Practical Guides

Ganapaty by amrtananda yogi – Tamil

ஸ்ரீவித்யா உபாஸனா

தேவிவழிபாடு
ஸ்ரீவித்யா உபாஸனா மார்க்கம பலபடி நிலைகளில்‌ விளங்குகிறது. இங்கு மந்த்ரங்‌களே முக்ய ஸ்தானம்‌ பெறுகின்றன. பாலா த்ரிபுர ஸுந்தரி உபாஸனை, மஹாத்‌ரிபுரஸுந்தரி உபாஸனை. மஹாத்ரிபுர ஸுந்தரி பராபட்டாரிகா உபாஸனை என்பவை மூன்றும்‌ முக்யமான படி நிலைகளாம்‌. இம்மூன்று படி நிலைகளுக்கும்‌ தொடக்கத்தில் மஹா கணபதியின்‌ உபாஸனையும்‌, இறுதியில்‌ உச்சிஷ்ட கணபதியின்‌ உபாஸனையும்‌ உள்ளன. ஆக ஐந்து படி நிலைகளில்‌ இந்த உபாஸனை உள்ளது. இந்த ஐந்து படி நிலைகளிலும்‌ ஐந்து முக்யமான மந்த்ரங்கள்‌ உள்ளன. ஸ்ரீவித்யா உபாஸனா மார்க்கத்தில்‌ ஒரு சீடனுக்குப்‌ பிரவேசம்‌ (Entry) கொடுக்கும்‌ குரு இந்த ஜந்து படிநிலைகளிலும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாகச்‌ சீடன்‌ இறங்கும்படிச்‌ செய்யலாம்‌, அல்லது இரண்டோ, மூன்றோ, நான்கோ, அல்லது ஐந்து படி நிலைகளையுமோ ஒரே சமயத்தில்‌ அடையு ம்படியும்‌ செய்யலாம்‌. சீடனிடத்தில்‌ இருக்கும்‌ பக்குவம்‌ கருதி குருவினால் ‌தீர்மானம்‌ செய்யப்படும்‌ விஷயம்‌ இது. உபதேசிக்கும்‌ மந்த்ரங்களில்‌ குரு சித்தி பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. சித்தி என்றால்‌ என்ன என்பதை இறுதிக்‌ கட்டுரையில்‌ தெளிவாகக்‌ காணலாம்‌. சித்தியின்‌ பொருள் பற்றி ஆங்காங்கு இடை யிலும்‌ சிறிது சிறிது எழுதப்படும்‌. முதல்‌ படி நிலையை கவனிப்போம்‌.
மஹாகணபதி உபாஸனை
மஹாகணபதி, ஸ்ரீவித்யா உபாஸனா மார்க்கத்தில்‌ ஸ்ரீவித்யா கணபதி என்றும் கூறப்படுகிறார்‌. மஹாகணபதியின்‌ ஸ்வரூபம்‌ உண்மையில்‌ மந்த்ர வடிவமே ஆகும்‌. மஹாகணப்தியின்‌ மந்த்ரம்‌ (28) இருபத்தெட்டு எழுத்துக்கள்‌ கொண்டது. இவ்விருபத்தெட்டு எழுத்துக்களும்‌ அவற்றின்‌ சரியான வரிசைப்படி, உச்சரிக்கப்படுமானால்‌, அப்பொழுது எழும்‌ நாதமே மஹாகணபதியின்‌ உண்மையான ஸ்வரூபம்‌. கை, கால் முதலிய அவயவங்களோடு கூடிய மஹாகணபதியின் வடிவில் தொடக்கத்தில் தியானம் செய்வதற்கு உதவியாக இருக்கும் படி உபதேசிக்க படுகிறது. இந்த வடிவத்தை மனதில் நன்கு நிறுத்திக் கொள்வதற்கு ஒரு தியான சுலோகமும் கூறப்படுகிறது.
