்வகுணத்தின் வெற்றியை அருள்கிறது. அத்தகைய ஸத்வகுணத்தின் வெற்றி மனம்-சித்தம் என்ற பகுதிகளில் ஏற்படுகிறது. அதனால் அஹங் காரம் ஸத்வகுணம் மேலோங்கியதாய் ஸாத்வீக அஹங் காரம் என்ற நிலையை அடைகிறது. ஸாத்வீக அஹங்காரத் தில் வெற்றி கண்ட உபாஸகன் இயல்பாகவே ஸத்வ குணத்தினதான புத்தியில் வாழும் வகையை மஹா சியாமளையின் உபாஸனத்தினால் பெறுகினான். மஹா சியாமளையே புத்தி தத்துவத்தை காட்டுபவள் தான். இயல்பாகவே எப்பொழுதும் புத்தியில் வாழத் தெரிந்தவனே உண்மையில் மானுடப் பிறப்பின் சிறப்பைப் பெற்றவனாகி றான். புத்தௌ சரணம் அன்விச என்று கீதாசார்யன் உபதே சிப்பதும் இங்கு கூர்ந்து அறியத் தக்கதாகும். புத்தியில் இயல் பாகவே வாழத்தெரிந்தவனுக்கு தாக்குறா உணர்வு வாழ்வு வெகு வெகு எளிதாகிவிடுகிறது. புத்தியில் வாழ்வது என்பது தான் புத்தியோகம் எனப் படுகிறது. புத்தி யோகத்தின் வெற்றியே, மஹாமாதங்கி வழிபாட்டின் பயன் ஆகும்.
மஹாசியாமளையின் மந்திரம் தொண்ணூற்றி எட்டு எழுத்து கள் கொண்டதாகும். தொண்ணூற்றி எட்டு எழுத்து மந்திரம் ஒருவனுக்கு சித்தியாகி விட்டால் மற்ற உலகில் உள்ள மந்திரங்கள் எல்லாம் வேத மந்திரங்கள் உட்பட ஒரு முறை படிப்பதாலேயே சித்தி ஆகி விடும் என்று மதங்க மனு கோசம் என்ற நூல் கூறுகிறது.
ऐं ह्रीं श्रीं ऐं क्लीं सौः ॐ नमो भगवति श्रीमातङ्गीश्वरि सर्वजनमनोहारि सर्वमुख रञ्जिनि क्लीं ह्रीं श्रीं सर्वराजवशङ्करि सर्वस्त्रीपुरुषवशङ्करि सर्वदुष्टमृगवशङ्करि सर्वसत्व-वशङ्करि सर्वलोकवशङ्करि त्रैलोक्यं मे वशमानय स्वाहा सौः क्लीं ऐं श्रीं ह्रीं ऐं
ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌ꞉ ஓம் நமோ ப⁴க³வதி ஶ்ரீமாதங்கீ³ஶ்வரி ஸர்வஜனமனோஹாரி ஸர்வமுக²ரஞ்ஜினி க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸர்வராஜவஶங்கரி ஸர்வஸ்த்ரீ புருஷ வஶங்கரி ஸர்வது³ஷ்டம்ருʼக³வஶங்கரி ஸர்வஸத்வ-வஶங்கரி ஸர்வலோகவஶங்கரி த்ரைலோக்யம் மே வஶமானய ஸ்வாஹா ஸௌ꞉ க்லீம் ஐம் ஶ்ரீம் ஹ்ரீம் ஐம்
என்பதே மஹாசியாமளையின் மந்திர ராஜமாகும். இந்த மந்திரத்தில் தனிப்பட்ட விசேஷமான நியாஸங்கள் எல்லாம் உண்டு.
அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில் கற்பக மரங்கள் செறிந்த காட்டில் மணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்துள் ரத்ன-கசிதமான அரியணையில் மஹா சியாமளையை தியானிக்க வேண்டும். மதங்க மஹரிஷி யின் குமாரியாக அவதரித்தமையால் மஹாசியாமளை மாதங்கி என்று அழைக்கப் படுகிறாள். மது பானத்தில் மகிழ்ச்சியுற்றவளாக சிறிதே சுழலும் விழிகளை உடைய வளாக மாதங்கியை தியானிக்க வேண்டும்.
வியர்வை அரும்பிய முக மண்டலத்தினளாகவும் கதம்பமலர் களால் எழிலோங்கிய கூந்தற்பின்னலை உடையவளாகவும் மாதங்கி விளங்குகிறாள். வலது மடியில் வீணையை வைத்துக் கொண்டு தனது எட்டு கரங்களுள், கீழ் இரண்டு கரங்களிலும் வீணை வாசிப்பதில் மகிழ்ந்தவளாய் மாதங்கி தியானிக்கப் படவேண்டும்.