தியானம்
बीजापूर गदेक्षु कार्मुक रुचा चक्राब्ज पाशोत्पल
व्रीह्यग्र स्वविषाण रत्न कलश प्रोद्यत् कराम्बोरुहः ।
ध्येयो वल्लभया स-पद्मकरया आश्लिष्ट-उज्ज्वलत्-भूषया
विश्वोत्पत्ति-विपत्ति-संस्थिकरो विघ्नेशो-इष्टार्थदः ॥
பீ³ஜாபூர க³தே³க்ஷு கார்முக ருசா சக்ராப்³ஜ பாஶோத்பல
வ்ரீஹ்யக்³ர ஸ்வவிஷாண ரத்ன கலஶ ப்ரோத்³யத் கராம்போ³ருஹ꞉ I
த்⁴யேயோ வல்லப⁴யா ஸ-பத்³மகரயா ஆஶ்லிஷ்ட-உஜ்ஜ்வலத்-பூ⁴ஷயா
விஶ்வோத்பத்தி-விபத்தி-ஸம்ஸ்தி²கரோ விக்⁴னேஶோ-இஷ்டார்த²த³꞉II

மஹாகணபதி பத்துத் திருக்கரங்களையும், துதிக்கையையும் உடையவராக விளங்குகிறார். துதிக்கையின் நுனியில் ரத்ன கலசத்தை ஏந்தியிருக்கிறார். வலது கீழ்க்கையிலிருந்து இடது கீழ்க்கை முடிய பத்துக் கரங்களிலும் முறையே மாதுளம்-பழத்தையும், கதையையும், கரும்பு-வில்லையும், முத்தலைச் சூலத்தையும், சக்ரத்தையும் தாமரையையும், கயிற்றையும், கருங்குவளை மலரையும், சம்பா நெற் கதிரையும் தனது தந்தத்தையும் தாங்குகிறார். தனது இடது மடியில் வல்லபா என்ற தன் பத்தினியை அமர்த்திக் கொண்டவராக தியானிக் கப்படுகிறார். வல்லபா சக்தி தனது வலது கரத்தால் மஹாகணபதி யைத் தழுவிக்கொண்டிருக்கிறாள். தனது இடது கரத்தில் தாமரையை ஏந்தியிருக்கிறாள். வல்லமை ஒளிரும் ஆபரணங்களால் விளங்குகிறாள். ஒடித்த தந்தத்தை ஏந்திய தனது இடது கரத்தால் மஹாகணபதி வல்லபா சக்தியை அவளது இடையில் தழுவிய வண்ணமாயும் தியானிக்க வேண்டும். தாமரை ஆஸனத்தில் விளங்குகிறாய் மஹா கணபதி. அவரது பெரு வயிற்றில் ஸர்ப்பம் ஒன்று சுற்றிக் கொண்டி ருக்கிறது. பூணூல் அணிந்தவராக யானை முகத்துடன், ஸிந்தூர நிறப் பொலிவுடன் விளங்குகிறார். அகில உலகையும் படைக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றல் பெற்றவர் மஹாகணபதி. பக்தர்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவர். 
(மேலே கொடுக்கபட்டுள்ள தியான சுலோகத்தையும், குஹ்யநாம ஸஹஸ்ரம் என்ற கணபதியின் பெருமைகளை வர்ணிக்கும் ஸஹஸ்ர நாமத்தையும் ஆதாரமாகக் கொண்டு மஹாகணபதியின் வர்ணணம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீவித்யா உபாஸனையில் தொடக்கத்திலும் இறுதியிலும் கணபதி வழி படப்படுவதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் மஹா கணபதியின் ஸ்வரூபமும், இறுதியில் உச்சிஷ்ட கணபதியின் ஸ்வரூபமும் உள்ளது. கணபதிக்கு உள்ள எத்தனையோ வடிவங்களுள் இவ்விரண்டும் தலைசிறந்தன. உச்சிஷ்ட கணபதியின் ஸ்வரூபம் தத்துவப்பிழம்பாக உள்ளது. அயினும், அந்தோ! மாந்தர்களுக்கிடையில் உச்சிஷ்ட கணபதியைப் பற்றி எத்தனையோ தவறான கொள்கைகளும் வழிபாடிகளும் மல்கியுள்ளன, இறுதி கட்டுரையில், உச்சிஷ்ட கணபதியின் பெருமைகளெல்லம் விரிக்கப்படும்.
இப்பொழுது மஹாகணபதியைப் பற்றி நாம் ஆராய வேண்டும். இவ்வா ராய்ச்சியில் புகுவதற்கு முன் பொது வாக கணபதியின் பல வடிவங் களைப் பற்றியும் அறிதல் சிறந்ததாகும். ஏனெனில் கணபதியின் எல்லா வடிவங்களும் மஹா கணபதி-உச்சிஷ்ட கணபதிகளுக்குள் அடக்கம். ஏகாக்ஷர கணபதி, விரிகணேசர், லக்ஷ்மீகணபதி, சக்தி கணபதி, க்ஷிப்ர ப்ரஸாதன கணபதி, ஹேரம்ப கணபதி, ஸுப்ரமண்ய கணபதி. 28-எழுத்துக்களில் விளங்கும் மஹாகணபதி, த்ரைலோக்யமோஹன கணபதி, போக கணபதி, ஹரித்ரா கணபதி, வக்ரதுண்ட கணபதி, டுண்டிராஜ கணபதி, லம்போதர கணபதி, உச்சிஷ்ட கணபதி என்று பல வடிவங்களில் கணபதி விளங்குகிறார்.
கணேச ந்யாஸத்தில் கணேசரது ஐம்பத்தொரு வடிவங்களும் ஐம்பத் தொரு சக்திகளும் தியானிக்கப் படுகிறார்கள். உபாஸகர்களின் ஈடுபா ட்டில் உள்ள வேற்றுமையால் கணபதி அந்தந்த வடிவங்களில் ஆராதிக்கபடுகிறார். கணபதியின் உபாஸனையே ஒருவன் தன் வாழ்வில் பிரதானமாகக் கொள்ளவும் செய்யலாம். உச்சிஷ்ட கணபதி நீங்கலாக மற்ற எல்லா கணபதிகளின் ஸ்வரூபமும் மஹாகணபதியின் ஸ்வரூபத்தில் அடக்கம் ஆகையால் மஹாகணபதியை வழிபடுபவர்கள் அடையும் பயன் மிகமிகப் பெரிதாகும்.
சாதகன் தனது வழிபாட்டு முறையில் வெற்றியடைவதற்கு முதலில் ஆரோக்யமான உடலும், உள்ளநிலையும் உடையவனாய் இருத்தல் வேண்டும். பாலை, பஞ்சதசி, ஷோடசீ போன்ற மந்த்ரங்களை முறைப்படி ஜபம் செய்யும் காலங்களில் தனது உடலில் அவ்வப்பொழுது மின்சக்தி பாய்வது போல சில மாற்றங்கள் ஏற்படும். உள்ளத்தில் ஒரு வகையான பூரிப்பும், வேகமும் உண்டாகும். இவைகளையெல்லாம் தாங்கிக் கொள்வதற்கு உடலிலும் உள்ளத்திலும் ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலை மஹாகணபதி மந்த்ரம் நிறைவேற்றித் தருகிறது. மஹாகணபதி மந்திரத்தை 4,44,000 முறையில் ஜபம் செய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையை 444-நாட்களிலோ, 222-நாட்களிலோ, 111 நாட்களிலோ செய்து முடிக்கலாம். 444 நாட்களில் செய்வது விசேஷமாகும். ஏனெனில் தொடக்க காலத்தில் திடீரென ஒவ்வொரு நாளும் 4000 முறை மந்த்ரத்தை ஜபம் செய்வது என்பது பல உபாசகர்களுக்கு முடியாது. மேலும் 444 நாட்களும் தினந்தோறும், மஹாகணபதி மந்திரத்துக்குரிய ந்யாஸங்களைச் செய்துகொண்டு ஜபம் செய்துவிட்டு சதுராவ்ருத்தி தர்பணமும் கொடுத்தாக வேண்டும். சோர்வின்றி இவ்வாறு மஹாகணபதி உபாசனையில் ஈடுபடுபவன் தான் பெரும் பெறும் பயனைத்தானே அறியலாம். சோர்வின்றிய முயற்சியே வேண்டும். நிதானமாக 1000 முறை ஜபம் செய்வதற்கு 100 நிமிஷங்களாவது ஆகும். தினம் ஆயிரம் முறை ஜபமும் நூறு முறை ஹோமும், சதுராவிருத்தி தர்ப்பணமும், பத்து முறை மார்ஜனமும், ஒரு ப்ராஹ்மணனுக்கு ஸந்தர்ப்பணமும் செய்து வைத்தலும், நானூற்று நாற்பத்து நான்கு நாட்களுக்கு நடத்தி வைக்கும் உபாஸகனது உடலி லேயே எப்பொழுதும் ஆவேசித்தவராக மஹாகணபதி விளங்குவார்.
சோம்பேறிகளுக்கு மந்த்ரோபாஸனை ஏற்பட்டதல்ல. மந்திரத்தைத் தகுந்த குருவினிடமிருந்து பெறுவதற்கு முதலில் ஒருவனுக்குப் பாக்யம் வேண்டும். அனுகூலமாக இருத்தல் வேண்டும். அதாவது அவனுடைய பழைய வாசனை அனுகூலமாக இருத்தல் வேண்டும். தான் பெற்ற மந்த்ரத்தை முறைப்படி குறிப்பிட்ட காலம் வரையில் ஸகல அங்கங்க ளுடன் ஜபம் செய்து முடிப்பதற்கு வேண்டிய முயற்சியில் தளர்ச்சி யற்றவனாக இருத்தல் வேண்டும்; முயற்சி திருவினையாக்கும். ஹோமம் என்பதைத் தினமும் அவரவர்கள் சாஸ்திர முறைப்படி செய்யலாம். இது ஸ்தூல ஹோமம், உபாஸகன் தனது சரீரத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினீ அக்னியில் மந்த்ரத்தைச் சொல்லி பாவனா ஸ்வரூபமாக ஹோமம் செய்யலாம். இது ஸூக்ஷ்ம ஹோமம், சங்கரபகவத்பாதர் விளக்கியுள்ள ஆத்மதத்துவத்தை பரோக்ஷமா கவாவது திடமாக அறிந்தவன், மூல மந்த்ரத்திற்கு முன்னும் பின்னும் “சிவோஹம்” என்ற பாவனையுடன் ஆத்ம-ரூபமான சிதக்னியில் ஹோமம் செய்யலாம். இது பர-ஹோமம் (Superior form of homa). பர ஹோமத்திற்கு அதிகாரிகள் வெகு வெகு சிலரே ஆவர், ஸ்தூல ஹோம-த்திற்கே பல அதிகாரிகள் ஆவர். ஸூக்ஷ்ம ஹோமத்தில் அதிகார முடையவர்கள் சிலர் இருக்கலாம். ஹோமம் செய்ய வேண்டிய முறை அவர் அவர்களுடைய பண்பாட்டை பொருத்தது. தினந்தோறும் இந்த மூன்றனுள் ஒரு வகையான