மேலிரண்டு கைகளில் சம்பா நெற்கதிரையும், தாமரையும் ஏந்தி இருக்கிறாள். அதற்கும் அடுத்த கீழ் இரண்டு கரங்க ளிலும் அங்குசம், பாசம் ஆகியவைகளை ஏந்தி இருக்கிறாள். அதற்கும் அடுத்த கீழ் இரண்டு கரங்களிலும் சுகம் (கிளி), சாரிகை என்ற பறவைகளை ஏந்தி இருக்கிறாள். வலது பாதத்தை மடித்து வைத்து இடது பாதத்தைத் தொங்க விட்டவளாக அமர்ந்து இருக்கிறாள். நெற்றியில் கஸ்தூரி திலகம் பொலிகிறது. முகத்தில் மந்தஹாஸம் தவழ்கிறது. முடியில் சந்திர கலையினால் அணியுற்ற கிரீடம் ப்ரகாஸிக் கிறது. செவிகளில் சங்கு ஓலைகள் ஒளிர்கின்றன. சிவந்த ஆடை அணிந்து இருக்கிறாள். பருத்து. நிமிர்ந்த நகில் மண்ட லங்களால் இடை துவள்கிறது. மரகதமணியை மானும் மேனி ப் பொலிவினள் மாதங்கி.
मातङ्गीं भूषिताङ्गीं मधुमदमुदितां नीपमालाढ्यवेणीं
सद्वीणां शोणचेलां मृगमदतिलकां इन्दुरेखावतंसां ।
शङ्ख श्रोत्रां च पाशं सृणिमपि दधतीं शालिपुञ्जं च पद्मं
ध्यायेद्देवीं शुकाभां शुकमखिलकलारूपिणीं शारिकां च।।
மாதங்கீ³ம் பூ⁴ஷிதாங்கீ³ம் மது⁴மத³முதி³தாம் நீபமாலாட்⁴யவேணீம்
ஸத்³வீணாம் ஶோணசேலாம் ம்ருʼக³மத³திலகாம் இந்து³ரேகா²வதம்ஸாம் I
ஶங்க² ஶ்ரோத்ராம் ச பாஶம் ஸ்ருʼணிமபி த³த⁴தீம் ஶாலிபுஞ்ஜம் ச பத்³மம்
த்⁴யாயேத்³தே³வீம் ஶுகாபா⁴ம் ஶுகமகி²லகலாரூபிணீம் ஶாரிகாம் சII
மாதங்கி உபாஸனை ஸகல கல்வி கேள்விகளில் தேர்ச்சியை அதிசீகரத்தில் அருள் கிறது. ஏன்?
மாதங்கி உபாஸனை கல்லாமற் கற்ற கல்விச் செல்வத்தை யும் கேளாமற் கேட்ட கேள்விச் செல்வத்தையும் உடையவ னாகிவிடுகிறான்.விசேஷமாக இன்பக் கலைகளில் நுண் கலைகளில் (fine arts) அதிலும் இன்னிசை கலைகளில் உபாஸகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது. காளிதாஸன் முதலானோர் மாதங்கி உபாஸகர்கள் என்பது ப்ரஸித்தி.
எட்டுக் கரங்களில் ஏந்தி உள்ள பொருட்களை கவனிப்போம். சம்பா நெற்கதிர் உலகியல் இன்பங்களின் தொகுதியைக் காட்டுகிறது. தாமரை அழகுச் சாதனங்களை காட்டுகிறது. பாசம் ஆகர்ஷண ஸித்தியையும் அங்குசம் அடக்கி ஆளும் ஸித்தியையும் காட்டுகின்றன. சாரிகை உலகியல் நூல்கள் யாவற்றினுடைய ஞானத்தையும் காட்டுகிறது. கிளி கடவுளி யல் நூல்கள் யாவற்றினுடைய ஞானத்தையும் காட்டுகிறது. சம்பா நெற்கதிரும் தாமரையும்=பொருளாற்றல், பாசமும் அங்குசமும்=செயலாற்றல், கிளியும் சாரிகையும்=அறிவாற் றல், வீணை பர-அபர போகங்களை காட்டுகிறது. தேவீ வழிபாட்டில் உலகியலின்பம் துறக்கப் படுவதில்லை. ஆனால் உலகியல் இன்பத்தை ஒரு சேர போலச் செய்து கொண்டு அந்தச் சகதியிலும் உபாஸகன் விழுந்து விடுவதில்லை. முழுகி விடுவதில்லை. பின்? உலகியல் இன்பத்திலேயே பேரி ன்பத்தை கண்டு, அப்பேரின்ப வாழ்வில் எஃகணத்திலும் வழுவாமல் இருப்பதே இந்த உபாஸனையின் இரகசிய மாகம். புலனின்பம் முதலியன இங்கு ஒரு உயர்ந்த துல்லிய மான நிலையைப் பெருகின்றன. (sublimation of sense pleasures)
மாதங்கியின் மந்திரம் லக்ஷம் ஆவ்ருத்தியினால் சித்தி ஆகிறது. ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம், ப்ராஹ்மண ஸந்தர்பணம் முந்தியதுக்கு பிந்தியது பத்தில் ஒரு பங்கு செய்யப்பட வேண்டும். பலாச புஷ்பங்களால் ஹோமம் என்பது மாதங்கி உபாஸனையில் விஸேஷம்.அதாவது 10,000 பலாச குஸுமங்களால் 10,000 முறை அக்நியில் ஆஹூதி செய்யப்பட வேண்டும். பசு நெய்யில் தோய்த்து செய்யப் பட வேண்டும்.
பொதுவாக எல்லா பாகங்களையும் பெற மல்லிகை, ஜாதி, புன்னாக ஆகிய மலர்களால் ஹோமம் சொல்லப்பட்டுது. அரசை விரும்புபவன வில்வ இதழ்களாலோ அல்லது விசேஷமாக தாமரை மலர்களாலோ ஹோமம் செய்ய வேண்டும். சொல்வன்மை கவிபாடுதல் ஆகியவற்றை விரும்புபவன் செம்பருத்தி மலர்களால் ஹோமம் செய்ய வேண்டும். செல்வத்தை விரும்புபவன் கருங்குவளை மலர் களால் ஹோமம் செய்ய வேண்டும். இங்ஙணம் அந்தப் பயன்களை விரும்புபவன் அந்த பொருள் கொண்டு ஹோமம் வேண்டும். மகாகணபதி வழிபாட்டில் கூறியது போல் பர ஹோமம் அல்லது சூக்ஷ்ம ஹோமம் அததற்கு பக்குவம் உடையவர்களுக்கு ஏற்பட்டது என்பதை இவ்விடத்தில் கொள்ள வேண்டும்
மஹாசியாமளையின் யந்திரம் பிந்து=முக்கோணம்=ஐங்கோணம்=எட்டிதழ்=பதினாறிதழ்=எட்டிதழ்=நாலிதழ்=பூபுரங்கள் மூன்று, என்று எட்டு ஆவரண ங்களை உடையதாக அமைந்திருப்பதைக் கவனிக்கவும். ஸாரஸங்ரஹம் போன்ற நூல்களில் மாதங்கி சக்ரத்தின் பூஜை விரிவாக சொல்லப் பட்டுள்ளது.
மாதங்கியின் அருளை வெகு எளிதில் பெறுவதற்கு பதினாறு நாமங்கள் சொல்லப் படுகிறது. நீண்ட ஆவரண பூஜைகள் எல்லாம் இல்லாமலேயே , இந்த ஷோடஸ நாமாவளியைப் பாராயணம் செய்தால் மாதங்கி மந்திரத்தில் ஸித்தி அதி சீக்கிரத்தில் ஏற்படும். அந்த நாமங்கள் ஆவன
1. सङ्गीत-योगिनी
2. श्यामा
3. श्यामला
4. मन्त्र-नायिका
5. मन्त्रिणी
6. सचिवेशानी
7. प्रधानेशी
8. शुक-प्रिया
9. वीणावती
10. वैणिकी
11. मुद्रिणी
12. प्रियक-प्रिया
13. नीपप्रिया
14. कदम्बेशी
15. कदम्ब-वन-वासिनी
16. सदामदा
1. ஸங்கீ³த-யோகி³னீ
2.ஶ்யாமா
3.ஶ்யாமலா
4.மந்த்ர-நாயிகா
5.மந்த்ரிணீ
6.ஸசிவேஶானீ
7.ப்ரதா⁴னேஶீ
8.ஶுக-ப்ரியா
9.வீணாவதீ
10.வைணிகீ
11.முத்³ரிணீ
12.ப்ரியக-ப்ரியா
13.நீப-ப்ரியா
14கத³ம்பே³ஶீ
15.கத³ம்ப³-வன-வாஸினீ
16.ஸதா³மதா³
காளிதாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஶ்யாமளா தண்டகம் வெகு ப்ரஸித்தி.