ஹோமத்தை உபாசகன் செய்தல் வேண்டும். மார்ஜனம் என்பது மந்திரத்தைச் சொல்லித் தன் மீது தண்ணீரை ப்ரோக்ஷித்துக் கொள்வதாகும். அந்தந்த தினத்தில் ப்ராஹ்மண-ஸந்தர்ப்பணத்தை, ஒவ்வொரு ப்ராஹ்மணனைக் கொண்டு நடத்தலாம், இது சுலபமும் ஆகும். அல்லது இறுதியில்-அதாவது 444-வது நாள் நானூற்று நாற்பத்தி நான்கு ப்ராஹ்மணர் களுக்குப் போஜனம் செய்துவைக்கலாம். போஜனம் செய்து வைக்கப் படுகிற ப்ராஹ்மணனை மஹாகணபதியாகவே தியானிக்க வேண்டும். நமஸ்காராதிகள் செய்ய வேண்டும். போஜனத்தின் இறுதியில் தக்ஷிணை முதலானவைகளும் கொடுக்க வேண்டும். ஜபம், ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம், ப்ராஹ்மண-ஸந்தர்ப்பணம் என்ற ஐந்து அங்கங்களும் நிறைவாக இல்லாமல் எந்த மந்திரமும் ஸித்தி ஆகாது. இந்த விதி எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானதாகும். ப்ராஹ்மண ஸந்தர்ப்பணம் செய்து வைப்பதற்கு எல்லாருக்குமே லௌகீக ஸௌகர்யங்கள் இருக்குமோ என்று ஐயுற வேண்டாம். மற்ற நான்கு அங்கங்களை நிறைவாகப்பூர்த்தி செய்தவனுக்கு ஐந்தாவது அங்கமான ப்ராஹ்மண-சந்தர்ப்பணத்தை நிறைவேற பெறுவதற்கு இஷ்ட தேவதையின் அருளே உதவி புரியும். 
ஒவ்வொரு ஆவருத்தியிலும் மந்த்ரம் மனிதனுடைய மனத்திலும் புற நிலைகளிலும் சிறப்பை காட்டிக்கொண்டே கொண்டே இருக்கும். மாறுதல்கள் சூக்ஷ்மமாக இருக்கும் பொழுது எளிதில் புலப்படுவ தில்லை. தொடர்ந்து மந்திர யோகத்தில் ஈடுபடுபவனுக்குத் தனது அக நிலையிலும், புறநிலையிலும் நிகழும் மாறுதல்கள் நன்கு புலப்படும். பல கோடி பிறவிகளில் ஏற்பட்ட வாசனை களைக் கூட மாற்றியமை க்கும் வல்லமை மந்திரத்துக்கு உண்டு. ஆனால் மந்த்ரத்தை ஏற்கும் காலத்திலும், ஜபம் செய்யும் காலங்ளிலும் தனது மனத்தின் பழைய வாசனைகளை நோக்கி ஏற்படும் புதிய தாக்குதல்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும் படியான நிலையில் ஒருவனது வாசனைகள் இருக்கு மானால் அவன் பாக்யவானே. புதிய தாக்குதல்களுக்குச் சிறிதும் நெகிழ்ந்து கொடுக்காத நிலையில் இரும்புத் திரையிட்டது போல் ஒருவனது பழைய வாசனைகள் ஜப காலத்தின் தொடக்கத்திலேயே இருந்துவிடுமானால், அத்தகையவன் மந்திர யோகத்திற்கு தகுதியுடை யவன் அல்லன். தான் உபதேசம் செய்து கொண்ட ஜபத்தில் தொடர்ந்து ஈடுபட முடியாது இடையிலேயே அத்தகையவன் தளர்ந்து விடுகிறன். வேறு பல நாட்டங்களால் அவளது உள்ளம் ஈர்க்கப்பட்டு தனது பழைய வாசனைகளுடன் போராடுவதிலேயே, அவைகளில் மூழ்குவதிலேயே தன் ஆயுளைக் கழித்து விடுகிறான். மனத்தினுடைய எந்த ஈர்ப்புக்கும் தோயாது தாக்குறா-உணர்வில் நிற்பவர்கள் உலகில் அரிதினுள் அரிதாக இருப்பர். சிசுபாலகர்களாகவும், ஹிரண்யகசிபுகளாகவும், கம்சர்களாகவும் எல்லோரும் ஆகி விட முடியாது. சிசுபாலனிடம் த்வேஷமே யோகமாகவும், ஹிரண்யகசிபுவிடம் வைரமே யோக மாகவும், கம்ஸனிடம் பயமே யோகமாகவும் இருந்தன. தாக்குறா உணர்வில் யோகம் எல்லோருக்குமே எளிதில் கிட்டிவிடுவதில்லை. மனோவ்ருத்திகளில் இருந்து விடுபடும் யோகம் எல்லோருக்குமே கிட்டி விடுவதில்லை.