மதுரை நகரில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மன் மஹாசியாமளையின் ஸ்வரூபம் என்பது மந்திர சாஸ்திர ரகஸ்யம். மீனாட்சி புத்தி ஸ்வரூபிணியாய் இருந்துகொண்டு மஹாத்ரிபுரசுந்தரியின் ஶ்ரீநகர ஸாம்ராஜ்யத்தில் ப்ரதான மந்திரி ஸ்தானத்தில் இருப்பவள். அதனால் அவளுக்கு மந்த்ரிணீ என்றும் பெயர்.
மஹாத்ரிபுரசுந்தரியின் சக்ரத்திற்கு ஶ்ரீசக்ரம் என்று பெயர் இருப்பது போல் மாதங்கி சக்ரத்தின் பெயர் கேய சக்ரம் என்று பெயர் உண்டு
மஹாத்ரிபுரசுந்தரி பண்டாசுர வதம் செய்ய முற்படுட்டு நிகழ்த்திய பெரும் போரில் மாதங்கி விஷங்கன் என்ற அசுரனை சம்ஹரித்தாள் என்று லலிதோபாக்யானம் கூறு கிறது. தேவிக்குறிய பத்து முக்கியமான ஸஹஸ்ர நாமங்க ளுள் ஶ்யாமளா ஸஹஸ்ரநாமும் ஒன்றாகும். மற்றவை
1.கங்கை
2.காயத்ரீ
3.லக்ஷ்மீ
4.காளீ
5.பாலை
6.லலிதா
7.ராஜராஜேஶ்வரீ
8.ஸரஸ்வதீ
9.பவாநீ
மஹாசியாமளையின் மூன்று அங்க தேவைகள் உள்ளன. லகு மாதங்கீ, வாக்வாதினீ, நகுலீ ஆகியவர்களே மூவரும். லகுமாதங்கி நான்கு கரங்கள் உடையவள். ஆனால் இங்கு நாம் வர்ணித்து உள்ள மஹாசியாமளையை எட்டுத் திருக் கரங்களை உடையவளாய் இருப்பதை கூர்ந்து அரியவும். இவ்வடிவத்தில் மஹாசியாமளையின் வெகு அழகான சிலா ரூபம் காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில் காயத்ரீ மண்டபத் திற்கு வலப்புறம் உள்ளது. நமது பூஜா விக்ரஹத்திற்க்குப் ப்ரமாணமாய் இருப்பது மேற்கூறிய அந்தச் சிலா மூர்த்தியே. லகு மாதங்கிக்கு உச்சிஷ்ட சண்டாளி என்ற பெயரும் உண்டு.
மாதங்கியின் உபாஸனமே ஒருவன் ஆயுள் பூராவும் செய்யும் படி அத்தனை விரிதாகும். மாதங்கி ஶ்ருங்கார ப்ரதானமான தேவதை. ஶ்ருங்காரம் என்பது உலகியலில் சாதாரணமாகக் கூறப்படும் காமவெறி அல்ல என்று அறிய வேண்டும்
ஶ்ருங்கார பட்டாரகன் என்று காளிதாசன் அழைக்கப் படு கையில் ஶ்ருங்காரம் என்பது இழிந்த பொருளில் கூறப் படுவதாக நினைக்கக்கூடாது. மற்றவர்கள் நோக்கில் உலகியல் இன்பத்தில் இருப்பவன் போல காணப்படினும் உண்மையில் எக்கணமும் பர இன்பத்தினின்றும் வழுவாத வனே உண்மையான ஶ்ருங்காரத்தின் நுட்பம் அறிந்தவன் ஆவான். இந்த ஶ்ருங்காரம் உமா மகேஶ்வரர்களிடமும் லக்ஷ்மி நாராயணர்களிடமும் விளங்குவதாகும். இதன் விரி வாக்கம் மஹாத்ரிபுரஸுந்தரி வழிபாட்டில் காண்போம்.
குறிப்பு–விரிவான பூஜைகளை செய்ய முடியாதவர்கள் தற்போதைக்கு மஹாகணபதி முதல் வெளியிடப்படும் எல்லாப் படங்களையும் எந்த்ரங்களையும் பூஜா க்ருஹத்தில் கண்ணாடி போட்டு மாட்டி வைத்துக் கொண்டு ஓரிரு புஷ்ப தளங்களை அளித்து மானஸீகமாக த்யானம் செய்தாலே போதும்.