தன் இஷ்ட மந்த்ரத்தில் அசைக்க முடியாத விசுவாசம் உடையவனாக வும், அத்தைகைய விசுவாசத்தினால் தூண்டப்பட்டவனாய் சோர்வின்றி மந்த்ரத்தில் உழைப்பவன் பழைய வாசனைகள் மாறப் பெற்று, புதிய சிறந்த நல்ல வாசனைகள் பொலியப் பெற்றவனாக ஆகிறான். ஒருவனுடைய நியதியை மாற்றி அமைத்து கொடுக்கும் மந்திரங்கள் எனறு நினைக்கக் கூடாது. மந்த்ரங்களில் சோர்வின்றி உழன்று எதிர் காலத்தில் நியதி அனுகூலமானதாக, ஆகூழாக இருக்கும் என்று மந்திரங்கள் அறிவுறுத்துகின்றன (Indicate). ஒரு காரியத்திற்காக போகும் பொழுது பூனை குறுக்கிட்டால், நாம் போகும் கார்யம் கெட்டு விடும் என்கிறோம். நல்லதாக அமையவேண்டிய கார்யத்தை, பூனை கெடுத்து விட்டது என்று நினைத்துக்கொண்டு பூனையைச் சபிப்பதில் பயனில்லை. அந்த கார்யம் அப்பொழுது நமக்குத் திருப்திகரமாக நடவாது என்பதைப் பூனை முன்கூட்டி அறிவிக்கிறது அவ்வளவே. பசு மாடு எதிரே வந்தால், பால் குடம் வந்தால், இவ்வண்ணமே, நாம் போகும் கார்யம் நல்லவண்ணமாக நடக்கும் என்று முன் கூட்டி அறியப்படு கிறது. தீயதாக முடியவேண்டியதை நல்ல மாற்றி அமைத்துவிடுகிறது பசு மாடோ அல்லது பால் குடமோ என்று அறியக் கூடாது. அதுபோலவே, பாக்யமுடையவர்களே, வாழ்வில் உலகியலிலும், ஆத்மீய நிலையிலும் சீர்மை அடையும் பேறு பெற்றவர்களுக்கே மந்த்ர உபாசனை பிறக்கி றது. மந்த்ர ஜபத்தில் தளராத முயற்சியும் ஏற்படுகிறது.
மந்த்ர யோகத்தில் ஈடுபடுவது, பூனை குறுக்கே வருவது போலோ, பால் குடம் எதிரே வருவதுபோலோ, பின்னால் ஏற்பட இருக்கும் வினைகளை முன் கூட்டியே அறிவிப்பது மட்டுமே ஆகும் என்பது ஒரு சாரார் கொள்கை ஆகும். இக்கொள்கை சீர்மையுடையது ஆகாது. நல்ல உணவோ, வீர்யமுடைய ஔடதமோ உட்கொள்ளப்படுமாயின், உடலின் வடிவத்தில் பரிணாமத்தையடைந்த மிக்க வலியையும், உறுதியையும், அழகையும் கொடுப்பது போல், மந்த்ர ஜபம் வாசனாமயமான மனச் சரீரத்தில் பரிணாமத்தயடைந்து, மனச் சரீரத்தில் பல சிறப்புக்களை காட்டும் என்பதே உண்மையாகும். விஞ்ஞான ரீதிக்கும் உடன்பட்டதாகும். வாசனைகளெல்லாம் கருத்து வடுவில் இருப்பவைகளே. கருத்துகள்ளெல்லாம் சப்தவடிவமுடையவைகளே. இந்த சப்தம் சூக்ஷ்மமான வடிவத்தில் உள்ளது. மந்திரங்களும் சப்த வடிவினவாய் இருப்பதால் வாசனாமயமாம மன்ச்சரீரத்தில் ஆரோயக்யத்தை விளைவிக்கும் வகையில் ஒருவகையான பரிணாமத்தை அடைகின்றன. ஒருவனுடைய உடல் வாழ்வு கூட cஆசனாமயமான சரீரத்தின் புறப்பகுதியேயாகும். ஆகவே மந்தரஜபம் ஊன் உடலிலும் கூட உள்ள நோய்களைப் போக்கி ஆரோக்யத்தை அளிக்கும். அறிவை வளர்க்கும். ஒளியைத் தரும். வாசனாமயமான சரீரத்தில் உள்ள கோளாறுகளே ஊன் உடலில் ஏற்படும் கோளாறுகளுக்கும் காரணமாக உள்ளது என்பது நமது பண்டைய சாஸ்திரங்களில் அறுதியிட்டு கூறபட்டுள்ள விஷயமாகும். ஆக, மந்திர யோகம் ஒருவனுடைய வாழ்விலேயே புதியதாக சிறந்த பரிமாணத்தை விளைவிக்கும் என்பதே உண்மை ஆகும். மந்திரங்களை வெறும் அறிகுறிகளாக மட்டும் கொள்வதால் மந்திரங்களுக்கே பெருமையில்லாது போகிறது. எந்த மந்திரங்களுமே அபாரமான ஆற்றல் உடைய மின்சக்தி சாலை போல் உள்ளன. அவற்றின் ஆற்றலில் விச்வாசம் உடையவனாதற்கும், அவற்றை முறை படி பயன்படுத்தி கொள்வதற்கும், ஒருவனுக்கு முன் வினை உதவ வேண்டும் என்பது மட்டும் உண்மைதான். 
அக்ஷரவடிவங்களில், சப்தவடிவங்களில் வழிபடப்படும் எல்லா தேவதை களுக்குமே கை, கால் முதலிய அவயவங்களோடு கூடிய திரு மேனி களும் உண்டு. ரேகாரூபமாக வரையப்படும் சித்திர வடிவங்களும் உண்டு. இந்த சித்திரவடிவங்கள் சக்ரங்கள் எனப்படுகின்றன. மஹா கணபதியின் அக்ஷரவடிவம் 28 எழுத்துக்களில் உள்ளது என்று கூறினோம். அவ்வடிவமாவது,

ॐ श्रीं ह्रीं क्लीं ग्लौं गं गणपतये वरवरद सर्वजनं मे वशमानय स्वाहा ।
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்³லௌம் க³ம் க³ணபதயே வரவரத³ ஸர்வஜனம் மே வஶமானய ஸ்வாஹா .
இந்த மந்த்ரத்தை -அக்ஷரவடிவத்தை- பிழையின்றி உச்சரிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். வாய்விட்டும் ஜபம் செய்து பழக வேண்டும். மானஸிக ஜபத்திலும் பழக வேண்டும். தொடக்க காலத்தில் ஒரு சிலநாட்களாவது மந்த்ரங்களைத் தனியிடத்திலிருந்து கொண்டு வாய்விட்டு ஜபம் செய்வது நல்லதாகும். பின்னர் மனதில் இயல்பாக ஓடும்படி மானஸிக ஜபத்திலும் ஈடுபடவேண்டும். தன் முயற்சி யின்றியே ஒருவனுடைய மனத்தில் மந்த்ரம் ஓடும்படி- அப்படி வெற்றி காணும்படி- மானஸிக ஜபத்திலும் ஈடுபடவேண்டும்.
தியானத்திற்காக உள்ள ஸ்தூலரூபம் கர, சாணாதி அவயவங்களோடு கூடிய ரூபம். இந்த வடிவத்தைப் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. மஹாகணபதியின் வடிவத்திலுள்ள சில விசேஷங்களை இப்பொழுது அறிவோமாக. எந்த கணபதியுமே பிரணவ வடிவமுடையவர் என்பது சாஸ்த்ர ஸித்தாந்தமாகும். மஹாகணபதியும் பிரணவ வடிவமுடை யவர் என்பது சொல்ல வேண்டியதே இல்லை. எல்லா சப்தங்களுக்கும், உலகத்திற்கும்கூட, ஆதியாக இருப்பது பிரணவம் என்ற ஓங்காரமே.
ஆகையால் எந்த உபாஸனத்திற்கும், எந்தக் காரியத்திற்கும் கூட, முதலில் கணபதி வழிபாடு அவசியம். ஸ்ரீவித்யா உபாசனை மார்க்கத்தின் தொடக்கத்தில் ஸ்ரீவித்யா கணபதி என்ற மஹாகணபதி உபாசனை உள்ளது வெகு பொருத்தமுடையதே ஆகும். மஹா கணபதியின் திருமேனியே ப்ரணவாகாரமானது என்பது மந்த்ரத்தின் முதல் எழுத்தான “ஓம்” என்பதன் மூலம் அறியலாகும்.
மஹாகணபதியின் வலது, இடது. மேல் கரங்களில் உள்ள சக்ரமும், தாமரையும் விஷ்ணு-லக்ஷ்மிகளின் சக்தியைக் காட்டுகின்றன. விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் வழிபடுவதால் அடையப்படும் பயன் எல்லாம் மஹாகணபதி உபாஸனத்தினாலேயே கிடைத்துவிடுகிறது. அடுத்த கீழுள்ள வலது, இடது கரங்களில் உள்ள முத்தலை சூலமும், பாசமும் சிவபார்வதிகளின் சக்தி மஹாகணபதியிடம் பொருந்தியி ருப்பதைக் காட்டுகின்றன. சிவ-பார்வதி உபாசஸனங்களால் அடையப்படும் பயன் எல்லாம் மஹாகணபதி வழிபாட்டில் கிடைத்து விடுகிறது. அடுத்த கீழுள்ள வலது, இடது கரங்களில் உள்ள கரும்பு வில்லும், கருங்குவளை மலரும் மன்மத-ரதிகளுக்குரிய சக்தியை காட்டுகின்றன. மன்மதன் மூலமாகவும் ரதியின் மூலமாகவும் உபாஸகன் அடையக் கூடிய பேறுகளெல்லாம் மஹாகணபதி வழிபாட்டில் கிடைத்துவிடுகிறது.
அடுத்த கீழ் உள்ள கதையும், சம்பா-நெற்கதிரும் வாராஹ-பூமி தேவிகளின் சக்திகளை காட்டுகின்றன. வாராஹ-பூமிதேவிகளின் உபாஸனத்தினால் ஏற்படும் பயன்களெல்லாம் மஹாகணபதியின் உபாஸனத்தினால் ஏற்பட்டு விடுகின்றன. விஷ்ணு-லக்ஷ்மிகளுக்குரிய சக்ரமும் தாமரையும் தர்மத்தைக் காட்டுகின்றன. வராஹ-பூமிதேவி களுக்குரிய கதையும், நெற்கதிரும் அர்த்தத்தைக் காட்டுகின்றன. மன்மத-ரதிகளுக்குரிய கரும்பு-வில்லும், குவளை மலரும் காமத்தைக் காட்டுகின்றன. சிவ-பார்வதிகளுக்குரிய முத்தலைச் சூலமும், பாசமும் மோக்ஷத்தைக் காட்டுகின்றன. மோக்ஷ ரூபத்தில் தர்மம் மிகமிக நெருக்கமாய்த் தன் தூய வடிவத்தில் உள்ளது. 
மஹாகணபதியின் உபாஸனமானது தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்று நால்வகை மக்கட் பேற்றையும் பெற்று தரும். மஹாகணபதியின் கீழ் கரத்தில் உள்ள மாதுளம்பழம் ப்ரபஞ்சத்தைக் குறிக்கிறது. அதனுள் அடுக்கடுக்காக அடுக்கப்பட்டுள்ள மணிகள் ப்ரபஞ்சத்துக்குள் அடங்கிய கோடிக்கணக்கான அண்டங்களைக் காட்டுகின்றன. கருதி யும் பார்க்க முடியாத அவ்வளவு பெரிய அண்டமானது கணபதி யின் திருமேனியில் ஏகதேசத்தில் அடங்கிவிடுகிறது என்பதை மாதுளம்பழம் காட்டுகிறது. இடது கீழ்க்கரத்திலுளள ஒடிந்த கொம்பு எழுத்தாணி போல் இருந்து கொண்டு உலகினுடையவும் உயிர்களுடை யவுமான தலையெழுத்தை நிர்ணயிக்கிறது; அதாவது நியாமக சக்தியாய் உள்ளது. மாதுளம்பழம் அந்த நியாமக சக்தியால் ஆளப் படும் உலகமாகும். நியாமகசக்தி – ஜடசக்தி என்றும் சொல்லப் படுகிறது.
துதிக்கையின் நுனியில் ஏந்தப்பட்டுள்ள ரத்ன கலசம அம்ருதம் நிறைந்தது. அந்த அமுதம் ஞானமயமானது. ஜீவர்கள் தங்களது சிவபாவத்தை அறியும் படி செய்வது ஞானமாகும். இந்த ஞானம் விருத்தி ஞானமாம். இதையே சித்சக்தி என்றும் கூறுவர். இந்த விருத்தி ஞானம் விளங்கப்பெற்ற அந்தக்கரணம் ரத்னகலசம்; வ்ருத்தி ஞானம் ரத்னகலசத்துள் உள்ள அமுதமாம், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம், ப்ரபஞ்சத்துள் உள்ள நியாமக சக்தி, சித்சக்தி எல்லாமே கடவுளை ஆசிரயித்து இருப்பவைகள் தாம் என்ற உண்மை அறிய கிடைக்கிறது. வல்லபாசக்தி கடவுளிடம் இயல்பாக உள்ள கடவுண்மையை காட்டுகிறது. ஜீவன் அனாதி அவித்யையினால் மயங்கிப் பின்னர் ஞானம் வரப்பெற்று சிவபாவத்தை-கடவுண்மையை-நிறைவேற்றிக் கொள்கிறான். ஆனால் கடவுளிடம் ஜீவபாவம் எப்பொழுதுமே கிடையாது; எப்பொழுதுமே அவரிடம் சிவபாவமான கடவுண்மை இயல்பாக உள்ளது. இதுவே வல்லபா சக்தி தத்துவமாகும். 
மஹாகணபதி உபாசனை: மூலமந்த்ரத்திலுள்ள ப்ரணவம் மஹா கணபதி சுத்தப்ரஹ்ம தத்வம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இதுதான் மஹாகணபதியின் ஸ்வரூபலக்ஷணம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்லௌம் என்ற எழுத்துக்கள் முறையே லக்ஷ்மி-நாராயண, கௌரீ-கிரீச, ரதி-மன்மத, பூமிதேவி-வராஹ மூர்த்திகளின் தத்துவங்களை விளக்கு கின்றன. கம் என்ற எழுத்து கணபதியின் தடஸ்த லக்ஷணத்தைக் காட்டுகிறது. அதாவது ஆத்ம தத்துவமாம் சுத்த ப்ரம்மத்தை உபாஸ்ய மூர்த்தியாக வழிபடப்படுகையில் உபாஸகர் களால் கொள்ளபடும் பொழுது உள்ள கடவுள் வடிவம் தடஸ்த லக்ஷண முடையது என்று கூறப் படுகிறது. கணபதியின் மந்தரத்தில் உள்ள கணபதயே என்ற சொல் (நம:) என்ற சொல்லைத் தொக்கி நிற்கும் நிலையில் பெற்ற தாய், கணபதிக்கு வணக்கம் என்று பொருள் படுகிறது. வர-வரத என்ற இரண்டு சொற்கள் கணபதியை நோக்கி விளி வேற்றுமையில் அமைந்துள்ளன.
வர=மேம்பட்டவனே! வர-த=அன்பர்கள் விரும்பியவற்றை எல்லாம் அருள் பாலிக்கிறார் என்று பொருளுணர்ந்து கொள்க. ஸர்வ-ஜனம்= எல்லா ஜனங்களையும் (உயிர்கள் அனைத்தையும்), மே=எனக்கு, வசம் ஆனய=வசப்படுத்துவாயாக, என்று பொருள் அறிக. பன்னாயிரக் கணக்கான ஜனங்கள் அடங்கிய பெருங்கூட்டத்தையும் ஸம்மோ ஹனம் அடையும் படி (Mass hypnotisation) செய்யக்கூடிய ஆற்றல் மஹா கணபதி மந்திரத்திற்கு உண்டு.
இனி மஹாகணபதியின் சக்ரவடிவத்தைக் காண்போம். மஹா கணபதியின் சக்கரம் ஐந்து ஆவரணங்கள் உடையதாக இருக்கிறது. சக்ரத்தின் நடுவில் பிந்து ஸ்தாணத்தில் மஹாகணபதியைப் பூஜை செய்ய வேண்டும். சுற்றிலுமுள்ள கோணங்களிலும், தளங்களிலும், பூபுரத்திலும் பல ஆவரண தேவதைகள் பூஜை செய்யப்படுகின்றனர். முறைப்படி சக்ர பூஜை செய்யும் உபாஸகனுக்கு அவன் விரும்பிய செல்வங்கள் எல்லாம் எளிதில் கிட்டுகின்றன.
ஸ்ரீவித்யா உபாஸனாமார்க்கத்தில் வெகு வெகு முக்கியமான ஸ்ரீசக்ர பூஜை செய்வதற்குத் தகுதியையும் மஹாகணபதி பஞ்சாவரண சக்ர பூஜை விளைவிக்கிறது. சக்ரங்களெல்லாம் கோடுகளாலான வெறும் சித்திரம் என்று கருதுதல் கூடாது. அவைகள் தேவதைகளுடைய ஆலயங்களாக உள்ளதால் தாம்ரத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ, தங்கத் தகட்டிலோ, பஞ்சலோகத் தகட்டிலோ வரைத்து பூஜை செய்வது ஸம்ப்ரதாயமாகும். ஸ்படிகம், மரகதம், மாணிக்கம், இந்த்ரநீலம் ஆகிய ரத்னங்களில் பொறிக்கப்பட்ட சக்ரத்தைப் பூஜை செய்பவனுக்கு விசேஷ பலன்களை அளிக்கின்றன. ஸ்படிகம் முதலான ரத்னங்களில் பொறிக்கபட்ட சக்ரம் ஒரு முறை பிரதிஷ்டை செய்யப்பட்டால் திரும்ப வும் பிரதிஷ்டை என்ற கிரியை இன்றி பல தலைமுறைகளுக்கு பூஜை செய்யக் கூடிய பெருமையுடையவைகளாம்.
சக்ரம் = யந்திரம்
உபாஸிக்கப்படும் மூர்த்தியையும் கர,சரணாதி அவயவங்களோடு கூடிய திருமேனி அழகுடையதாக-மேற்கூறிய உலோகங்களிலும், ரத்னங்களிலும் சிற்ப நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்து, முறைப்படி பிரதிஷ்டை முதலானதெல்லாம் முடித்துப் பூஜை செய்வதும் பெரும் பயனை அளிக்கும். விசேஷமாக மஹாகணபதியின் மூர்த்தத்தில் அந்தந்த அங்கங்களில் சதுராவ்ருத்தி தர்ப்பணம் செய்வதால் அந்தந்த சிறந்த பலன்களை அடையலாகும். பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியோ, சக்ரமோ வெறும் உலோகமாகவோ, வெறும் கல்லாகவோ கருதத் தக்கதல்ல. சைதன்யமுடைய பகவானது மூர்த்தியாகவே அர்ச்சா-மூர்த்தியோ, சக்ரமோ ஆகிவிடுறது. ஆகவே ஒரு பெரிய சக்ரவர்த்தியின் முன்னர் பணியாள் ஒருவனுக்கு இருக்க வேண்டிய அடக்கமுடமையுடன், தேவதா மூர்த்தியினிடத்தும், சக்ரத்தி னிடத்தும் பழகுதல் வேண்டும். மூர்த்தியும், சக்ரமும் போலவே, மந்த்ரமும் சைதன்யமுடையதுதான். மந்த்ரத்தில் இயல்பாகவே மறைந்து கிடக்கும் சைதன்யத்தை உபாஸகன் தன் வழிபாட்டு முயற்சியால் தன்னிடம் வெளிப்பாடு அடையும்படி தீவிர முயற்சி யுடையவனாக இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *